ஐந்தில் நான்கு இந்தியர்கள்… காரணமே தெரியாமல் மரணத்தைத் தழுவுகிறார்களாம்!

heartடெல்லி: இந்தியாவில் மரணிக்கும் 5ல் 4 பேர் எந்த காரணத்தினால் இறக்கிறார்கள் என்று மருத்துவர்களுக்கே தெரியாமல் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஒருவர் என்ன காரணத்தினால் மரணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது மருத்துவர்களுக்கு மிகவும் முக்கியம். காரணம் தெரிந்தால் தான் அந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க முடியும், அதை பரவாமல் தடுக்கவும் முடியும். மேலும் நோயை கண்டறியும் முறையையும் மேம்படுத்த முடியும். கடந்த 2013ம் ஆண்டில் மரணம் அடைந்தவர்களில் 9.29 பேரின் விபரங்கள், காரணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 38 சதவீதம் பேர் பெண்கள். இறந்தவர்களில் 20 சதவீத பேருக்கு மட்டுமே மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டில் பெரும்பாலானோர் ரத்த ஓட்ட பிரச்சனை, இதய நோய் உள்ளிட்டவற்றால் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் மரணிக்கும் 5ல் 4 பேர் எந்த காரணத்தினால் இறக்கிறார்கள் என்று மருத்துவர்களுக்கே தெரியாமல் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சுவாசப் பிரச்சனை, புற்றுநோயால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதே சமயம் நோய் தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் உள்ளவர்கள் எளிதில் பரவாத நோயான மாரடைப்பு மற்றும் புற்றுநோயால் பலியாகும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. காயம், விஷம் மற்றும் பிற காரணங்களால் பலியாகுபவர்கள் 25 முதல் 34 வயது வரை உள்ளவர்களாக உள்ளனர்.

2004-2006 வரையிலான காலகட்டத்தில் இறந்தவர்களில் 60 சதவீதம் ஆண்கள் மற்றும் 18.5 சதவீதம் பெண்கள் புகையிலை மென்றுள்ளனர் அல்லது புகைப்பிடித்துள்ளனர். இந்த அளவு 2010-2013ம் ஆண்டில் 50 மற்றும் 10.6 சதவீதமாக குறைந்துள்ளது. புகையிலை, மது, அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மரணிக்கும் சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளது.

2008ம் ஆண்டில் 22.8 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2013ம் ஆண்டில் 21.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்நிலையில் கேரளாவிலும், மேற்கு வங்க மாநிலத்திலும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: