மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: இந்தியா-இலங்கை ஒப்புதல்

fishermen_bort_001தமிழக மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலர் ரேணு பல் கூறியதாவது:

மீனவர் பிரச்னை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னையில் இருக்கும் சிக்கல்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

முடிவில், மீனவர் பிரச்னைக்கு புதிய மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழியை இருநாடுகளும் கண்டறிவதென முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் அழைப்பை ஏற்று, மீனவர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று அவர் கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகி வருகின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களிடம் இருந்து படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது.

-http://www.dinamani.com

TAGS: