கனடாவில் ஒரு மனிதனுக்கு சராசரியாக 8,953 மரங்கள், ஆனால், நமது நாட்டில் நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை அழிந்து கொண்டு வருவதால், மக்கள் நோயுற்று இறப்பதாக சீமான் வருந்தியுள்ளார்.
மணச்சநல்லூரில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், கடந்த 50 ஆண்டு காலமாக நாட்டில் மரம் வளர்த்து வந்திருந்தால், பூமியின் சொர்க்கமாக இந்த தேசத்தை மாற்றியிருக்க முடியும். ஒரு பசுமை தாயகமாக இந்த நாட்டை மாற்றியிருக்க முடியும்.
ஆனால், யாருக்கும் அந்த நோக்கம் இல்லை. ஒரு மனிதனுக்கு சராசாரியாக 422 மரம் இருக்க வேண்டும். உலகத்தில் கனடா என ஒரு நாடு உள்ளது, அங்கு ஒரு மனிதனுக்கு 8,953 மரங்கள் உள்ளது, ரஷ்யாவில் ஒரு மனிதனுக்கு 4,461 மரங்கள் உள்ளது, அமெரிக்கா கூட 716 மரங்கள் வைத்துள்ளது.
நாம் நாட்டை விட மக்கள்தொகை அதிகமாக உள்ள சீனா கூட ஒரு மனிதனுக்கு 102 மரம் வைத்துள்ளது. ஆனால், நாம் நாடு வெறும் 28 மரங்கள் தான் வைத்துள்ளோம்.
இந்த பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் வெளியிடுகிற நச்சு புகையை கட்டுப்படுத்த ஒரு காருக்கு ஆறு மரம் தேவைப்படுகிறது.
இல்லையெனில், மூச்சு காற்று நச்சு காற்றாக மாறும், அதை நாம் சுவாசிக்கும் போது புற்றுநோய் வரும், நுரையீரல் புற்றுநோய் வரும், ஆஸ்துமா, காசு நோய்கள் வந்தால் நாம் இறப்போம்.
மூச்சு காற்று நஞ்சாகி விட்டது என்றால் நாம் வாழ்வது எப்படி? அதில் அரசு அக்கறை காட்டுகிறதா என்றால் இல்லை.
இன்று பூமி வெப்பமயமாகி கொண்டிருக்கிறது என்றால் மரம் இல்லை, மரத்தை நட வேண்டும் என்ற அக்கறை ஆட்சியாளர்களுக்கு இல்லை,
நட்ட மரங்கள் எத்தனை,வெட்டிய மரங்கள் எத்தனை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நீர் இல்லை, அக்கம்பக்கத்தில் உள்ள மாநிலங்களிடம் 400 டிஎம்சி தண்ணீருக்கு கை ஏந்துகின்றோம்.
ஆனால், நமக்கு 4 ஆயிரம் டிஎம்சி மழை பொழிகின்றது, நம்மை சுற்றியுள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திராவை விட அதிக மழை தமிழ்நாட்டில் தான் பொழிகிறது.
இருந்தும் அவர்களிடம் நாம் தண்ணீருக்காக கை ஏந்துகின்றோம், காரணம் நீரை சேமிக்கவில்லை, 1500 டிஎம்சி தண்ணீரை சேமித்துவிட்டு, மீதம் உள்ள 2500 டிஎம்சி தண்ணீரை கடலில் கலக்க விடுகிறோம் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
-http://news.lankasri.com