விஜய்சேதுபதி படத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக தனிமைச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்உள்பட 7 பேர் விடுதலைக்காக ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.
இவர்களின் விடுதலைக்கு அண்மையில் நடிகர் சத்யராஜ் குரல்கொடுத்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்காக விஜய்சேதுபதியும்குரல் கொடுத்துள்ளார்.
25 வருடம் சிறை என்பது கொடுமையான விஷயம். அவர்களுக்காக நடக்கும் இந்த பேரணியில் நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், அதோடு பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
ஐயா மன்னரே தங்களை படித்தவர் என்றும் நல்மனம் கொண்டவர் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டு சாதி உண்டு என்கிறீரே, இந்த சாதியத்தைப் போற்றுவோர் ஒரு பக்கம் தங்களை உயர்ந்தோர் என்று தம்பட்டம் அடித்து நிற்கையில் தமிழர் பண்பாடு, ஒற்றுமை, மனித நேயம் என்றெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டீரே. இதற்கு மேல் என்ன தமிழன் அடையாளம் வேண்டிக் கிடக்கு? தைரியமிருந்தால் நான் இந்த சாதிக்காரன் என்று நேரிடையாகச் சொல்லுங்களேன். ஏன் முகமூடிப் போராட்டம்?. இப்படியானவரைத்தான் படித்த முட்டாள் என்பது. தங்கள் சமய நன்னெறி இப்படிதான் தங்களை வளர்த்துள்ளதா? வெட்கக் கேடு.
சைவ மூல ஆகமங்களில் ஒன்று வீர ஆகமம். வீரச் சைவர் 12-ம் நூற்றாண்டிலேயே சாதியை மறுத்துள்ளனர். அந்த ஆகமச் சுலோகத்தைக் கீழே படியுங்கள்:
“தங்குல மகிமை நோக்கிச்
சங்கர னடியாற் கென்று
மங்கிய சாதி பேத
முரைத்தவர் மனையிற் போன
மிங்கெமக் காகா வென்னும்
மீனருக் கூமன் கண்ணில்
வெங்கதிர் நிலைமை போல
நிற்பதும் வீர சைவம்”
பொருள்: தம் பிறப்பமைந்த குலப் பெருமையினை மனங்கொண்டு சிவனாந்தம் மெய்யடிமை கட்கும் சிறப்பில்லா சாதி பேதத்தினைக் கற்பிப்பவர், சாதியாற் தாழ்ந்தவர் வீட்டிற் செல்லலாகா என்பவராய ஈனர்கட்கு வீரசைவம் ஊமன் கண்ணில் ஞாயிறு பட்டாங்கு விளக்கமின்றியே நிற்பதாகும்.
ஆந்தை கண்ணில் சூரியக் கதிர் பட்டாலும் அது வெளிச்சத்தை அறியாது. அதுபோல சாதியைப் போற்றி வாழ்வோர் இருட்டினிலே வாழ்வோர் என்பதனை எவ்வளவு அழகானத் தமிழில் கூறிப் போந்தனர் சைவர். இவ்வாறு சாதி குலப் பேதத்தில் வீழ்ந்து வாழ்வோர் ஈனரே என்பது சைவக் கோட்பாடு. இது உண்மைச் சைவர் வாழ்வியல் நெறி. எங்கே உமது சமய நெறியில் சாதியம் போற்றப் படுவதைக் காட்டுங்கள் பார்ப்போம். அப்படி ஒன்று இருந்தால் அது ஆரிய வர்ணாசிரமத்தைக் கொண்ட வைதீக வைணவத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். தவிர சைவத்தைச் சார்ந்த நெறியாக இருக்க முடியாது. உண்மைத் தமிழனாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மேலே சொன்னபடி சாதியத்தைப் போற்றி ஈனத் தமிழனாக வாழ வேண்டாம். சிவ சிவ. .
அடுத்த நிமிடம் கூட நமக்கு நிச்சயம் இல்லை இதில் சாதி மதம் போன்ற அழுகை சுமந்து கொண்டு சாகதே அன்பை மட்டும் நேசியுங்கள்.
தேனியரே, இதில் முட்டாள் தனம் ஏதுமில்லை. சாதி இருப்பது உண்மைதானே. ஆனால் இதை வைத்து ஒருவருக்கொருவர் தாழ்த்தி பேசுவதையோ அல்லது பாகுபாடு காட்டுவது நம் மனித குலத்தில் இருக்க கூடாது என்பதையே யாம் அறிவுறுத்தி வருகிறோம். இதை கூட புரியாமல் மற்றவரை முட்டாள் என்று கூறும் தேனியாரே உணரவும் நீர் மடமையாக இருக்க வேண்டாமே.. உமது அறியாமையை கண்டு எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அந்த சைவ சித்ததந்தை போற்றும் நாயன்மார்களே பல குலத்தில் பிறந்தவரே. ஆனால் அவர்கள் யாரும் யாரிடமும் வேற்றுமையோ காழ்புனற்சியோ காட்டாமல் யாவரும் சமமே என்று தான் போற்றி வந்தனர். அதையே யாமும் என் வழியில் கூறினேன். மேலும் அவர்கள் சாதிகளை மறுத்தனர் ஒழிய சாதி என்று ஒன்று இல்லை என்று கூறவில்லை. இறைவன் முன் நாம் யாவரும் சமமே . அந்த யாவரும் அறவழியில் நடந்தால் எல்லாம் இன்பமயமாகுமே. இங்கு யாம் சாதி பெருமை பற்றி பேசவில்லை. சாதியை கொண்டு நாம் மற்றவரை தாழ்த்தி பேச வேண்டாமே என்று தான் கூறுகிறேன்.
அஞ்சான் உமக்கு யாம் சொல்லவருவது எப்போதுமே புரியாது. புரிதல் என்பது உமக்கு எட்டாத ஒன்று போலும். இங்கு பல தமிழர்கள் மற்றவரை குறை சொல்லி தான் எழுதுகின்றனர். நம் தமிழரிடையே காணும் தவறான குணம் இது. அதே வேளையில் தமிழன் தவறு செய்தாலும் அவனை ஆதரித்து பேசுகின்றனர். எம்மை பொறுத்த வரை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அந்த இறைவனே தவறு செய்தாலும் அதை குற்றம் என்று சொல்லும் நெஞ்சம் கொண்டவன் யாம். நன்றி.
மாட்டிகிட்டான் கபடதாரி ….ங்கன்
தமிழச்சி தாலியறுக்கும் வடுகனின் முள்ளமாரித்தனம்
திரிவடுக முள்ளமாரிகளின் முலதனம் கபடம் பித்தலாட்டம் பொய் புரட்டு நம்பிக்கை துரோகம் நயமாக பேசி நம்பவைத்து குழியில தள்ளுறது ..
கருணாநிதி ராமசாமி நாய்கேன் பள்ளியில் நாமம்போட்ட தெலுங்கு பார்பாங்களிடம் பகுத்தறிவு பாடம் கற்கும்போது எடுத்தகாணொளி
https://www.facebook.com/100011671317892/videos/205245179874524/
வடுக ஆக்கிரமிப்புக்குமுன் தமிழ் இனகுளுக்களில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை ..
அதிகாரத்தைப் பிடிக்க அவன் இனத்தையே மாற்றுவான் என்றால், சாதியை மாற்ற அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
தமிழர் வேடம்பூண்டு இனத்தை கலாசாரத்தை அழிப்பவனை எப்படி அடையாளம் காண்பது ?
வடுகம் சோழர் காலத்திலிருந்து தமிழின அழிப்பு தொடர்கிறது ..
சாதி உண்டு, நான் உயர்ந்த குலம் மற்றவர்கள் கீழ்சாதி என்று பேசிய (மறந்து விட்டால் உம் பதிவை மீண்டும் படித்துபாரும்) இதில் மற்றவர்களுக்கு புரியாது என்று வீராப்பு வேறு.. உம்நெற்றின் கண்ணை திறந்தால் எங்கே என்னை எரியும் பார்க்கலாம்?… இருப்பது பொட்டை கண் .. உம் சாதி எங்கே என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் நீர் நெஞ்சுரம் கொண்டவன்.! நெஞ்சுரன் கொண்ட நீர் உம் சாதி என்ன என்று சொல்லும் பார்க்கலாம்.. அப்படியே உம் சாதி தமிழருக்கு என்ன செய்தது, அப்படி இல்லை என்றால் மனித குலத்துக்கு என்ன செய்தது என்று கூறுங்கள் மன்னரே . நாங்களும் தெரிந்து கொள்வோம் . தமிழனை தூற்றி பாரும் உம் நெஞ்சத்தை இல்லை என்றால் உம் கு…..தை நாம் பார்க்குறோம்
மன்னா,சாதியத்தை வச்சுதான் வந்தவனுங்க பிழைப்பு நடக்குதுன்னு அறிவார்ந்த தமிழருக்கு எட்டாதா என்ன? தொடரும்….
சொல்வது ஒன்று செய்வது ஒன்று!. சாதியம் பேசுவதன் நோக்கம் என்ன. ஒருவரை உயர்த்தியும் மற்றொருவரை தாழ்த்தியும் பேசத்தானே. அவ்வாறுதானே இன்றைய நடைமுறை!. சாதியைப் போற்றும் யார் மனித நேயத்துடன் நடந்து கொள்கின்றார்? இது மனித நேயத்திற்குப் புறம்பாக செயல்படுவதை அறிந்த பிறகும் அதை நடைமுறைப் படுத்துவது கற்றோருக்கு அழகல்ல. “சாதி” என்பதற்கு பொருள் விளக்கத்தைக் கொடுங்களேன் பார்ப்போம்? அது பிறப்பினால் வருவதா அல்லது செய்யும் தொழிலால் வருவதா? பிறப்பினால் அல்ல என்பது கற்றோர் அறிந்தது. தொழிற்பெயர் என்றால் இன்று அந்த தொழில் செயாதவனுக்கு ஏது சாதி? அப்புறம் எதற்கு சாதி? சாதி என்பது சிலை மேல் எழுத்து அல்ல என்பதை அறிந்து செயல்பட முடியவில்லையானால் அவன் கண்ணிருந்தும் குருடனே. ஒரு செயல் தவறானது என அறிந்த பிறகு அந்த தவற்றை திருத்திக் கொள்பவனே பகுத்தறிவு படைத்த மனிதன். அதுவல்லாதது மிருகத்திர்க்குச் சமம்.
“அந்த சைவ சித்ததந்தை போற்றும் நாயன்மார்களே பல குலத்தில் பிறந்தவரே. ஆனால் அவர்கள் யாரும் யாரிடமும் வேற்றுமையோ காழ்புனற்சியோ காட்டாமல் யாவரும் சமமே என்று தான் போற்றி வந்தனர்.”
சிவனடியார்கள் அனைவரும் ஒரு குலமே. அதனால்தான் திருநீறணிந்த ஒரு அடியாரைப் பார்த்த மாத்திரத்தில் அவரை வணங்குவர் சிவனடியார். அவர் பல குலத்தில் பிறந்தவர் என்று சொல்வது யார்?. பிற்காலத்தில் வந்த உரையாசிரியர்தானே? அவ்வாறு உரையை எழுதிய காலத்தில் தமிழ் நாட்டில் சாதியம் தலை விரித்தாடியது என்பது தாங்கள் அறியாதது அல்ல. நாயன்மார்கள் காட்டிய மனிதநேயத்தையா இன்று தாங்கள் சாதியம் போற்றுவோரிடம் காணுகின்றீர்? இல்லையெனின், அப்புறம் எதற்கு அந்த சாதியம்? நாயன்மார்கள் வாழ்வியல் நெறி நமக்கு நல்வழி காட்டும் பொழுது அதனைப் பின் பற்றாது சாதியம் போற்றி வாழ்வாதா அறநெறி? 21-ம் நூற்றாண்டிலும் தமிழர் சாதியம் போற்றி வாழ்வது தற்குறி நெறியேயாகும். கற்றோரும் அதனை தற்காப்பது அதை விடத் தற்குறித்தனமாகும். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று முன்னோர் சொன்னது எவ்வளவு உண்மை பாருங்கள்!
“எம்மை பொறுத்த வரை நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அந்த இறைவனே தவறு செய்தாலும் அதை குற்றம் என்று சொல்லும் நெஞ்சம் கொண்டவன் யாம்.”
வினையற்ற முற்றறிவாளனாகிய சிவபெருமானா குற்றம் புரிய வல்லவன்? என்ன அறியாமை இது? எத்தகைய மயக்க அறிவு இது?
வினையுடைய நாம், அவ்வினைக்குரிய மல பந்தத்தால் வரும் அறியாமையை விட்டு நீங்கி பக்குவப் பட்ட ஆன்மாவாக வேண்டும் என்றே சிவபெருமான் நமக்குத் தனு, கரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்துப் படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுகிறான். அத்தகைய பெருங்கருனையாளனை குற்றம் புரிய வல்லவன் என்பது எவ்வளவு பெரிய ஆணவ போக்கு? தாங்கள் கல்விச் செருக்கில் வாழுகின்றீர்கள் என்பதற்கு இதுவே போதிய ஆதாரம். அப்புறம் சாதிய செருக்கு இல்லை என்பதற்கு வேறு ஆதாரமும் வேண்டுமோ?
சாதி உண்டு என்று கூறினால் உடனே சாதியம் பேசுகிறேன் என்றால் எப்படி? இவர் உயர்ந்தவர், அவர் உயர்ந்தவர் என்று இங்கு யாரையும் குறிப்பிட வில்லையே. சாதியம் இருந்தாலும் நாம் யாவரும் சமமே. இதைதான் யாம் வழியுருத்துகிறோம். ஆனால் நம்மில் எப்படி வேறுபாடு காண முடியும் என்றால் நமது பழக்க வழக்கங்களால் மட்டுமே. இங்கு படிப்போ , படிக்காதவனோ என்ற வேறு பாடு இல்லை. நாம் நன்னெரியுடனும் மனிதபிதனத்துடனும் நடப்பதே சிறப்பு.. யாம் என்ன கூறுகிறோம் என்பதை கண்மூடி சற்று நிதானத்துடன் யோசித்தால் புரியும். அதைவிடுத்து எதக்கு பொருள் என்ன அதற்க்கு விளக்கம் என்று கேட்பது அறிவாகாது.
சாதி மனிதனாக தேடி கொண்ட வியாதி. எல்லா மனித இனங்களிலும் இந்த சாதி பிரிவினை உண்டு.
தேனீ நீர் நமது இதிகாசங்களை படிக்க வில்லையா, தீயவர் கேட்டாலும் வரம் அளித்து விட்டு பிறகு அவனை அழிப்பதற்க்குமாறு வழி காணவில்லையா சிவபெருமான்? யாம் எந்த செருக்கிலும் வாழ வில்லையப்பா. அந்த இறைவனே துணை என்று வாழ்பவன் நான். யாம் கூறிய கருத்தின் ஆழம் புரியாமல் பேசுகிறீர் . போகட்டும் உமது அறிவுக்கு எட்டியது அவ்வளவே. ஹரனும் ஹரியும் ஒன்றே அவர்கள் போதனையும் இதுவே. நீர் வணங்கும் சிவ பெருமானின் திருவிளையாடலில் இதை அவர் பகன்று இருப்பாரே. அப்பெருமான் விளிம்பியதையே யாமும் கூறினோம். சிவ ஹரி நாமம் வாழ்க.
ஐயா மன்னரே நிழலில் வாழாதீர். நிஜத்திற்கு வாருங்கள். தாங்கள் சொல்லும் நிலையிலா இன்றைய சாதியப் பிரச்சனை உள்ளது? தங்களின் தனி நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு தாங்கள் பேசுகின்றீர். வெளியே நடப்பதோ தங்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணானவை. அப்புறம் எதற்கு சாதியம்? கேள்வி கேட்பது தங்கள் கூற்றில் உண்மை இல்லை என்பதை உணர்த்தவே. எதைச் சொன்னாலும் அதனை நிறுவ வேண்டும் என்பது நியதி. அதனை நிறுவ முடியாவிட்டால் அது பொய்யென்று புலனாகும்.
எல்லோருக்கும் இருப்பதால் தமிழரும் அவ்வாறே இருக்க வேண்டுமா? தமிழரின் நாகரிக வளர்ச்சி இன்று தொடங்கியது அல்ல. இப்படித் தொன்றுதொட்டுப் பண்பட்டு நாகரிகம் அடைந்த இனத்தைப் பன்னாடையாக்கி விட்டது இந்த சாதியப் பேய். இதனை விட்டுத் தொலைந்தால் தமிழருக்குச் சிறந்ததொரு எதிர்காலம் உண்டு.
புராணங்களும், இதிகாசங்களும் எழுந்தது அம்மா அப்பா விளையாட்டு ஆடவா? புராணங்களின் கூற்றை அப்படியே உள்ளவாறு விழுங்க வேண்டாம். அவை சமய தத்துவ நெறிகளை பாமரருக்கு உணர்த்த வேண்டி எழுந்தவை. சமய அரசியல் நடத்த வேண்டி எழுந்தவை. புராணக்கதைகளை விட்டுட்டு அதன் தத்துவங்களை புரிந்து நாம் வாழ வேண்டும். இப்படி புராணங்களையும் இதிகாசங்களையும் பகுத்தறியத் தெரியவேண்டும். ஹரியும் அரனும் ஒன்றென்பார் ஆனால் அரன் அழிக்கும் கடவுள் என்பார் ஒரு நெறியாளர். அவன் ஆக்கும், காக்கும் கடவுள் என்றால் ஏற்றுக் கொள்ளார் அந்நெறியாளர். எல்லாம் தொன்றுதொட்டு தமிழரை ஏமாற்ற போட்ட தூவேஷங்கள். பாவம் தமிழர்! பொய்யை உண்மை என்று நம்பி அப்பாவிகளாக வாழ்ந்து கெட்டனர்.
ஹரனும் ஹரியும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு.
ஐயா தேனீக்கு என் நன்றியும் வாழ்த்துக்கள் . அழகா அருமையா சொன்னீர்கள். சாதியும் தன் குலமும்தான் உயர்ந்தது என்று நம்பும், தமிழனை தரக்குறைவாக எழுதும் தமிழ் போர்வையில் வாழும் கழிசடைகளிடம் நீங்க என்ன சொன்னாலும் மாற்றி மாற்றி பேசுவார்கள். உங்க சேவை தொடருட்டும்.
சாதியப் பிரச்னை அல்ல தேனியரே. நம் இனம் முக்கியமாக அகற்ற வேண்டியது குடியையும் கல்லாமையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்னமும் நம் மக்கள் குடி மற்றும் காலித்தனம் உள்ளவர்களாகவே இருகின்றனர். இதில் நம் இனம் உலகத்திற்கே நாகரிகம் சொல்லித்தந்த இனம் என்று எப்படி நாம் மார் தட்டி சொல்வது நண்பரே? சாதியினால் நம் இனம் இங்கு தாழ்ந்து போகவில்லை. அவர்களின் கல்லாமையும் குடி வெறியும் , காலித்தனமும் தான் நம் இன்றைய நிலைக்கு காரணம். இந்த நிலையிலும் நம் தமிழர்களில் பலர் நம் பண்பாடு மற்றும் கலாசாரம் அறிந்து அதை பேணி காத்து வருகின்றனர். அவர்களில் யாமும் ஒருவன். யாம் நிழலில் வாழ்கிறேன் என்றால் எமக்கு வெயிலின் அருமையும் தெரியும் நண்பரே. தனி மரம் என்றும் தோப்பாகாது என்பது எமக்கும் புரியும். பரவில்லை அந்த மரம் போல் மற்றவர் பயன் அடைய காய்கனி மற்று நிழல் தருவது போல் எம்மால் இயன்றவரை நல்லது செய்வேனே தவிர தீயவை செய்யேன். அதைபோல் சாதியம் இருப்பதில் தவறில்லை. ஆனால் சாதி யின் பேரில் மற்றவரை இகழ்வதோ சிறுமை படுத்துவதோ கூடாது. இதுவே யாம் வணங்கும் இறைவனின் கூற்றும்.உணர்வீராக.
ஐயா மன்னன் அவர்களே– இதிகாசங்களை படிப்பதில் தவறில்லை ஆனால் அதில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத வற்றை ஏற்பது எந்த வகையிலும் சரி ஆகாது– தற்போது பகுத்தறிவுக்கு ஒவ்வாததை என்னமோ பெரிய உண்மை போல் மற்ற சமயத்தவர்களை மட்டம் தட்டியும் கொலை செய்தும் உலகையே நாசமடித்துக்கொண்டிருக்கும் ஈன ஜென்மங்களை போல் நாமும் இருக்க வேண்டியது இல்லை. அறிவியலுக்கும் பகுத்தரிவுக்குமே முதல் இடம்.
இந்நாட்டில் தமிழரிடையே குடியும் கல்லாமையும் இருப்பது எத்தனை சதவீதம்? இவ்வாறு தமிழரிடம் இருப்பது 10% -க்கும் குறைவு. ஆனால், தமிழன் என்ற போர்வையில், பிறர் செய்யும் களியாட்டங்களையும், காம ஆட்டங்களையும், கட்டப் பஞ்சாயத்தையும் தமிழர் மீது சாத்துவது ஏன்? காரணம் கெட்டது செய்தால் அது தமிழனைச் சாரட்டும். நல்லது நடந்தால் அது பிறரைச் சாரட்டும் என்று பிறரும் தமிழருக்கு குழிப்பறிப்பதுதான். இதைப் புரிந்து கொண்டு இந்நாட்டுத் தமிழன் வாழக் கற்றுக் கொண்டால் நிச்சயமாக நாம் வெற்றி நடை போடுவோம்.
“சாதியம் இருப்பதில் தவறில்லை. ஆனால் சாதி யின் பேரில் மற்றவரை இகழ்வதோ சிறுமை படுத்துவதோ கூடாது. இதுவே யாம் வணங்கும் இறைவனின் கூற்றும்”.
தங்களின் அடையாளத்தைக் காட்டி விட்டீர்கள். வர்ணாசிரமம் பேணப்பட்டாலும் மனித நேயத்துடன் வாழ்வது என்பது நடைமுறையில் 0.001% மட்டுமே. வர்ணாசிரமத்திற்கு சைவத்தில் இடமில்லை. ‘வேண்டும் வேண்டாமை இலான்’ எங்கள் பரமன். அவன் உயிர்குலங்களைப் படைக்கும் முதல் காலக் கட்டத்திலேயே நான்கு வர்ணமாகப் படைத்து உயிர் குலத்தில் பாரபட்சம் காட்டான். அதானால் சித்தாந்த சைவ நெறியில் வர்ணாசிரமத்திற்கு இடமில்லை. அதற்கு இடமளித்ததும் வைதீகச் சைவர். தமிழ்ச் சைவர் இனி சித்தாந்த சைவ உண்மை நெறியறிந்து வாழவும் அதனையே அவர்தம் வாழ்வியல் நெறியாகப் பின்பற்றவும் தமிழன் இப்பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வான். திருநீலகண்டம்.
நம் இந்து மதத்தில் சைவம் வைணவம் என்று வேற்றுமை காட்டுவது அறிவான செயல் அல்ல. இரண்டும் ஒன்றே என்று போற்றுபவரே ஹிந்து . சமிப காலமாக நம் நாட்டில் சைவம் மற்றும் வைணவம் என்று கோஸ்டிகள் உருவாகி நம் ஹிந்து மதத்தை சிறுமை படுத்துகின்றனர். இவர்களின் இந்த அறியாமையை நினைத்தே இறைவனும் மலைத்து பொய் விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஹரன் ஹரி மீது பக்தி உண்டு ஆனால் இந்த சைவ வைணவ கோஸ்டிகள் மீது நம்பிக்கை இல்லை. இந்திய வம்சாவளியை சேர்ந்த நாம் தமிழர்களோ அல்லது மற்ற சகோதர இந்திய இனத்தவரோ தகாத செயல் செய்தால் அது நம் அனைவருமே வருந்த வேண்டுமே தவிர நம்மிடையே பிரிவுகளை ஏற்படுத்தி நம்மையே அழித்துக்கொள்ள கூடாது. அதே வேளையில் நம் இனம் தவறு செய்தாலும் அதை கண்டிக்க வேண்டுமே தவிர ஆதரிக்க கூடாது. இவ்வாறு செய்தாலே நம் இனம் மிளிரும் என்பதில் ஐயமில்லை . இதற்க்கு சைவமாகவோ வைணமாகவோ இருக்க வேண்டும் என்பதில் அர்த்தம் இல்லை.
திலீப்பு! சாதியம் மனிதன் தேடிகொண்ட வியாதி இல்ல அது உன்னை போலே கூட்டம் தமிழனை தந்திரமாக ஆளா போட்ட சதி திட்டம்! தமிழன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாவிட்டால் ஒப்புக்கொள்! அங்க ஏன் தேவை இல்லாததையெல்லாம் எழுதுறே? இனி உனக்கு 7 1/2 நான்தான்! !!!
இவனுங்க கூலிக்கு மாரடிக்கிற வந்தேறி cyber troopers!……சைவ தமிழர்களே,சாதியத்தை மறுத்தால் அவர்கள் சாயம் வெளுத்துவிடும்!
ஒரு மதத்திர்க்கு ஒரு கோட்பாடு. அதன் அடிப்படையில் எழுந்த நெறிகள். அந்த மதத்திர்கென்று ஒரு கடவுள் இருக்க வேண்டும். எந்த மத கோட்பாடும், இறைவன், ஆன்மா, மாயை (ஆன்மாவுக்கு உடல், கருவிக் கரணங்கள், பிரபஞ்ச படைப்பு) என்னும் நித்திய முப்பொருளுக்கான விளக்கம் தர வேண்டும். அதற்கான சாத்திர நூல்கள் இருக்க வேண்டும். அந்த மதத்தில் பக்தியைப் பெருக்க தோத்திர நூல்கள் இருக்க வேண்டும். அந்த மதத்தை வளர்த்த அடியார் பெருமக்கள் இருக்க வேண்டும். இதுதான் ஒரு மதம் என்பதற்கான அடிப்படை இலக்கணம்.
‘இந்து மதம்’ என்று ஒரு மதம் இருந்தால் அதன் கோட்பாடு என்ன?. அதன் நெறி என்ன?. அந்த மதத்தில் கூறப்படும் கடவுள் யார். அந்த மதம் கூறும் கடவுளின் இலக்கணம் என்ன? ஆன்மாவின் இலக்கணம் என்ன? ஆன்மாவிற்கு உடலையும் கொடுத்து அதனுள் கருவிக் கரணங்களையும் பொருத்தி பிரபஞ்சத்தையும் இறைவன் படைத்தது ஏன்? ஆன்மாவின் இலக்கு என்ன? அதை அடைவதற்கு அம்மதம் காட்டும் வழியென்ன? என்பதையெல்லாம் அந்த மத நெறிகள் விளக்க வேண்டும்.
மேற்கூறிவற்றைக் கொண்டு ‘இந்து மதம்’ இதைப் பற்றியெல்லாம் என்ன கூறுகின்றது என்பதை விளக்குங்கள் மன்னவா! தங்களால் முடியாது காரணம் இந்து மதம் என்பது ஒரு மதமல்ல. இந்தியாவில் தோன்றிய பல மதங்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்த ஒரு பெயராகும். அக்காலத்தில் ஜைன பௌத்த சீக்கிய மதமும் இந்து மதத்தில் அடங்கி இருந்தது. இன்று அவர் அவரவர் மதத்தை மீட்டெடுக்கவில்லையா? ஏன் தென்னிந்தியச் சைவரும் அவர்தம் சைவ சமயத்தை மீட்டெடுக்கக் கூடாது?.
தாங்கள் பின்பற்றும் வைஷ்ணவ மதத்தின் கோட்பாட்டை தாங்கள் முழமையாக அறியவில்லை. அப்படி இருந்தால் வேதாந்த கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கூறியவற்றை விளக்க வேண்டும். அதுவும் தங்களால் முடியாது. தங்கள் கருத்துக்களின் வழி தாங்கள் வேதாந்தத்தை அறியாதவர் என்பதை அறிந்துக் கொண்டேன். தங்களின் நிலை இப்படி இருக்க, தாங்கள் கூறும் குற்றச் சாட்டு உண்மையா?
பெருவாரியான தமிழர் சைவ மரபினர். அவர்தம் சைவ நெறியினை தொன்றுதொட்டு அறிந்து அதன் வழி வாழ்ந்தவர். இடையில் வந்த ஆரிய கலப்பில் வைதீக பாண்பாடு சைவத் தமிழர் மீது திணிக்கப் பட்டது. அன்று அதனை எதிர்க்க திராணி இல்லாமல் தமிழர் ஒடுங்கினர். இன்று நிலைமை மாறி விட்டது. தமிழர் அவர்தம் சமய நெறி அறிந்து வாழ வேண்டிய கால கட்டம் வந்து விட்டது. அதனால் தமிழர் சமயத்தால் சைவர் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அவன் இந்துவல்லன். இல்லையேல் இவ்வினம் அவர்தம் பண்பாட்டை முற்றிலும் இழந்து வேற்றொரு இனமாகக் கூடும். அதனைத் தடுத்து நிறுத்தவே தமிழருக்கு சமய அறிவு அதிகமாக தேவைப் படுகிறது. இதனையே தமிழர் செய்தால் பிரிவினை என்பதா?. ஏன் வைணவராகிய தாங்கள் “யாம் வணங்கும் இறைவனின் கூற்றும்” என்று கூறினீர்? அப்படியானால் தாங்களே தங்களைப் பிரித்துக் கூறும் பொழுது பிற தழிழர் அவ்வாறு செய்வது எவ்வாறு தவராகும்? “நம்மிடையே பிரிவுகளை ஏற்படுத்தி நம்மையே அழித்துக்கொள்ள கூடாது” என்பதில் கண்ணும் கருத்துமாகப் பேசும் தாங்கள் ஏன் தங்களை சைவன் என்று சொல்லிக் கொள்ளத் தயங்குகின்றீர்?. அப்படிச் சொன்னால் பிரிவினை. தன்னை வைஷ்ணவன் என்றோ பிராமணன் என்றோ அறிவித்துப் பிரிந்து வாழ்வது பிரிவினை இல்லை! நல்லா ஞாயம் பேசுகின்றீர்கள் போங்கள்.
வாசகர்களுக்கு நேரம் இருந்தால் கொஞ்ச நேரம் ஒதுக்கி இந்த காணொளியையும் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=q2Xx2H43Odw
ஆயிரம் காரணங்கள் நீங்கள் கூறினாலும் எம்மால் அப்படி யோசிக்க முடியாது. ஏனெனில் யாம் சைவரும் அல்ல வைணவரும் அல்ல. இரண்டும் கலந்து உலகத்திற்கே அற்புத மதமாகிய ஹிந்து மதத்தை மதமாக கொண்ட தமிழன். சைவத்தை தமிழர்களின் மதம் என்று தங்கள் கூறுவது நகைப்புக்கு உரியது. சைவம் தான் தமிழரின் மதம் என்று கூறுவது எம்மை பொருத்தவரை அறியாமையே அன்றி வேறு ஏதுமில்லை. வேதாதந்தை அறிந்து இராமல் இருந்தால் உங்களுடன் கருத்து பரிமாற்ற மாட்டேனே யாம். தாங்கள் கூறுவது போல் நமது வேதங்களையும் தோத்திரங்களையும் பற்றி எழுதினால் மத பிரச்சாரமாகி விடும் நண்பரே. நதிகள் எங்கு தோன்றினாலும் அவை இறுதியில் சென்று சேர்வது கடலைதானே. அதுபோல மானிடமும் பல மத தத்துவங்களை கொண்டாலும் யாவரும் போற்றுவது இறைவனையே. என்ன அவரவர் தமக்கு பிடித்த மொழியிலும் மதங்களிளாலும் இறைவனை வணங்கி வருகின்றனர். நம் ஹிந்து மதத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் போன்றவை. ஒரு கண் போதும் என்று யாராயினும் கூறுவாரா நண்பரே. சிவனும் சக்தியும் சரி பாதி என்பது போலத்தான் இவை இரண்டும். இதை உணராமல் சிலர் அறியாமையால் சிவமே என்றும் வைணவமே என்றும் மதி கலங்கி பேசுகின்றனர். இவை இரண்டுமே நமக்கு தாய் தந்தையர் போன்றது. இந்த அற்புதத்தை நமது மதத்தில் அன்றி வேறு மதத்தில் காண முடியாத தத்துவம் . இனி இந்த பிரிவு தனமான கருத்து வேண்டாமே. சிவமா விச்னுவா என்ற பேதமின்றி இறைஅருளை பெறுவோமே.
இது பிரிவு அல்ல. இது அவரவர் சமய நெறி அறிந்து அதன்படி வாழ்வது. கடவுள் என்பவர் சிலையில் இல்லை. உருவத்தில் இல்லை. ஒவ்வொரு ஆன்மாவில் ஒன்றாய், உடனாய் வேறாய் இருந்து செயலாற்றுபவர். இதைச் சொன்னது சைவ சித்தாந்தம். உயிர் என்பது மாயை. பொய்த்தோற்றம் என்று சொன்னது வேதாந்தம். அதனால் இவை இரண்டும் வேறுபட்ட நெறிகளை உணர்த்தும் இரு வெவ்வேறு சமய நெறிகள். இதனை தமிழர் அறியாமல் வாழத்தான் ‘இந்து மதம்’ என்ற சொல் தங்களுக்குப் பயன்படுகின்றது. இப்படிச் சொல்லித்தான் வேத நெறியாளர் கனக்கச்சிதமாக சைவத்தை வடக்கே வாழவிடவில்லை. தெற்கே சித்தாந்தம் என்ற அறிவார்ந்த சமய நூல் இருந்ததால் அதனை முழுமையாக அழிக்க இயலவில்லை. இனியும் சைவம் தமிழரிடேயே வாழும், வளரும். சாதியம் ஒழிக்க சைவமே துணை. இந்து மதம் அல்ல. இதனையறிந்து தமிழர் சைவ சித்தாந்தம் காட்டும் சமய நெறியில் நிற்க நாம் ஒன்றுபடுவோம். மனித நேயத்தை வளர்ப்போம். கடவுள் ஒன்றே என்பதில் தெளிவான அறிவார்ந்த சமய நெறியையைப் பின்பற்றி வாழ்வோம். மூட நம்பிக்கைகள் மலிந்து அதன் வழி இந்து மதம் வியாபாரமாக்கப் பட்டு நம்மை சீரழிப்பதில் இருந்து மீழுவோம். சிவ சிவ.
சைவ சித்தாதம் என்றால் என்ன தேனீ அவர்களே ?
சாதிகள் , இது இன்றைய உண்மை நிலை , சாதியம் ,சாதியின் மறுப்பு , இவை வாழும் மக்களின் , இன்றைய உண்மைநிலையா ,ஆவறவர் மனம் சாட்சி பேசட்டுமே , ஆரியம் சாதியம் வேண்டாம் என்றால் நமக்கேது , சாதியும், சாதியமும் , உயர்ந்த சாதியமும் ,தாழ்ந்த சாதியமும் ,எவரால் உதிர்ந்தது , எதனால் சாதியின் அடிப்படை மும்மாரிப் பொழிந்தது , உயர்ந்தவனும் ,தாழ்ந்தவனும் உதிர்ந்ததினாலே, சாதியின் அடிப்படையில் , சாதியின் அடிப்படை அனைத்தும் பெற்றுக்கொண்டு, சமநிலை பேசும் சுயநலங்களின் கோட்ப்பாடுகள் நமக்கெதற்கு ,சாதியின் அடிப்படையில் அனைத்தும் பெற்றுக்கொண்டு , சமநிலை நம்க்கெதற்க்கு , சாமியம் இங்கே நமக்கு எதற்கு, சாதியமும் ,சாமியமும் ஒன்றா , சாதியம் பலன் இருக்கும் வரை சாதியம் என்ற சாதியும் நிச்சயமே , மனம் புண்பட அல்ல , மாறும் நிலைகள் நோக்கி இன்றும் நாம் [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
தங்கள் எழுத்தில் இருந்தே நீங்கள் ஒரு தீவிர சைவ சித்தாந்தை பின் பற்றுபவர் என்பதை அறிகிறோம். சரி அது உமது நம்பிக்கை. அதில் மற்றவர் தலையிடுவது சரியல்ல.. போகட்டும் நீங்கள் உங்கள் நம்பிக்கையை போற்றுங்கள். அதைப்போலவே மற்றவர் அவர் தம் நம்பிக்கையுடன் வாழட்டும் . அது அவர்களின் நம்பிக்கை. இதில் இது தான் உயர்ந்தது , அது தான் உயர்ந்தது என்ற வாதம் வேண்டாமே.. சிவ சிவ, நமோ நாராயணா, ஓம் சக்தி.
1.இந்து என்றால் என்ன ? இப்பெயர் யாரால் சூட்டபட்டது ?
2.இந்தியா என்கிறபெயர் எத்தனையாம் ஆண்டு சூட்டபட்டது ?யாரால் சூட்டபட்டது ?
3.திராவிடர் என்றால் யாரை குறிக்கும் ? இப்பெயர் யாரால் எந்த ஆண்டிலிருந்து அழைக்கபடுகிறது ?
4.தமிழ் மொழியில் இருக்ககூடிய சிறப்பம்சம் இந்தி /சமசுகிருதம் போன்ற மொழிகளில் உண்டா ?
இந்து ,இந்தியா .திராவிடம்: இவைகளால் சுகபோகமாக வாழ்பவர்கள் ஆள்பவர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள் 1ஆரியர் 2தெலுன்கர் .. மற்ற தேசிய இனங்கள் மண்ணின் பூர்வீக குடிகள் நீதி மறுக்கபட்டு நசிக்கபடுகிரார்கள் ..உரிமைகளை இழந்து சலுகைகளுக்காக கையேந்த வைக்கிறார்கள் ..
எமது கேள்விக்கு சுருக்கமாக சுற்றிவளைக்காமல் பதிலை கூறவும் ..
காயு அம்மு /திலிப் /ஸ்ரீகர முதல்வன்
தமிழர் எழுச்சிப்பறை !
தமிழன் என்ற இனவேச எழுத்தை தொடங்கிய உங்களுக்கே இதுவரை அனைத்து தமிழர்களும் ஏற்று கொள்ள கூடிய வகையில் “உண்மையான தமிழன் யார் ?” என்பதற்கே முழுமையான பதில் தர முடியவில்லை. இதுல இந்து என்ற சமய ஆராய்ச்சியா ? இந்து சமய ஆராய்ச்சி என்றால் ஆரியன்/ஷத்திரியனில் ஆரம்பித்து பிறகு ராமன்/முருகன்/விநாயகர் என தெய்வங்கள் வரை முடிவில்லாமல் போய்கொண்டிருக்கும். ஆரியனை விடுங்க, ஷத்திரியனின் வரலாற்றை அலசினால் இறுதியில் பழைய இடத்திற்கே வந்த மாதிரி “சாதியிதான்” முடியும்.
இந்திய மண்ணின் பூர்வீக குடிகளில், உழைப்பவன் முன்னேறி கொண்டுதான் இருக்கிறான், சோம்பேறிகள்தான் அடுத்தவனை குறை கூறிக்கொண்டு சலுகைகளுக்காக அல்லது அரசாங்கத்தின் ஒதுக்கீடுக்காக கையேந்தி நிற்கிறார்கள்.
1.ஹிந்து என்பது இந்திய மொழி வார்த்தை அல்ல. இந்த பெயர் பர்சியர்களால் சொல்லப் பட்டது. சிந்து என்ற வார்த்தையை அவர்கள் ஹிந்து என்ற உச்சரித்ததின் வழி தோன்றியது தான் ஹிந்து என்ற வார்த்தை. அதுவே பிறகு அங்கு வாழ்ந்த மக்களின் மதத்தின் பெயராகவும் உயிர் பெற்றது.
2.இந்தியா என்ற பெயர் ஹிந்து நதியின் பெயரை கொண்டு உருவானது. இந்த நதி தான் அங்கு வாழ்ந்தோருக்கு புகலிடமாக இருந்தது. ஆரியர்கள் இந்த நதியை சிந்து நதி என்பர் ஆண்டு 4-ம் நூற்றாண்டு BC.
3. திராவிடம் என்பது திருவிடம் என்ற வார்த்தையின் மருவலே. திருவிடம் என்பது இனத்தை குறிக்கவில்லை . வாழ்ந்த இடத்தை குறிப்பதாகும். இந்த வார்த்தை பின்பு தென் இந்தியாவில் வாழ்ந்த தமிழர், மலையாளி, தெலுங்கர் மற்றும் கன்னடரை வட இந்தியாவில் வாழ்ந்த ஆரியருக்கு எதிராக குறிக்கும் வார்த்தையாக அமைந்தது. திராவிடம் தோன்றியது 1945 EV ராமஸ்வாமி நாயக்கர் இவரே இந்த திராவிட அமைப்பு அமைய காரணமாக இருந்தவர்.
4.தமிழ் மொழியும் சமஸ்கிருதமும் மிகவும் பழமையான மொழிகள் இவை இரண்டுமே பல சிறப்பு அம்சங்களை கொண்டவை. இவை இரண்டும் தோன்றிய காலத்தை துல்லியமாக கணிப்பது என்பது அரிதான விஷயம். ஹிந்தி பிறகு வந்த மொழி. தமிழ் மொழி பல வார்த்தைகளை சமஸ்கிருதத்தில் இருந்தே இரவல் வாங்கியது. இருப்பினும் மற்ற திராவிட மொழிகள் போல் இல்லாமல் தமிழ் மொழி தனக்கே உரிய சிறப்புத்தன்மையை இழக்காமல் இன்றும் மிளிருகிறது.
1.இந்து என்றால் என்ன ? இப்பெயர் யாரால் சூட்டபட்டது ?
2.இந்தியா என்கிறபெயர் எத்தனையாம் ஆண்டு சூட்டபட்டது ?யாரால் சூட்டபட்டது ?
3.திராவிடர் என்றால் யாரை குறிக்கும் ? இப்பெயர் யாரால் எந்த ஆண்டிலிருந்து அழைக்கபடுகிறது ?
4.தமிழ் மொழியில் இருக்ககூடிய சிறப்பம்சம் இந்தி /சமசுகிருதம் போன்ற மொழிகளில் உண்டா ?
தமிழர்களின் இனப்பெயர் திராவிடர் அல்ல – “திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்கமன்று”
தமிழ்த்தேசியத்துக்காக தனது வாழ்நாளைக் கழிக்கும் ஐயா மணியரசனார் பற்றி ஈழத்தமிழர்களில் பலருக்கும் தெரியாது. அவரது தமிழ்த்தேசியம் பற்றிய கருத்துக்கள் உலகத் தமிழர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் அவரது கருத்துக்களைப் பல தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன, கீற்று இணையத்தளத்தில் வெளிவந்த மார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் என்ற சிறந்த கட்டுரை உலகத் தமிழர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அதனை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.
