அத்தனையும் மாற்ற போகிறோம்: சீமான் தேர்தல் பரப்புரை

seeman_001சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் இடித்துவிட்டு பாதாள வழிப்பயணமாக்குவது முதல் அத்தனையும் மாற்றுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அதில் பேசிய அவர், கன்னடர் நம் தமிழகத்தை ஆளலாம், கேரளத்தவர்ஆளலாம், தெலுங்கர் வந்து ஆளலாம், ஆனால் தமிழகத்தை ஒரு தமிழர் ஆள்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தை ஒரு முறை தமிழன் கையில்தான் கொடுத்துப்பாருங்களேன். கன்னடர் ஆளலாம், கேரளத்தவர் ஆளலாம், தெலுங்கர் ஆளலாம் ஆனால் தமிழகத்தை தமிழர் ஆண்டால் அது வெறியா என்றார்.

தமிழகத்தின் தலைநகரையே மாற்ற இருக்கிறோம் என கூறிய சீமான், நம் தமிழகத்திற்கு ஐந்து தலை நகரம், அதாவது நிர்வாக வசதிக்காக சென்னையை திரை மற்றும் கணினி துறையின் தலைநகராக தொடர வைப்போம்,

அடுத்து திருச்சியை நிர்வாகத் தலைநகராக மாற்றுவோம், கன்னியாகுமரியை மெய்யியல் தலைநகராக மாற்றுவோம், மதுரையை கலை, பண்பாடு, இலக்கிய தலை நகராக மாற்றுவோம், மேலும் தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையை தொழிற்துறையின் தலைநகராக மாற்றுவோம் என்றார்.

இலவசமென கல்வியைத் தவிர எதுவும் இருக்காது என கூறிய சீமான், அனைவரது வாழ்வாதாரத்தையும் உயர்த்துவோம் என்றார். நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கி அரசே அதில் விவசாயம் செய்யும். விவசாயம் என்பது அரசு வேலையாக்கப்படும் என தெரிவித்தார்.

எது தமிழ்த்தாய் வாழ்த்து என கேள்வி எழுப்பிய சீமான், நீராரும் கடலுடுத்த பாடலா? திராவிடர் நல் திருநாடா? மானத்தமிழ் நாட்டுல எங்கடா திராவிடர் நாடு?

“தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” அதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாக கொள்வோம் என்றார் சீமான்.

-http://news.lankasri.com

TAGS: