பாகிஸ்தானை நம்ப முடியாது; சியாச்சினில் ராணுவம் வாபஸ் கிடையாது: பாரிக்கர்

siachen

புதுடில்லி: சியாச்சினிலிருந்து ராணுவம் வாபஸ் பெறாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானை நம்ப முடியாது, நாம் வெளியேறிய பின்னர் ஆக்கிரமித்து விடும் என கூறினார்.

கடந்த பிப்ரவரி 3ம் தேதி சியாச்சினில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் பலியானார்கள். இதனையடுத்து அங்கிருந்து ராணுவத்தை இந்தியா வாபஸ் பெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது கூறியதாவது: சியாச்சின் பனிமலையில் நாம் காலி செய்தால் எதிரிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள். இதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படும். கடந்த 1984 முதல் இதனை நாம் எதிர்பார்த்து வருகிறோம். ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நிலையை நாம் தொடர்ந்து கிடைபிடிக்க வேண்டும். பாகிஸ்தான் தனது உறுதியை காப்பாற்றும் என யாரும் நம்பவில்லை என கூறினார்.

மேலும் அவர், சியாச்சினில் கடந்த 32 வருடங்களில் 915 பேர் பலியாகியுள்ளனர். வருடம்தோறும் 28 பேர் பலியாகி வரும் நிலையில், தற்போது 10 பேர் குறைக்கப்பட்டுள்ளனர். சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மருத்துவ சிகிகிச்சை போல், 6 முறை அதிகமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 வகையான உடைகள் வழங்கப்படுகிறது. பனி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்படுகின்றன. வீரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் எந்த பற்றாக்குறையும் இல்லை எனக்கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: