தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நேற்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய வைத்தது மத்திய பாஜக அரசு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
தங்கள் கோபத்தை இலங்கை கடற்படை இப்படி வெளிப்படுத்தி விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டெல்லிக்கு நேற்று முன்தினம் இலங்கை ஜனாதிபதி சிறிசேன வருகை தந்தார்.
அவருக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் விருந்தளித்த நிலையில், இன்று இந்திய மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com

























இந்திய கடற்படை என்ன புடுங்கி கொண்டிருக்கிறது? மானம் ஈனம் இல்லா தமிழனை காட்க நாதி இல்லை–பேருக்குத்தான் இந்தியன் – கையால் ஆகா தண்டங்கள்.