2016-சட்டசபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

tamilnaduதமிழகத்தில் வரும் மே 16ம் திகதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இன்று டெல்லியில்  தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

தமிழகம் (234 தொகுதிகள்), புதுச்சேரி (30 தொகுதிகள்), கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்), மேற்குவங்கம் (294 தொகுதிகள்) ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் மே 16ம் திகதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 19ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், புதுவையிலும் மே 16ம் திகதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22ம் திகதி தான் முடிவடைகிறது.

தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்களும், புதுச்சேரியில் 9 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக 65 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ம் திகதியும், இரண்டாம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் திகதியும் தேர்தல் நடைபெறும்.

மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவே இரண்டு நாட்கள் நடைபெறும்.

அதாவது ஏப்ரல் 4-லும், ஏப்ரல் 11-ல் வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 52 தொகுதிகளுக்கு 17 ஏப்ரலில் வாக்குப்பதிவு நடைபெறும்.

3-ம் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளுக்கு ஏப்ரல் 21-ம் திகதி நடைபெறும். 4-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 25-ம் திகதி நடைபெறும்.

5-ம் கட்ட வாக்குப்பதிவு 53 தொகுதிகளுக்கு ஏப்ரல் 30-ம் திகதி நடைபெறும். கடைசி மற்றும் 6-ம் கட்ட வாக்குப்பதிவு 25 தொகுதிகளுக்கு மே 5-ம் திகதி நடைபெறும்.

கேரளாவில் ஒரே கட்டமாக 148 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 16-ம் திகதி வாக்குப்பதிவு தேதி நடைபெறும்.

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலாகின்றன.

‘நோட்டா’வுக்கு தனி சின்னம் வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் உடன் நடமாடும், பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

-http://www.newindianews.com

TAGS: