குஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரெயில் மூலமாக கரசேவகர்கள் வந்து கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு குறிப்பிட்ட பெட்டியை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சபர்மதி ரயிலுக்கு தீ வைப்பதற்கு முன் நகர கவுன்சிலராக இருந்த பரூக் பானா, தனது இல்லத்தில் 20 பேருடன் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த ஆலோசனையில் ரயில் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் பரூக் பானா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துக்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவான பரூக் பானா, குஜராத்தின் மத்திய பகுதியான நகா என்ற இடத்தில் தீவிரவாத தடுப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-http://news.lankasri.com

























