இந்தியாவில் கிடைக்கும் ரொட்டிகளில் புற்று நோய் ஏற்படுத்தும் நச்சு ரசாயனம்! அதிர்ச்சித் தகவல்

Breadஇந்தியாவில் கிடைக்கும் ரொட்டிகளில் தைராய்டு, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் இருப்பது தொடர் சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

CSE என்ற தொண்டு நிறுவனம் நடத்திய தொடர் சோதனைகளின் மூலம் இவை தெரியவந்துள்ளது. தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பன்னாட்டு உணவு நிறுவனங்களான Pizza Hut, Domino’s, Subway, McDonald’s, Slice of Italy ஆகியவற்றின் உணவுகளிலும் இத்தகைய நச்சு பொருள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

CSE தொண்டு நிறுவனம், டெல்லியில் உள்ள 38 கடைகளில் இருந்து சோதனைக்கு மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில், வெள்ளை ரொட்டி மற்றும் தானியம் குறைவாக உள்ள ரொட்டிகளில் பெருமளவில் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் ஐயோடேட் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த அந்த சோதனை மாதிரிகளில் 84 சதவிகித உணவில் நச்சு பொருட்கள் உள்ளது உறுதியாகியுள்ளது.

பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் ஐயோடேட் இரண்டையும் உலக சுகாதார நிறுவனம் தடை செய்ய வேண்டும் என எச்சரித்துள்ள போதும் இந்தியாவில் அவை தடை செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

ஆனால் சீனா, இலங்கை உள்ளிட்ட 40 நாடுகள் அந்த இரண்டு வேதிப் பொருட்களையும் தடை செய்துள்ளன. CSE தொண்டு நிறுவனத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் கூறுகையில், இவ்வகையான ரொட்டிகளை தினமும் 2 துண்டுகள் என தினமும் உண்டு வந்தால் தைராய்டு மற்றும் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை பார்த்த சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா கூறுகையில், நான் இது தொடர்பாக அவசர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இதனால் யாரும் பீதியடைய வேண்டியதில்லை. நாங்கள் விரைவில் இதன் உண்மைத்தன்மையை விசாரிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அகில இந்திய ரொட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் இன்னும் அந்த அறிக்கையை பார்க்கவில்லை என்றும், ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தர ஆணையம் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் ஐயோடேட் ஆகிய இரண்டையும் குறிப்பிட்ட அளவுகளில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

CSE வெளியிட்ட ஆய்வில், சாண்ட்விச் ரொட்டி, மற்றும் வெள்ளை ரொட்டிகளில் அதிகளவில் அந்த நச்சு பொருட்கள் இருப்பதாகவும் Harvest Gold, Britannia, Perfect Bread ஆகிய நிறுவனத்தின் ரொட்டிகளில் அவை அதிகளவில் உள்ளது ஆய்வில் தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: