சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது: மனோகர் பாரிக்கர் பேட்டி

siachenகடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலை பகுதியில் கடந்த வாரம் தமிழ்நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 10 பேர் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை. உடல்களை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பின் இடையே ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சியாச்சினில் 10 வீரர்கள் உயிரிழந்தது குறித்து நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். அவற்றுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:–

சியாச்சின் பகுதியில் படை வீரர்களை அமர்த்தி இருப்பது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முடிவின் அடிப்படையிலானது. யாராவது அங்கு செல்ல விரும்பினால், விரோதமான சூழ்நிலையிலும், அங்கு படைகளை ஏன் அமர்த்தி இருக்கிறோம், அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் அங்கு சென்றால், அதை புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன். ங்கு ஒரு இழப்பு நேரிட்டால், அதிலும் குறிப்பாக வீரர்களை நாட்டுக்காக இழக்க நேரிட்டால் நான் மிகவும் வேதனை அடைகிறேன். இப்போது அங்கு நடந்துள்ள சம்பவம், எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தருவதாகும்.

சியாச்சின் பகுதியை நமது கட்டுப்பாட்டில் தொடர்வதற்காக ஆயிரக்கணக்கான வீரர்களை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் வசதிகள் சற்று பெருகியுள்ளதால் சமீப ஆண்டுகளாக அங்கு உயிர்ப்பலி குறைந்திருக்கிறது. உயிர்ப்பலிகளுக்காக நாம் அங்கிருந்து படைகளை விலக்கி விட முடியுமா? அங்கிருந்து படைகளை வாபஸ் பெற முடியாது. இவ்வாறு கூறினார்.

-http://www.nakkheeran.in

TAGS: