தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: திருமணம் செய்து வைக்க மறுக்கும் பெற்றோர்!

marriage_001ஒடிஸா மாநிலத்தில் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.

1,000 அடி ஆழத்தில்கூட தண்ணீரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், 8 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பெரியோர்கள் ஒடிஸாவின் பாலாசோர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவீந்திர ஜேனாவை (பிஜு ஜனதா தளம்) சந்தித்து, “எங்கள் கிராமங்களில் தண்ணீர்ப் பஞ்சம் உள்ளதால், மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் கிராமங்களில் உள்ளவர்களுக்கு தங்கள் பெண்களை திருமணம் செய்து வைக்க மறுக்கின்றனர்’ என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே மாநிலப் பட்டியலில் உள்ள தண்ணீரை அரசமைப்பின் பொதுப் பட்டியலில் கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் விலைமதிக்க இயலாத இயற்கை வளமான தண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாவல் தொகுதியின் சிவசேனை உறுப்பினர் பேசியதாவது, மாவல் தொகுதிக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தண்ணீருக்காக பல கிலோ மீற்றர் தொலைவு உள்ள தண்ணீர் கிடைக்கும் இடத்துக்குச் செல்ல, ராணுவத்துக்குச் சொந்தமான நிலப்பகுதியைத் தாண்டி செல்ல வேண்டியிருப்பதுடன், அப்பகுதியைத் தாண்டிச் செல்வதற்கு நீதிமன்றத் தடை அமலில் உள்ளது.

ஊடுருவல்காரர்களை அனுப்பும் பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்களை வாகா எல்லை வழியாக நுழைய அனுமதிக்கிறோம்.

ஆனால் இந்திய குடிமகன்களாக கிராமத்தினருக்கு ராணுவப் பகுதியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: