உலக அளவில் ஸ்மார்ட்போன் வணிகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்த பிரீடம் 251 ஸ்மார்ட்போன் சாத்தியமா அல்லது வியாபார தந்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா ஒட்டுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போன் முன்பதிவுக்காக, தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே,
அதன் இணையதளம் செயலிழந்து ஸ்தம்பித்துள்ளது, மட்டுமல்ல நொய்டாவில் அமைந்திருக்கும் அதன் அலுவலகத்திலும் ஏராளமான கூட்ட நெரிசல்.
ஆனால், இதுபோன்று புதிதாய் துவங்கப்பட்டு சர்ச்சையை உருவாக்கும் முதல் நிறுவனம் இதுவல்ல,
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட worldflot எனும் சமூகவலைதளம் 6 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளதாகவும் அதன் மதிப்பு 300 மில்லியன் டொலர் எனவும் அறிவித்திருந்தது.
பிரீடம் 251 இணையதளமானது செயலிழக்கும் முன்னர் அந்த நிறுவனம் 30,000 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது.
ஒரு ஸ்மார்ட்போனுக்கான விலை ரூ.251 எனவும் இதர கட்டணமாக ரூ.40 என மொத்தம் அந்த நிறுவனம் ரூ.8,730,000 வருவாய் ஈட்டியிருந்தது.
இந்த நிலையில் தொழில்துறை வல்லுனர்கள் பலர் உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போன் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிளின் ஐகானை பயன்படுத்திருக்கும் பிரீடம் 251 நிறுவனத்தினர், ஐகான்களுக்கு ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்யவில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும், இந்த நிறுவனமானது வங்கிக்கடனை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்படும் என தெரிவித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போன் தயாரிக்க வேண்டுமெனில் ரூ.3,800 வரை செலவாகும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த நிறுவனமானது அரசிடம் இருந்து அல்லது மூன்றாவது நபரிடம் இருந்தோ எந்த தொகையும் மானியமாக பெறவில்லை என கூறிப்பிடுகின்றது.
-http://www.newindianews.com


























