கொள்ளையர்களை விரட்ட காசு வாங்காத 75% பேர் ஓட்டுப் போட்டாலே போதும்.. சீமான்

சிதம்பரம்: தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் 25 சதவீதம்பேரால்தான் இந்த மாநிலத்தை விட்டு கொள்ளையர்களை விரட்ட முடியாத நிலை உள்ளது. காசு வாங்காத, மீதம் உள்ள 75 சதவீதம் பேரும் ஓட்டுப் போட முன்வந்தாலே போதும் தமிழகத்தை விட்டு திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கொள்ளையர்களையும் விரட்டி விடலாம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.

புவனகிரி, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிதம்பரத்தில் வாக்கு சேகரித்தார்.

Seeman urges for 100% polling

அப்போது அவர் பேசுகையில், தேர்தலில் பணத்தை பெற்று கொண்டு வாக்கு அளிப்பவர்கள் 25 சதவிகிதம் பேர்தான். மீதமுள்ள 75 சவீதம் பேரும் வாக்களிக்காமல் உள்ளனர்.

அவர்களும் வாக்களித்தால், வாக்களிக்க முன்வந்தால் மட்டுமே அதிமுக, திமுக ஆகிய இரு கொள்ளையடிக்கும் கட்சிகளையும் அகற்ற முடியும். 100 சதவீத வாக்குப் பதிவை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணத்தைகொடுத்து அடிமைபடுத்தியுள்ளனர் இந்த இரு கட்சியினரும். கனிம வளங்களையும், தண்ணீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களையும் இந்த இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொள்ளையடித்து அவர்களது கஜானாக்களை நிரப்பிவிடடனர்.

இயற்கை வள கொள்ளையால் காடுகளில் உள்ள மிருகங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு படையெடுக்கிறது. பறவை இனங்கள் அழிவை நோக்கி செல்கிறது.

தமிழகத்தில் மட்டும் தான் தமிழக முதல்வர்களாக இருப்பவர்கள் சாரய ஆலைகளுக்கு முதலாளியாக இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை என்றார் அவர்.

-http://tamil.oneindia.com

TAGS: