உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க., மூத்த தலைவருமான சுப்பிரமணிய சாமி,
’’கேம்ப்ரிட்ஜ் கல்லூரியில் பெயில் ஆகிப்போன ஜவகர்லால் நேருவின் பெயரை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சூட்டியது தவறு. ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸ் ஆன சுபாஷ் சந்திரபோசின் பெயரை அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றி சூட்டவேண்டும்.
கல்லூரி தேர்வுகள் முடிந்த பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தை 4 மாதங்களுக்கு இழுத்து மூட வேண்டும். பின்னர், கழுவித் தூய்மைப்படுத்திய பிறகு தகுதியுள்ள மாணவர்களை மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும். அவர்களில் யாரும் நான்காண்டுகளுக்கு மேலாக மாணவர் விடுதியில் தங்கிருக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே கல்லூரி வளாகத்துக்குள் நுழைய விடவேண்டும்’’என்று கூறியுள்ளார்.
-http://www.nakkheeran.in
இறந்தும் வாழ்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இணையில்லா தலைவன். வாழ்ந்த பொழுதே இறந்தவர் நேரு. அதுவும் அவரின் நோய் வெளியில் சொல்லகூடியதல்ல …..