சேலம்: வாக்குகளை கவருவதற்காக தமிழகத்தில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அதிமுக லஞ்சமாக தர உள்ளதாகவும், அதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது: எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறது.
இளைஞர்கள் வாக்குகளை கவரும் நோக்கத்தில், 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வினியோகிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும்.
தேர்தலில் நடுநிலைமையோடு செயல்படுவார் என்று, சேலம் மாவட்ட ஆட்சியர் மீது நம்பிக்கையில்லை. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் தமிழக தேர்தல் களத்தில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இது பாமகவுக்கு பலன் தரும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தேர்தல் வருவதற்கு முன்னர் இப்படியும் ஓர் இலவசம் வரலாம்: ஒரு நாளைக்கு – ஒரே ஒரு நாளைக்கு – காலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை சாராயக்கடைகளில் இலவச சாராயம் கொடுக்கப்படும்!