சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் காங்கிரஸ் கட்சியின், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிபார்ம்ஸ் என்ற, தனியார் அமைப்பு ஒன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்களை பாருங்கள்:
*தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் காங்கிரஸ் கட்சியின், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்து உள்ளது. இதில் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1,80,45,30,790 கோடியாகும்.
*வசந்தகுமாரை தொடர்ந்து, திமுக சார்பில் அண்ணாநகரில் போட்டியிடும் தொழிலதிபர் எம்.கே.மோகன் பெரும் பணக்காரராக உள்ளார். அவரிடம் ரூ.170 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அசையும் சொத்து மதிப்பு ரூ.1,92,43,716 கோடி. அசையா சொத்து மதிப்பு ரூ.1,68,04,87,300 கோடியாகும்.
*பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருப்பது முதல்வர் ஜெயலலிதா. அவரிடம் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அசையும் சொத்து மதிப்பு ரூ.41,63,55,396, அசையா சொத்து மதிப்பு ரூ.72,09,83,190 ஆகும்.
*பாஜக சார்பில் செங்கம் மற்றும் திருக்கோயிலூர் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஒரு சொத்து கூட இல்லையாம்.
*மொத்தம் 1107 வேட்பாளர்கள் சட்டசபை தேர்தல் போட்டியில் உள்ள நிலையில், முக்கியமான 997 வேட்பாளர் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 283 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இது மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில், 28% ஆகும்.
*இதில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட, மிக மோசமான கிரிமினல் வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளோர் 157 பேர் என்று தெரியவந்துள்ளது.
அதில் 5 பேர் மீது கொலை வழக்கு நிலுவையிலுள்ளது.
கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளோர் 30 பேர்.
*கட்சிப்படி பார்த்தால், திமுகவை சேர்ந்த 68 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையிலுள்ளது. இதுதான் அனைத்து கட்சிகளையும் ஒப்பிட்டால் அதிகமாகும்.
2வது இடத்தில், 66 கிரிமினல் வேட்பாளர்களோடு பாமக உள்ளது.
*அதிமுக சார்பில் போட்டியிடுவோரில் 47 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.
பாஜக சார்பில் போட்டியிடுவோரில் 26 பேர் மீதும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரில் 10 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ளன.
*28 சட்டசபை தொகுதிகளில், கிரிமினல் வழக்கு உள்ள 3 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். எனவே அந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வாய்ப்புள்ளது.
அட கிரிமினல்தானே ! அண்டை நாட்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசும் பயங்கரவாதிகள் அல்லவே !
களவாடிப் பையன்கள் ஓட்டைக் களவாடும் தேர்தல் இதுவோ. தமிழ் நாடு உருப்பட்ட மாதிரிதான்.
பதவியில் இப்படி உண்டுக் கொழுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? இப்படிப்பட்ட முதலை முழுஙகிகளால் மக்களுக்கும் ஒரு பயனும் இல்லை ? மக்கள் இனம் கண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்!