இது தேர்தல் அல்ல.. மாற்றத்திற்கான புரட்சி களம்: சீமான்

seeman-3443நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசிய சீமான் தற்போது நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல, மாற்றத்திற்கான புரட்சி களம் என்றுதெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரண்மனை அருகே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரைஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ் தேசிய நலத்தின் இறையாண்மை உரிமையை கேட்கிறோம். தமிழ் மண்ணை தமிழன்ஆண்டு இருந்தால் இவ்வளவு பெரிய துன்பம், துயரம், வறுமை, ஏழ்மை வந்து இருக்காது.

தமிழன்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பது அந்த இனத்தின் அடிப்படை உரிமை. எல்லை தாண்டி செல்வதற்காக மீனவர்கள் சிறை பிடிக்கப்படவில்லை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சிறை பிடிக்கப்படுகின்றனர்.தேர்தல் அறிக்கையில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறுகிறார்கள்.

இந்த விவசாயியை கடனாளியாக ஆக்கியது யார்? கடன் வாங்கி கல்வி கற்க வைத்தது யார்? தகப்பன் இல்லாத வீடு தட்டுக்கெட்டு நிற்பது போல் சரியான தலைவன் இல்லாமல் தமிழ்நாடும், தமிழ் இனமும் தட்டுக்கெட்டு நிற்கிறது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் நம்மை அடிமைப்படுத்த நினைக்கின்றனர்.

ஆட்சியில் இருக்கும் போது மதுவிலக்கை பற்றி வாய் திறக்காத ஜெயலலிதா மக்களிடம் வாக்குகேட்க வரும் போது மதுவிலக்கை படிப்படியாக குறைப்பதாக கூறுகிறார். முதலில் அந்த இரண்டு தலைவர்களுக்கும் சொந்தமான மது ஆலைகளை மூடட்டும். காமராஜர் காலத்தில் உண்மையும், நேர்மையும் நிறைந்த எளிமையான ஆட்சி நடைபெற்றது.

ஊழல், லஞ்சம், மதுவை ஒழிப்பதாக சொல்கிறார்கள்.மக்கள் அவர்களையே ஆட்சியை விட்டு ஒழிக்க வேண்டும். உண்மையான,நேர்மையான ஆட்சியை நிறுவ உங்கள் பிள்ளைகள் துடிக்கிறோம் பலமுறை அ.தி.மு.க.- தி.மு.க. விற்கு வாக்களித்து அதிகாரத்தைகொடுத்து விட்டீர்கள்.

மறுபடியும் நீங்கள் ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ வாக்களித்து அதிகாரத்தை கொடுக்காதீர்கள். பணத்தை கொடுத்து வாக்கை பறிக்கலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். இது தேர்தல் அல்ல. மாறுதலுக்கான புரட்சிக்கான களம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று சீமான் பேசினார்.

-http://news.lankasri.com

TAGS: