செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி: இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

Isro-logoசெவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்கு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் நாசா அமைப்பு விஞ்ஞானி ஜேக்கப் வேன் ஜைல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செவ்வாய்க்கிரகத்துக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதைச் செய்ய வேண்டுமானால், இயந்திரவியல் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வாஷிங்டனில் அடுத்த மாதம் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இத்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.

ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்கள் செலுத்த இலக்கு:

இதனிடையே, மும்பையில் இஸ்ரோ செயலாளர் (அறிவியல் துறை) கிருஷ்ணமூர்த்தி பிடிஐ செய்தியாளரிடம் பேசியபோது, ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு இஸ்ரோ இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் 55 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்கள் அனுப்புவதன் மூலம் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஏற்கெனவே 2 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு விட்டன. அடுத்த மாதம் மேலும் 2 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட இருக்கின்றன என்றார்.

-http://www.dinamani.com

TAGS: