80 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழ், தற்போது செத்துபோச்சு என்கிறான், இந்த நாட்டிற்கு பெயர் தமிழ்நாடு, ஆனால் தமிழுக்கும், தமிழனுக்கும் இது சுடுகாடு என சீமான் கொதித்துள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு மொழி அழிந்தால், ஒரு இனமே அழிந்துவிடும்.
உங்கள் முன்னால் நிற்கும் நான் முகம் சிதைந்து இறந்து போனால், உங்களால் என் பிணத்தை அடையாளம் காட்ட முடியாது. அப்படி ஒரு மொழி சிதைந்தால் என் இனத்தை யாராலும் அடையாளம் கட்ட முடியாது என்பது தான் வரலாற்று உண்மை.
தாய்மொழியை மறந்த இனம் உலக வரலாற்றில் வாழ்ந்ததாக செய்தி இல்லை, தமிழகத்தின் தெருவில் தமிழ் இல்லை, இங்கு தமிழ் ஒழித்தல் ஒன்று, நல்ல சாதி வளர்த்தல் மற்றொன்று என மாறி நிற்கிறான்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் எங்கையாவது தெருவில் ஒரு எழுத்து தமிழ் மொழியில் கட்ட முடியுமா? இது நாடா? நாட்டிற்கு பெயர் தமிழ்நாடு,தமிழுக்கும் தமிழனுக்கும் இது சுடுகாடு.
இதை இங்கிலாந்து நாட்டின் இன்னொரு மாநிலமாக மாற்றியுள்ளான். இங்கு யாருக்கு தமிழ் தெரியும், ஆட்சி மொழியாக, பயன்பாட்டு மொழியாக, அதிகார மொழியாக, பண்பாட்டு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காற்றும் மொழியாக உன் தாய் மொழி இருக்கா?
இங்கு பல தாய்மொழிகள் செத்துபோயுள்ளது. அதே போல் நாம் தாய் மொழியும் செத்துபோகணுமா? தாய் மொழியை உயிர்பிக்க வேண்டிய தேவை இன்று ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. இது தான் அரசியல் என சீமான் கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
வேற்றுமைகளை மறப்போம் .ஒன்றுபடுவோம் .நம் ஒற்றுமையின் பலமே நம் உயிராம் தமிழையும் இனத்தையும் காக்கும் .இதில் ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருக்க வேண்டும் .
வெற்றி வேல்! வீர வேல்! தமிழர் மண்ணை மீட்க போர் முரசு ஒலிக்கட்டும் ! வெற்றி வாகை சூடும் வரை நில்லாமல்
ஒலிக்கட்டும் ! வெற்றி வேல்! வீர வேல்!
தமிழ் நாட்டில் தமிழர் இறந்து பல நூற்றாண்டுகளாகி விட்டது!. அங்கு வாழ்வோர் தான் தமிழன் என்பதனையே மறந்து வாழும்போது தமிழ் நாடு மட்டும் எதற்கு? அழிச்சிடுங்கடா! தமிழன் அழிந்ததாக பிரகனப்படுத்தி விடலாம்.