கரண்டு மரத்தில் ஏறி சாவு என கூறிய அதிகாரி: அகதி மின் கம்பியை பிடித்து கருகி சாவு!

agathiமதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை டொயோட்டா ஷொ ரூம் பின்னால் உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த அகதி ரவி என்பவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளான்.

சொல்லாமல் திடீரென வந்தால் அகதிகள் எல்லோரும் எப்படி உள்ளேயே இருக்கமுடியும், மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதம்.அதை ஏற்க வேண்டுமென கேட்டதை அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டுள்ளார். அதற்கு அதிகாரி இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு என கூறினார்.உடனே ரவி பக்கத்திலிருந்த மின்கம்பி மரத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி செத்துள்ளார். உடலை கைப்பற்றி நடந்ததை விபத்து என மறைக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் உடனே அங்கு வர அகதிகள் கதறி வேண்டுகின்றனர்….இது சில நிமிடங்களுக்கு முன் இன்று 6/3/16 நடந்தது….போலீசார் அகதிகள் மீது தடியடி நடத்தி, அதிகாரி ஆர்.ஐ. துரைப்பாண்டியனை சிறைப்பிடித்த மக்களிடம் இருந்து மீட்டு கூட்டிப் போய்விட்டனர்.மீண்டும் கடுமையான தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி, இறந்த ரவியின் உடலை கைப்பற்றி மறைத்துவிட போலீசார் முயற்சி…..

-தனி தமிழர் நாடு_https://www.facebook.com

TAGS: