சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா, உட்புற மாவட்டங்களில் கன மழை பெய்வதால் வாக்குப் பதிவு பாதிப்படைந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, அதபோல ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, கடலூர், நீலகிரி, திருச்சி என 15 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால் பல பகுதிகளில் வாக்களிக்கப் போக முடியாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். Rain slows down the polling in 15 districts கமுதி, ராமேஸ்வரம் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டுவதால் வாக்குப்பதிவில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் நல்ல மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இததொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. தேனி, பெரியகுளத்தில் மழை கொட்டி வருகிறது. திருச்சியில் பெய்து வரும் மழையால் வரிசையில் நிற்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் பலஇடங்களில் வாக்குப் பதிவு மந்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
–tamil.oneindia.com