ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு

rajiv_killers7_002ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர்.அதில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால் எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆயுள் தண்டனை பெற்ற அவர்கள் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு கருதுகிறது.

இது சம்பந்தமாக தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த கடிதம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அனுப்பிய பதிலில், இந்த விடயம் உச்ச நீதிமன்ற விசாரணையின் கீழ் இருப்பதால் யாராலும் இதன் மீது இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடிதமும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்யலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கூறுகையில், இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட அறிவு வந்துவிடுவான் என்று நம்பினேன்.இப்படி நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வழக்கமாக போய்விட்டது.

இப்பவும் முதல்வரைத்தான் நம்பி இருக்கோம்.தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னால, ‘விடுதலை செய்வார் முதல்வர் அம்மா’ன்னுதான் சொன்னாங்க. அதை நம்பித்தான் இருந்தோம்.

வழக்கு நிலுவையில் இருக்குன்னு காரணம் காட்டுகிறார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரையிலும், ‘தேர்தலுக்கும் விடுதலைக்கும் சம்பந்தமில்லை. புது அறிவிப்பு மட்டும்தான் வெளியிடக் கூடாது’ன்னு லக்கானி விளக்கம் கொடுத்தார்.

எனவே முதல்வர் அம்மா தயங்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: