மராட்டிய மாநிலத்தில் கடுமையான வறட்சியால் ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் கோடா நகரிலிருந்து 5 லட்சம் லிற்றர் தண்ணீரை சரக்கு ரயில் மூலம் அனுப்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் மீரஜ் நகருக்கு சென்ற அந்த ரயிலை கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் லத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், பல மாவட்டங்களுக்கு குடிநீரை ஏற்றிச்செல்லும் ரயில்கள் செல்லவுள்ளன. இப்போது ஏற்பட்டுள்ள வறட்சி கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகவும் கடுமையானவற்றில் ஒன்றாக கூறப்படுகிறது.
வறட்சியின் காரணமாக பல மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகளவில் விவசாயம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறண்டு காணப்படுகின்றன.
-http://news.lankasri.com

























