புதுச்சேரி: பிரச்சாரத்திற்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பாமக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திங்கட்கிழமை பிரச்சாரத்திற்கு கிளம்பினார்.
சென்னையில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு தனது ஆதரவாளர்களுடன் காரில் கிளம்பினார். அவரது கார் திருநாரையூரை அடைந்தபோது சாலையோரம் ஒரு ஆணும், பெண்ணும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தார் திருமா. உடனே காரை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கி ஓடி வந்தவரிடம் அங்கிருந்தவர்கள், ஏதோ ஒரு வாகனம் இவர்களை அடித்துச் சென்றுவிட்டது. 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஒரு மணிநேரமாகியும் வரவலில்லை என்றனர்.
பாமக கரை வேட்டி அணிந்திருந்த அந்த ஆணின் காலில் சதை பிய்ந்து ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அவரின் மனைவியும் படுகாயம் அடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த திருமாவளவன் அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அண்ணே, அவர் பாமக கரை வேட்டி கட்டியுள்ளார் என ஒரு தொண்டர் கூற அதற்கு திருமாவோ, உயிர் தான் முக்கியம் கட்சி அல்ல என்று கூறி மக்களின் மனதை தொட்டுவிட்டார்.
மனிதருள் மாணிக்கம்
அடுத்த mgr
முதலில் நாம் மனித நேயம்மிக்க மனிதனாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் மற்றது எல்லாம். அதை சரியாக செய்திருக்கிறார் மதிப்புமிகு திருமாவளவன் வாழ்த்துகள்.
நமது நாட்டில் ஒரு சாதாரண மனிதன் செய்யும் செயல் இது !! இதற்கு ஏன் இத்தனை பந்தா !! ஓ தமிழ் நாட்டில் தேர்தல் காலம் !! இதுவும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள் !!
பொதுவாக மனித நேயம் இன்று வெகுவாக நலிந்து வரும் இக்கலியுகத்தில் ஒரு மனிதரின் அனைத்தையும் கடந்த ஓர் உன்னத மாண்பு. வாழ்க, வளர்க…