சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்: பெங்களூரில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

leopard_alert_001கர்நாடக மாநிலம், பெங்களூரில் சிறுத்தை நடமாட்டத்திற்கு பயந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை அடுத்த மரதாஹல்லி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆண் சிறுத்தை புகுந்தது.

இதனையடுத்து நேற்று அதே பள்ளி அருகே இரண்டு சிறுத்தைகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளின் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அச்சம் காரணமாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்ட போது 4 வனத்துறையினர் காயம் அடைந்தனர்.

பள்ளிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பு எல்லைச் சுவரை தாண்டி சிறுத்தை வெளியே வந்திருக்கலாம் என்று கர்நாடக மாநில தலைமை வனவிலங்கு அதிகாரி ரவி ரால்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய புள்ளி விவரங்களின் படி சுமார் 12 முதல் 14 ஆயிரம் சிறுத்தைகள் நாடு முழுவதும் உள்ள வனப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: