ஏகப்பட்டவர்களுக்கு,வயிற்றில் புளியை கரைக்கும் சம்பவம் ஒன்று சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது,கடலூரில் இன்று. எவ்வளவு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவை ? 234 வேட்பாளர் அறிமுகவிழா. இதற்க்கு தமிழன் என்கின்ற உணர்வும், ஒற்றுமையும்,இருந்தால் மட்டும் போதாது. நான் தமிழன் என்கிற திமிரும் கொஞ்சம் இருந்தால்தான்….இப்படி ஓர் தேதர்தலில் தனித்து போட்டியிட்டு வெல்வோம் என்று உறுதிபட கூறலாம். தம்பி “சீமானுக்கு” இருக்கும் தன்னம்பிக்கையே அவரை ஆட்சியில் அமரச்செய்யும். தன்மீது தனக்கிருக்கும் நம்பிக்கையே !ஆளுமையின் உச்சம்.
“முயற்சி எனும் ஏணிகொண்டு ,முழுமையான யுக்திகொண்டு எண்ணிப் பறிக்க நினைத்தால்
எட்டாப் பழமென்று எதுவுமில்லை..! இலைகளை உதிர்த்த மரம் கூட நிமிர்ந்து நிற்கிறது — நாளை வசந்தகாலம் வரும் என்ற நம்பிக்கையோடு !
ஆனால் மனிதா நீ மட்டும் ஏன் சோர்ந்து போகிறாய் ! துணிவுடன் களமிறங்கு !
வெற்றி உன் காலடி ! நல்லதோர் ஆட்சி நாளை மலரும் ! ”
நேரடியாக வேட்பாளர் அறிமுகவிழா காணவில்லை என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் அதனையும் முகநூல் நண்பர்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அகற்றிவிட்டார்கள்.
அனைத்து திராவிடக் கட்சிகளும் குலைநடுங்கிப் போயுள்ளனர், அதனால்தான்….அனைத்து தொலைக்காட்சிகளையும் விலைகொடுத்து தடுத்துள்ளார்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை அறியாதவர்கள்.
–தனி தமிழர் நாடு/www.facebook.com
siveji…அந்த ஊழல் பெருச்சாளிகள் ஊழல்கள் என்னெவென்று இங்கு சொன்னால் அனைவருக்கும் தெரியும் . தயவு செய்து சொல்லுங்கள் …
தமிழ் நாட்டை தமிழன்தானே ஆழ வேண்டும் உண்மைதான் சரிதான். தமிழனுக்கு இருக்கும் சாதியை தள்ளி வைத்து விட்டு முதலில் இவர்கள் கூட்டமைத்து ஒன்றாக இறங்கி வேலைசெய்ய வேண்டியதுதானே.அதைவிடுத்து தனித்தனியே சென்று மக்களை சந்திப்பது ஒன்றும் ஆகப்போவது இல்லை…
https://www.youtube.com/watch?v=z3u5byingiU
தமிழன்தான் தமிழ் மண்ணை ஆள வேண்டும்னு நாமே நினைத்தா முதலில் நமக்குள்ள சண்டை போடறதே நிறுத்திட்டு ஒற்றுமையா ஒன்னு கூடுங்க.நாமே ஒற்றுமையா இல்லாத காரணத்தினாலே மற்றவனுங்க இடையிலே புகுந்து கும்மி அடிக்கரானுங்க! எனக்காக வேண்டாம் உங்களுக்காக வேண்டாம் நம்மே இனத்துக்காக நாமே ஒற்றுமையா இருக்கத்தான் வேண்டும்! இனி இந்த பக்கத்திலே சண்டை போடறத நிறுத்துங்க!!!
சூத்திர வடுக ஈன அரசியல் ..
https://www.facebook.com/dyfipravin.kumar/videos/971475882927882/
Tun.குருவி , இதைதான் நான் தொண்டை கிழிய சொல்லிகொண்டிருகேன் ……..ஏறமாண்டிங்குதே என்ன செய்வது ?????
ஒற்றுமையே பலம் , இதை ஏன் ஏற்க்க மறுக்கிறார்கள் ? ஆழ்வது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும் ,இதுதான் நமக்கு வேண்டும் .
சாமீ வேலு ஒரு தமிழன். அவர் செய்த துரோகம் எத்தனை தமிழர்களின் வாழ்வை சீர்குலைத்தது தெரியுமா ? ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே இன்று நான்காம் நிலைக்கு தள்ளி விட்டு விட்டது… எனவே தமிழன் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் ஏமாறுவது நமது மரபு …..
ம்ம்ம்.. தமிழனுக்கு ஒற்றுமை தேவை. அவசியமும் கூட. நல்லவர் ஆட்சியில் நாடும் இனமும் முன்னேற வேண்டும். தமிழ் நாட்டை பொறுத்த வரை இலவசம் மற்றும் மது இரண்டையும் வைத்தே ஒட்டு போடுகின்றனர் .தமிழ்நாட்டில் அறிவுடன் சிந்தித்து வாக்கு அளிக்கும் மக்கள் உருவாகும் வரை விடியல் என்பது அங்கு இல்லை. அறனும் ஹரியும் ரத்சிப்பாராக ..
தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆழ வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை சீமான் மீதும் நம்பிக்கை உள்ளது ஆனால்,அவர் மேடைகளில் பேசும்போது வன்மம்மான வார்த்தைகளை தவிர்ப்பது நலம் பதவி வரும்போது பணிவு வரவேண்டும்” வெட்டும் அரிவாளை வீசிக் காட்டக்கூடாது”
முப்பாட்டன்கள் வணங்கிய பரம் பொருளை இகலும் சீமான் பாட்டன் வணங்கும் முருகன் மேல் பாமாலை பாடுவது விநோதமாக இருக்கிறது இவரது ஈழ புலித் தலை கொடியில் ஓம் எனும் பிரணவம் வேறு இப்படி பலவாறு இணையத்தளத்தில் ஓட்டுக்காக சீமான் நடிக்கின்றார் என்று பரவலாகப்பேசப் படுகின்றது எது எப்படியோ கோழியை வசைப் பாடி முட்டையை புகழ்ப்பாடுவது ஏற்புடையது அல்ல ?
அப்படினா கொழிக்கும் முட்டைக்கும் சம்பந்தம் இருக்கா meena lozeni ?
அப்படினா முட்டைக்கும் கொழிக்கும் சம்பந்தம் இருக்கா meena lozeni ?
meena lozeni .தமிழ் கடவுள் முருகன் எங்கள் முப்பாட்டன் என்பது நாங்கள் அறிவோம். அது யார் முப்பாட்டன் வணங்கிய பரம் பொருள் ? கொஞ்சம் விளக்க முடியுமா ?
தமிழன் கோ .முருகன் அவர்களே, meena lozeni அவர்கள் எதை விளக்க முயல்கிறார் என்றால்: சீமான் அவர்கள் விடுதலை புலிகளின்பால் தொடர்புடையவர் என்பதாலும், இந்து மத கடவுள் நம்பிக்கை இல்லாதவருமாக தன்னை காட்டி விட்டு, தீடீர் என்று கடவுள் நம்பிக்கை நிறைந்த சமுகத்தில், சமுக கடவுளான முருகனை “உங்களுக்கு கடவுள் ஆனால் எங்களுக்கு எம் பட்டன்” என்பது, தேவையிலாத விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. இதைதான் meena lozeni அவர்கள் முறுக்கு பிழிந்திருக்கிறார். நீங்கள் அதை உடைத்தும் சாப்பிடலாம் அல்லது அப்படியேயும் சாப்பிடலாம் அல்லது டி உடனும் சாப்பிடலாம் …..மதிய வேலை ஒரே பசி …. அதனாலதான் ….
ஆதியும் ,அந்தமும் இல்லா பரம் பொருள் சிவபெருமானையே இங்கு அடியேன் குறிப்பிட்ட முப்பாட்டன் வணங்கிய கடவுள் அச்சிவனை சீமான்சில வேளைகளில் விமர்சிப்பதையும் சிவனார் மகனான முருகக் கடவுளை என் பாட்டன் வணங்கும் தெய்வம் எனப் புகழ்ப் பாடுவதையும்த்தான் அடியேன் இங்கு குறிப்பிட்டேன் .ஆமாம் ,அதில் உங்களுக்கு என்னப் பிரச்சனை ?
மிக்க நன்றி meena lozeni ….தொல்காப்பியம்,சிவபுராணம் இதில் எது முதலில் எழுத்த பட்டது என்று கூற முடியுமா?
“மிக்க நன்றி meena lozeni ….தொல்காப்பியம்,சிவபுராணம் இதில் எது முதலில் எழுத்த பட்டது என்று கூற முடியுமா? ” என்று இடி எழுதி உள்ளீர். சொல்லிவிட்டால் உலகை மாற்றிவிடுவீர்களா இடி அவர்களே ?
உலகை மற்ற முடியாது! ஆனா உன்னை சரியா இடிக்கலாம்….இது தமிழர்கள் கருத்து பரிமாற்றம் உனக்கென்னடா வேலை இங்கே?
இந்நாட்டில் வாழும் தென் இண்டியன்கள் அவர்தம் தாய்மொழி வாரியாக தங்களைப் பிரித்துப் பார்க்க துவங்கியது தெலுங்கு சங்கம் என்றும் மலையாளி சங்கம் என்றும் தத்தம் மக்களை மொழி வாரியாக பிரித்து அதனை பிரீது படுத்தத் துவங்கியதில் இருந்து ஆரம்பமானது. 2008-ம் ஆண்டில் தே.மு. கட்சிக்கு ஹின்றாப்ட் அரசியல் பாடம் கற்பித்தது. அதிலிருந்து நல்ல அரசியல் பாடம் கற்றுக் கொண்ட நன்கொடை நாயகனின் கட்சி போட்ட திட்டம், இந்த தென் இண்டியன்களை பிரித்தால் எதிரணிக்கு இண்டியன்களின் ஓட்டு ஒட்டு மொத்தமாகப் போவதைத் தவிர்க்கலாம் என்றெண்ணி தெலுங்கர், மலையாளி தமிழர் என்று இண்டியன்களைத் தனித் தனியாகப் பிரித்து அரசாங்க மானியங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. அப்பொழுது இந்நாட்டு இண்டியன்களைப் பிரித்து மகிழ்ச்சியடைய ஆரம்பித்தது இண்டியன் அல்லாத மலாய்க்கார அரசியல் கட்சி! அதுவரையில் ஆளுங்கட்சி வெற்றியடைந்தார்கள். இந்நாட்டு தெலுங்கு மற்றும் மலையாளி வம்சாவழி மக்களும் வெற்றிக் களிப்பில் இருந்தார்கள். தென் இண்டியன்கள் பிரிந்ததால் அவர்களுக்கு தனித்தனி அரசாங்க மானியம் என்றும் சலுகைகள் என்றும் தேட ஆரம்பித்தனர். நாம் தமிழர் எப்படி போனால் அவர்களுக்கு என்ன? அவர்களுக்குக் கிடைத்த வரை இலாபம் என்றெண்ணி இருந்தார்கள். ஆனால் இவர்களின் ‘நல்லெண்ண’மானது பிள்ளையாரைப்பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்த கதையாகி விட்டது! இன்றோ, தமிழ் நாட்டில் ஏற்பட்டக் கருத்து மாற்றத்தின் அடிப்படையில் தமிழர் தேசியம் என்ற எண்ணம் முளைத்தது. நாம் தமிழர் என்று தமிழர் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். இங்கே அவர்கள் மதத்தை முன் வைக்கவில்லை ஆனால் தாய்மொழிப் பற்றை முன் வைத்தனர். அதனால் தமிழர் என்பார் முஸ்லிம் என்றோ கிறிஸ்துவர் என்றோ மதப்பாகுபாடு பாராமல் தாய்மொழிப் பற்றால் தமிழராக ஒன்றிணையத் துவங்கினர். பொறுக்குமா தமிழரல்லாதோருக்கு? அதனால் மீண்டும் சிந்திக்கத் துவங்கினார்கள் ஹிந்துத்துவா நண்பர்கள். இதற்கு முன்னோடியாக இருப்பது உலக இந்து மன்றம். அதற்குப் பின்புலமாக இருப்பது ‘இந்து விஸ்வ பரிஷாத்’!. இப்பொழுது இவர்கள் முன்னெடுப்பது நாம் தமிழர் என்று பார்க்க வேண்டாம். நாம் அனைவரும் “இந்து” என்றே பார்ப்போம்! நமக்குள் ஒற்றுமை வேண்டும். வேற்றுமை வேண்டாம் என்பது இவர்கள் முன் வைக்கும் தாரக மந்திரம்! பிரிந்து சென்று சுகத்தை அனுபவிக்கும் போது தென் இண்டியன்கள் ஒற்றுமையைப் பற்றிக் கவலை இல்லை. தமிழர் மதம் பாராட்டாமல் இணைந்தால் அதுவே தமக்குப் பாதகம் என்றெண்ணி மீண்டும் ஒற்றுமை பாராயணம் செய்வதற்கு கிடைத்த மந்திரம் “இந்து ஒற்றுமை” என்பதா? இதன் அடிப்படையில்தான் இன்று மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய இந்து இளைஞர் சங்கம், உலக ஹிந்து இளைஞர் மன்றம் என்று இன்னும் பலவும் சேர்ந்து ‘மலேசிய இந்து இளைஞர்கள் ஒற்றுமை பேரணி’ ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனராம்! ஏன் இதற்கு “இந்து” சாயம் பூச வேண்டும்? ஏன் “மலேசிய இண்டியன் இளைஞர் ஒற்றுமை பேரணி” என்று செய்தால் ஆகாதா? அப்பொழுது இந்து அல்லாத மற்ற மத இண்டியன்களும் கலந்து ஒற்றுமையை மேலும் வலுபடுத்தாலமே! ஒற்றுமை என்று சொல்லி விட்டு அதில் மதம் மாறிய தமிழரையும், மலையாளிகளையும், தெலுங்கு வம்சாவழி மக்களையும் ஒதுக்குவது ஏன்?. இது ஒற்றுமை வளர்க்கும் திட்டமா? அல்லது நாம் தமிழரின் வளர்ச்சியைப் பரிதவிக்க வைக்கும் திட்டமா? நல்ல திருட்டாட்டத் திட்டமையா உங்கள் ஒற்றுமைத் திட்டம்! இதற்குப் பின்னணியில் மூளையாக இருப்பது ‘உலக இந்து இளைஞர் மன்றம்’. யார் இவர்? மலேசியா வாழ் இண்டியன்களை மத வாரியாகப் பிரித்து ஒற்றுமை வளர்ப்பதில் இந்த உலக இந்து மன்றத்திற்கு ஏன் இவ்வளவு அக்கறை? இதில் தென் இண்டியன்களை கூரு பிரிப்பதற்கு தடம் போட்டுக் கொடுத்த நன்கொடை நாயகனும் பங்கேற்கவிருக்கின்றார் என்பது இன்னும் ஆச்சரியமான திட்டம்! இந்நாட்டு தென் இண்டியன்களை மொழி அடிப்படையில் கூரு போட்டாகி விட்டது. இப்பொழுது மத அடிப்படையில் மேலும் பல கூரு போட வேண்டும். அதற்கு உறுதுனையாக இருக்கப் போவது நன்கொடை நாயகன்! இதுதான் உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்பது. நல்ல ஒற்றுமை. நாங்கள் பார்க்காத ஒற்றுமை.
நான் தமிழன். என்னை வேற்றுகிரகவாசிபோல் சித்தரித்து விட்டால், இடி அமின் அவர்களே, நீங்கள் தொல்காப்பியம் சிவபுராணதிற்கு முன் வந்தது என்று நிருபித்து விடுவீர்களா? என்னை வாட போடா என்று அழைத்து விடுவதால், உங்களை அறிவு ஜீவி என்று வகை படுத்தி கொள்ள முடியும் என்றால், எனக்கு பெருமைதான். அப்படியாவது உங்களை மற்றவர்கல் புத்திசாலி, அறிவு ஜீவி என்று போட்ரட்டும். வாழ்த்துக்கள். என்னை முட்டால் என்றே வகை படுத்துங்கள். பொதுவான கருத்து: மலேசியாவில் தமிழர்களையும், இந்தியர்களையும் பிரதிநிதித்து 63 இயக்கங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் கருத்தால் மாறுபட்டு இருக்கிறார்கள்; எனவே வெவ்வேறு இயங்கங்கள்; வெவ்வேறு கொள்கைகள். இதே போன்று சீனர்களில் ஹொக்கெயென், மேண்டரின், கந்தோநிஸ் என்று மொழி வாரியாக மலேசியாவில் உள்ளார்கள். அவர்கள் என்றாவது தங்களின் மொழியை கொண்டு, அடுத்த சீனர்கள் மீது பழி போட்டு, ஒரு சாராரை காபதுகிறேன் பேர்விழி என்று அரசியல் செய்கிறார்களா ? எல்லாம் தமிழரை காப்பதுகிறேன் பேர்விழி என்று அவர்களின் தப்பான கருத்துக்களை உள்ளே புகுத்துகிறார்கள்…. பாவம் தமிழர்கள் …கள்ளுக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கிறார்கள். ஆனால் மா இ கா போன்ற விசத்தை உடனே கண்டு கொள்ளலாம்….
திலிப் மற்றும் தேனீ அருமையாகச் பகன்ரீர் . இதை மறவரும் புரிந்து கொள்வாராக .
தம்பி சீமானுக்கு கொண்டாட்டம் தான் ,,இனி பெண்களோடு உல்லாசமாக இருப்பார் ,,தமிழர்களை வைத்து பொழப்பு நடத்தும் இந்த சீமானுக்கு வேற வேலை என்ன தெரியும் ??? தமிழ் ஈழ பெண்ணை மணப்பெண் என்று சொன்ன சீமான் ,,ஏன் தமிழ் ஈழப் பெண்ணை கரம் பிடிக்க வில்லை ?? இவனை நம்பி தமிழ் நாட்டை ஒப்படைத்தால் ஊதான் ,,அதற்க்கு பாளை பிசாசே தேவலாம் .
தேனீ நம் பிள்ளைகளை இந்தமாதிரி அமைப்புகளிலிருந்து ஒதுங்கி நம் சைவ சமயத்தின்பால் ஈர்க்கவேண்டும் ..
அன்னியர்கள் தங்கள் என்னிக்கையைவிடவும் அதிகமான சங்கங்கள் அமைப்புக்களை தலைமை ஏற்று நடத்துகிறார்கள் ..
இந்தமாதம் 26/27 தேதிகளில் உலக சைவ சமய மாநாடு இபோவில் நடைபெறும் என்று அறிகிறேன் …அன்பர் தேனீ அவர்கள் இந்தமாநாடு சம்பந்தமாக மேலும் விளக்கங்களை பதிவுசெய்யுங்கள்
சரி! அப்ப உன்னை நம்பி தமிழ் நாட்டை ஒப்படைக்கலாமா? கொஞ்சம் சிந்திச்சு எழுது! முதலில் வந்தேறிகள் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.இங்கே இன்னொரு பச்சோந்தி நான் தமிழன்..நான் தமிழன்னு அடிக்கிற தம்பட்டம் தாங்க முடியலே.அது பெயரையே தமிழில் எழுதவே யோசிக்குது!!!
ஹஹஹ … இடி அமின் அவர்களே …. நீங்கள் யாரையோ குறிப்பிடுவது போல் என்னை சீண்ட பார்கிறீர்கள் …. ஹஹஹ … நஜிப் ஆட்சி முடியும் பொழுது நான் ஏன் என் பெயரை மறைத்து எழுதுகிறேன் என்று விளக்குகிறேன்….அப்படியே நான் யார் என்பதையும், என் நிஜப்பெயரையும் தெரிவிக்கிறேன் … அன்று உங்கள் முகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் ….