சாதி மாறி காதல் திருமணம் செய்த நபர் வெட்டிக் கொலை! நடுரோட்டில் பயங்கரம்

udumalai_murder_001திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாற்று சாதியில் காதல் திருமணம் செய்தவரை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சங்கர். பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் உடுமலை சந்தையில் பொருட்கள் வாங்க வந்த சங்கரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அங்கிருந்து தப்பிய கணவன் மனைவியை அந்த கும்பல் துரத்தி துரத்தி வெட்டியதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. படுகாயமடைந்த தம்பதியினரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டுவரும் வழியில் சங்கர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண்ணின் உறவினர்களே இந்த கொலையை செய்திருக்க கூடும் என தெரிவித்துள்ள பொலிசார், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: