சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு செஞ்சேன், என கெளசல்யாவின் தந்தை சின்னசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடுமலையில் காதலித்து கலப்பு திருமணம் திருமணம் செய்து கொண்ட சங்கர் – கெளசல்யா தம்பதியினர், கடந்த 13-ம் தேதியன்று பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்பட்டனர்.
இதில் கணவர் சங்கர் பரிதாபமாக இறந்தார். கௌசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது தந்தை, தாய், மாமாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கௌசல்யா போலீசில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து 14-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை கைது செய்தனர் போலீசார்.
7 நாட்களுக்கு பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னசாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்ய சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி. எப்படியாவது வந்துடுனு கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். கவுசல்யாவோட அம்மாவ விட்டு கூட மிரட்டி பார்த்தேன். எதுவும் நடக்கலை.
அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறேன். நீ வாங்கிட்டு போயிடு என் பொண்ணை என்கிட்ட விட்டுடுனு சொன்னேன். அவனும் கேக்கலை. ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்தாங்க.
இன்னொரு பக்கம் எனக்கு என் சொந்த பந்தங்க கிட்ட ரொம்ப கேவலமா போச்சு. எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்துனாங்க. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன்.
ஜெகதீசன்கிட்ட இதைப்பத்தி சொன்னேன். என் பொண்ணை கூப்பிட்டு வா. வரலைனு சொன்னா அவளையும் கொன்னுடுனு சொன்னேன். என சின்னசாமி கூறியதாக விவரிக்கின்றனர் போலீசார்.
இதற்கிடையே பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான கௌசல்யா, நடந்தவை குறித்து இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் கெளசல்யாவின் தாயார், மாமா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கூறிய திருமணங்களை நாடக காதல் என்றும், பணம் பறிக்கும் முயற்சி என்றும் சில சாதி அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பல லட்சம் பணம் கொடுப்பதாக சொல்லியும், சங்கர் மறுத்ததாக கெளசல்யாவின் தந்தை அளித்துள்ள வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
அஞ்சடி நாய்களா . ஏன்டா ஜாதி ஜாதி என்று சொல்லி மிருகமா திரியிறிங்க.நீங்க எல்லாம் சோறு திண்டிரிங்களா அல்லது வேறு ஏதும் திண்டிரிங்களா . ஒழுங்கா பிள்ளையை வளர்க தெரியல . அடுத்தவன் பிள்ளையை உயிரை –ரா நினைகிரிங்களே.
பரவாலே! இப்ப உங்கள ஜெயில்ல போட்டா உங்க சாதி ஜனங்க எல்லாம் பெருமை படுவாங்கத்தானே? உங்க பெண்டாட்டி பிள்ளைங்களை எல்லாம் காப்பாத்துவாங்க தானே! அப்புறம் என்னா உள்ளே இருங்க!
எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே? அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே! ஆழமுன்னா என்னா? அது 10 இலட்சத்தாலும் வாங்க முடியாத ஆழமான காதல்.
சாதிகள் மெல்ல மெல்ல சாக வேண்டும் .இல்லையேல் தமிழன் உருப்பட போவதில்லை .மற்ற மாநிலத்தவன் நம் தலையில் வந்து உட்கார்ந்து விடுவான் . இது இன்றைய நடைமுறையில் தமிழகத்தில் தெளிவாக காணலாம் .
சாதிகள் மெல்ல சாகாது- அதை உயிர்ப்பிக்க நாதாரிகள் இருக்கின்றனர்–மாவ் சி துங் செய்யதது போல் கலாசார புரட்சி தான் இதற்க்கு ஒரே வழி– இது நடக்குமா இந்தியாவில்? சமூக சமத்துவ எண்ணமே இல்லாத மக்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். நான் பொதுவாக கூறுகிறேன்–நல்ல உள்ளங்கள் இருக்கின்றன ஆனால் விரல் விட்டு என்னும் அளவுக்கே. பள்ளிக்கூடங்களிலேயே வித விதமான வண்ண அடையாளத்துடன் சிறார்களை பிரித்து வைக்கும் அநியாயம் வேறு எங்கு நடக்கிறது? கேட்கவே இரத்தம் கொதிக்கின்றது– இப்படியும் ஈன ஜென்மங்களா? இதை எல்லாம் கேட்க நாதி இல்லை. கேட்டாலும் ஒன்றம் நடக்காது– இன்றைய நிலை வரும் தேர்தலில் கட்சிகளில் நடக்கும் குதிரை பேரம் நடக்கிறது– அதிலும் கொள்கை இல்லா ஜென்மங்கள்.நேரத்திற்கு நேரம் விதம் விதமாக பேசும் ஜென்மங்கள்.எவனையும் நம்புவது மிக கடினம். இந்த நூற்றாண்டிலும் உலகம் அறியா கொடூர சிறிய புத்தி கொண்ட ஜென்மங்கள் .