செம்மரக் கடத்தல் தொடர்பாக சீனாவைச் சேர்ந்த லீ டாங் ப்பூவை ஆந்திர அதிரடிப் படை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது பிரபல செம்மரக் கடத்தல்காரர் பிரசாத் நாயக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பெங்களூரில் உள்ள சீனாவைச் சேர்ந்த கடத்தல்காரர் லீ டாங் ப்பூ (39) குறித்து தெரியவந்தது.
இதையடுத்து சித்தூர் அதிரடிப்படை போலீஸார் பெங்களூர் சென்று சனிக்கிழமை காலை லீ டாங் ப்பூவை கைது செய்து சித்தூருக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து 2 செம்மரக் கட்டைகள், ஒரு இரு சக்கர வாகனம், ரூ. 22,000 ரொக்கம், 52 பன்னாட்டு கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
லீ டாங் ப்பூ: சீன யோமெஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், அங்கு தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வந்தார். 2013-ஆம் ஆண்டு முதல் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு, செம்மரங்களின் தரத்தை சோதித்து அதை சீனாவில் உள்ள கடத்தல்காரர்களுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். சீன- திய கடத்தல்காரர்களுக்கு இடைத்தரகராக, மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://www.dinamani.com



























இந்த சீனனை ஆந்திர தெலுங்கன் அடித்து கொல்வானா ? இப்ப எங்கே போனது தெலுங்கன் வீரம் ?
தமிழர்களை இந்த வடுகன் மனிதனாவே மதிப்பதில்லை, ஆனால் தமிழ் நாட்டில் இவன் ஆள ஆசைபடுகிறான். என்ன கொடுமைடா சாமி
இங்கேயும் சீனன் தனது சித்தாந்தத்தை காடிவிட்டான்.உள்ளூர் காரன் உதவி இல்லாமல் இவன் உள்ளே நுழைய வாய்ப்பில்லை.