இந்த தேர்தல் அரசியல் பலவித அனுபவங்களை கற்றுத்தருகிறது.
60 ஆண்டு கால திராவிட அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டு அரசியலை எளிய மக்கள் அணுகுமுடியாத அளவிற்கு ஆடம்பரமானதாகவும், பொருளாதார வலிமை சார்ந்ததாகவும், சாதீயம் சார்ந்ததாகவும் மாற்றி வைக்கிறார்கள்.
ஒரு தேசிய இனத்தையே பிச்சைக்காரர்களாக மாற்றி, குடிநோயாளிகளையும், எப்போது யார் பணம் கொடுப்பார்கள், இலவசம் அளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு கொண்டவர்களாக தமிழர்களை கருணாநிதியும்,ஜெயலலிதாவும் மாற்றி வைத்து இருக்கிறார்கள்.
வர்ணாசிரம அடுக்குகளை அழிக்க தோன்றியதாக பீற்றிக் கொள்ளும் திராவிட அரசியல் கட்சிகள் தான் ஒவ்வொரு சிற்றூரிலும் சாதீய அடுக்குகளை பாதுகாக்கிற மிகப்பெரிய பணியை மிக நுட்பமாக செய்து வருகின்றன. ஒவ்வொருவனுக்கும் தன் சாதி சார்ந்த பெருமிதம் இருக்கிறது. சாதி தருகிற கூட்டமும், வலிமையும் தேவையாய் இருக்கிறது.
தன்னை எதிர்த்து யாரும் எதிர்க்கக் கூட அல்ல…சிந்திக்கக் கூட கூடாது என ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் முதற்கொண்டு முதலமைச்சர் வரை சர்வாதிகார மனப்போக்கில் வாழ்கிறார்கள். 24 மணி நேரமும் குடிமயக்கம் தேவைப்படும் உளவியலுக்கு தமிழர்களை கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் பழக்கப்படுத்தி..தெரு நாய்களைப் போல ஒரு தேசிய இனத்தின் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஏன் ஈழ அழிவின் போது தமிழ்நாட்டில் எதிர்பார்த்த போராட்ட உணர்ச்சி எழவில்லை என்பது என்னால் இப்போதுதான் புரிந்துக் கொள்ள முடிந்தது. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தமிழர்களுக்கு தெரியாத ,புரியாத..மாயவலை ஒன்றினை திமுகவும், அதிமுகவும் பின்னி வைத்திருக்கின்றன.
இதையெல்லாம் மீறி எழும்பி வருகிறவர்களை தனக்குள்ளாக அடித்துக் கொள்ள வைத்து அதில் சிந்தும் உதிரத்தை நக்கிக் குடிக்கிற ஓநாய் கூட்டமாக இருபெரும் கட்சிகளும் இருக்கின்றன.
இத்தனை தடைகளுக்கு மத்தியில் தான் வெயில் அனலாய் கொதிக்கிற வீதிகளில் ….கண் முழுக்க கோபத்தோடும், வன்மத்தோடும் எளிய இளைஞர்கள் அலைகிறோம். எங்களுக்கு முன்னால் இரண்டே இரு வாய்ப்புகளைத்தான் திராவிடக் கட்சிகள் வைத்திருக்கின்றன.
1. நாங்களும் இன்னொரு திராவிடக் கட்சியை போல மாறி ..இந்த சாக்கடையில் சங்கமித்து புரட்டுத்தலைவியாகவும், புண்ணாக்கு தலைவனாகவும் திரிவது.
2. இல்லையேல்..எம் தெய்வங்கள் கரும்புலிகள் போல எம்மை அழித்தாவது..இந்த இரண்டு தீமைகளையும் அழித்து முடிப்பது…
நாங்கள் என்ன செய்ய….?????
முன்னே விரிந்துக்கிடக்கிறது இன்னொரு நாளொன்றின் புதிய தொடக்கம்.
– மணி செந்தில்_https://www.facebook.com
Comments