தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து பிரத்யேகமாக டெல்லியில் இன்று இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தியது. இந்திய வெளியுறவுக்கொள்கை மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் இணை செயலாளர் சந்தோஷ் ஷா இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் கலந்து கொள்வதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல் வாங் யாஜூன் தனது குழுவுடன் டெல்லி வந்திருந்தார்.
வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விஷயங்களை இருநாட்டு அதிகாரிகளும் பரிமாறிக் கொண்டனர். உலகளாவிய தீவிரவாதத்தை எவ்வாறு இருநாடுகளும் இணைந்து எதிர்கொள்வது என்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடந்தது.
-http://www.athirvu.com