இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார்.
வரும் சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்து பேசியுள்ளார்.
அப்போது பேசுகையில், இலவசங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஏன் இலவசம் என்ற வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவது, படிப்பிற்கு தகுந்த வேலை, ஊதியம், அதன் மூலம் பெருமையான வாழ்வு ஆகியவற்றை அளிப்பதே எங்கள் கனவு என பேசியுள்ளார்.
-http://www.newindianews.com
அது நடக்குமா சீமான்? கை ஏந்தும் வழக்கம் நம்மவர்களிடையே காலந்தொட்டு நடக்கும் வழக்கம். நம்மவர்களை சுய மரியாதை உள்ளவர்களாக மாற்றினால் இதை விட வேறு முன்னேற்றம் தேவையா? சுய மரியாதை இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். அதிலும் குடியை அழிக்க முடியுமா? நம் இனத்தை இழி நிலைக்கு தள்ளியதே இந்த குடிதான்.
நண்பரே! “காலந்தொட்டு” என்றால் எந்தக் காலம் தொட்டு? திராவிடக் கட்சிகளின் காலந்தொட்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அனைத்தும் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்! நாம் மாறாமல் மற்றவர்களை மாற்ற முடியாது!
முடியுமா !நடக்குமா ? சாத்தியமா ?
இப்படியே ஓரமாக நின்று காலம்புறா சக தமிழனை பார்த்து கேட்டுகிட்டே இருப்போம் …
மக்களை வடுக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள் ..
ஒரே நாளில் மாற்றமுடியாது ..சிறுக சிறுக மாற்றலாம் …
நூறு வீதம் நான் நம்புகிறேன் ..தன்னலமற்ற தமிழன் கையில் அதிகாரம் வரும்போது மாற்றம் வரும் …
சினிமா ,கிரிகெட் ,சாராய போதை ,இப்படி வாழ்ந்த பல இலட்சம் இளன்சர்களை சீமான் மாற்றியுள்ளான்..கத்தி கத்தி இன மொழி உணர்வை இலட்சகணக்கான தமிழர்களை தமிழர்களாக உருவாக்கியுள்ளான் .. சீமானைபோல் பலநூறு சீமான் உருவாகிவிட்டான் ..வடுக குரங்கு வித்தை இனிமேல் தமிழரிடத்தில் பலிக்காது …
சீமான் அவர்களே போராடுங்கள் .வெற்றிக்கனி கிட்டும் வரை தொடர்ந்து போராடுங்கள்.எங்களை போன்றவர்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கே.தூங்கி கிடக்கின்ற வாளை விட துள்ளி எழும் புழுவே மேல் என்று கவிஞர் மேத்தா சொன்ன வார்த்தை நமக்கு மந்திரமாகட்டும்.வெற்றி நமதே.
புள்ளியிலிந்து தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியை கண்டு திராவிடனுக்கு வய்ற்றில் புலியை கரைக்குது.இதில்ஒரு வேடிக்கை சீமான் முழக்கத்தை பா.மா.க பச்சையாக திருடுவது.தமிழக தமிழர்கள் சீமானோடு கைக்கோர்க்க வேண்டுகிறேன்.நாம் தமிழர்கழாக ஓன்றுப்படுவோம்.சீமான் வெற்றி மாலை சூட வாழ்த்துகிறேன்.
இந்த பிரபஞ்சம் /அண்டம் ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பமானது – வானியல் அறிவியலாளர் கூறுவர். நாம் மற்றவர்களை தூற்றுவதை விடவேண்டும். நான் இன்று VIJAY தொலைகாட்சியில் தமிழ் நாட்டு தேர்தலைப்பற்றி நீயா நானாவில் அங்குள்ளவர்களின் கருத்துகளை கேட்டேன்– அங்குள்ளவர்களுக்கு தமிழர்களும் தமிழ் நாடும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே கிடையாது– பகுத்தறிவுக்கு அங்கு இடமில்லை– நியாயத்திற்கு அங்கு இடமில்லை. இங்கு பலர் மற்றவர்களை தூற்றி சாடி வருகின்றனர். நானும் சிலரை சாடி இருக்கிறேன் — நாம் இந்த நாட்டில் எப்படி ஓரங்கட்டப்பட்டு வந்தேறிகள் என அசிங்கப்பட வைக்கப்பட்டுள்ளோம்? இந்த நாட்டில் நம்மை 3ம் தர குடிமக்கள் ஆக்கி நமக்கு இந்த நாட்டில் உரிமை இல்லை என்பது போல் ஆக்கப்பட்டுள்ளோம். நமக்கு எப்படி இருக்கிறது? தமிழ் நாட்டில் தமிழருக்கு அநியாயம் புரிந்தவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்– ஆனால் தமிழர்களாக அங்கு வாழ்பவர்களை ஏற்று கொள்ள வேண்டும். நாம் இங்குள்ள இன வெறி பிடித்தவர்கள் போல் நடப்பது தவறு. ஏன் அங்குள்ளவர்களுக்கு தமிழ் பேசுவதற்கு கசக்கிறது என்று புரிய வில்லை. அங்குள்ள தமிழ் பள்ளிகளில் என்ன படித்து கொடுக்கின்றனர்?
சீமான் அரசு அமைத்து நல்ல தமிழ் ஆட்சி புரிந்தால் என்னை விட யாரும் மகிழ்ச்சி அடைய முடியாது– எனினும் அங்குள்ள நடை முறையும் குள்ள நரித்தனமும் யாரையும் நம்ப முடியாத்தனமும் எந்த அளவுக்கு சீமானின் முயற்சிக்கு பாதிப்பு தரும்?
abraham terah நான் காலம் தொட்டு என்று கூறுவது ஆரம்ப காலத்தில் இருந்து– காரணம் மற்றவர்களை யாசித்து-புகழ்ந்து தான் புலவர்களும் வாழ்ந்து இருக்கின்றனர்– நம்மவர்களில் பலர் -பெரும்பாலோர் –உதாரணத்திற்கு தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளில் நீங்கள் பார்க்கலாம் எப்படி ஒருவருக்கு ஒருவர் புகழ்வதை. எனக்கு அது நாராசம். அனாவசிய புகழ்ச்சி தேவை இல்லை. அதிலும் அடைமொழிக்கும் பட்டத்திற்கும் என் இப்படி அலைகிரான்களோ? சூர்யா போன்ற சிலரே எந்த அடைமொழி இல்லாமல் இருக்கின்றனர். கருணாநிதியின் தமிழ் அறிவுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். ஆனால் அவ்வளவு பட்டங்கள் தேவையா? மற்ற நாடு களில் கௌரவ பட்டங்களை யாரும் உபயோக படுத்துவதில்லை. அது கௌரவம் மட்டுமே. இதெல்லாம் வெறும் வறட்டு கௌரமே– எனக்கு மேற்கத்தியர்களை இதன் நிமித்தம் மிகவும் பிடிக்கும் –அங்கு யாரும் இல்லாத பட்டங்களை உபயோகிப்பது கிடையாது– தமிழ் நாட்டில் சுய விளம்பரத்திற்கு அளவே கிடையாது– வெட்ககேடு.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவனவன் பிழைப்புக்கு அவனவன் உழைப்பே பொறுப்பு. என்றபோதிலும் கிடைத்ததை சுருட்டும் அய்யாவும், அம்மாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை யாருமே காப்பாற்ற முடியாது. கலைஞரின் பதவி வெறியும், அம்மையாரின் ஆதிக்க வெறியும் தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை தரப் போவதில்லை, இதில் குடிகார நடிகரையும், சாதி வெறி பிடித்த மருத்துவரையும் மறந்துவிட முடியாது, தமிழக மக்கள் ஒரு நியாயமான, தங்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை எழுத வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம்.