ஆரியச்சான்றுகள் காட்டினர்
வரலாற்று உண்மைக்குப் புறம்பாக, தமிழர்களின் இனப்பெயர் ‘திராவிடர்’ என்று பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்பக் கூறினர்.அதற்கான சான்றுகளை உரியவாறு பெரியார் காட்டவில்லை. ஆரியச் சான்றுகளைக் காட்டினார். தமிழரின் அகச் சான்றுகள் காட்டவில்லை.“திராவிடர் என்ற பெயரை மனுதர்ம நூலில் காணலாமே! இராமாயணத்தில் பாரதத்தில் கூட இதற்கு ஆதாரம் உண்டே” என்றார் (ஈ.வெ.ரா.சி பாகம் 1 – பக். 547).அண்ணா கூறிய சான்றுகளும் ஆரியர்கள், பார்ப்பனர்கள் கூறியவையே தவிர, தமிழர்கள் கூறியவை அல்ல.
சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலிய தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகள் அல்ல அவை
ஆந்திர நாயக்கர் ஆட்சியில் திராவிடம்
திராவிடம், திராவிடர், திராவிடநாடு என்று பழந்தமிழிலக்கியம் ஒன்று கூடக் குறிப்பிடவில்லை.
தமிழகத்தின் தலையெழுத்தை
தீர்மானிக்கும் தெலுங்கர்கள்!
தமிழர்கள் ஆந்திர நாயக்க மன்னர்களுக்கு அடிமையாக்கப்பட்டு ஆரியமும் தெலுங்கும் கோலோச்சிய 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்தான் ஆரியர் சூட்டிய “திராவிடர்’’ என்ற பெயரைத் தமிழர்கள் தாங்களும் கூறிக் கொண்டனர்.“சூத்திரர்கள்’’ என்றும் தங்களைத் தமிழர்கள் கூறிக் கொண்ட அடிமை வாழ்வு மேலோங் கிய காலம் அது! வீரம் மிக்க சைவ மரபு பேசிய ஆறுமுக நாவலரே தங்களைச் சற்சூத்திரர் என்று கூறிக் கொண்டார். ஒட்டுமொத்தத் தமிழகமும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து அயலார்க்கு அடிமைப்பட்ட பேரவலத்தின் விளைவுகள் இவை!
தமிழ்நாடும் திராவிடமும் ஒன்றுதானா?
தமிழ்நாட்டைத் தானே திராவிடம் என்று ஆரியர்கள் சொன்னார்கள் அதை ஏற்றுக் கொண்டால் என்ன என்று நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஆரியர்கள் சொன்னால் “திராவிடம்” என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; சங்க காலத்திலிருந்து தமிழர்கள் தமிழ்ச் சான்றோர்கள் தமிழர், தமிழகம், தமிழ்நாடு என்று சொல்லி வந்ததை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? அது என்ன ஆரிய எதிர்ப்பு? அப்படியென்றால் ஆரியர்கள் தமிழர்களை “சூத்திரர்கள்” என்றார்கள் அதையும் ஏற்றுக் கொள்வார்களா?
ஆரியர்கள் தமிழ்நாட்டை மட்டும் திராவிடம் என்று சொல்லவில்லை. ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாட கம், மராட்டியம், குசராத் வரை உள்ள மண்டலத்தை “திராவிடம்” என்றார்கள். “பஞ்ச திராவிடம்” என்றார்கள். அவர்கள் வரையறுப்பின்படி திராவிட மண்டலத்தில் தமிழ்நாடும் ஒரு பகுதி! அறிஞர் அண்ணாவே கூறியுள்ளாரே, “ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே நர்மதை ஆறு ரம்மியமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்று! நர்மதை குசராத்தில் ஓடுகிறது.
இத்தனை குழப்பங்களும் கொச்சைத்தனங்களும் நிறைந்த “திராவிடம்” என்ற சொல்லை ஏற்றுப் போற்றுவதேன்? இன்றும் நிலைத்துள்ள இனியும் நிலைக்கப்போகும் தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கை வழிப்பட்ட இனப்பெயரை – நாட்டுப் பெயரை இரண்டாந்தரமாகப் புறந்தள்ளுவதேன்? அங்கேதான் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது!
பெரியாரும் அண்ணாவும் முன்னெடுத்த திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்கமன்று; தமிழரையும் ஒரு கூறாக இணைத்துக் கொண்ட, தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோருக்கான ஒரு கூட்டு இன இயக்கம்! அதை வெளியே சொல்வது உசிதமல்ல என்று கருதி, திராவிடம் என்றால் அதில் பார்ப்பனர் வர முடியாது, திராவிடர் என்பதுதான் இனப்பெருமை என்றெல்லாம் கூறி, ஒப்பனை வேலை செய்தார்கள்.
திராவிடப் பெயரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
ஆனால் ஓர் இடத்தில் பெரியார் உண்மையை போட்டு உடைத்து விட்டார். சேலம் செவ்வாய்ப் பேட்டையில் 16.01.1944இல் பெரியார் பேசிய மேற்கோளை ஏற்கெனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ளோம். இடப் பொருத்தம் கருதி அதை மீண்டும் சுருக்கமாகத் தருகிறோம்.
”இங்கேயே பாருங்கள். கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்த வரையில் நான் தமிழன் என சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தெலுங்கரும் அப்படியே. எனவே திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்: நம் நாடு திராவிடநாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்” (ஈ.வெ.ரா. சிந்தனைகள் பாகம் 1, பக்கம் 551).
இந்த உண்மையை மறைப்பதற்கான ஓர் உத்தியாகவே, திராவிடர் என்றால் ஆரியப் பார்ப்பனர்கள் வரமாட்டார்கள் என்று பெரியார் கூறினார். பெரியாரின் அக்கூற்றும் வரலாற்று உண்மையோ அல்லது நடைமுறை உண்மையோ கொண்டதன்று என்பதைக் காட்டவே பண்டைக் காலத்திலிருந்து இக்காலம் வரை பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தங்களைத் திராவிடர்கள் எனக் கூறிக் கொள்ளும் சான்றுகளை ஏற்கெனவே வரிசைப்படுத்தினோம்.
அண்ணாவுக்கு இந்த உண்மைகள் தெரியும். ஆனால், திராவிடத்தைக் கைவிட்டால் பெரியார் அதை வைத்தே திமுகவை ஓரங்கட்டி விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும். அத்துடன் பிறமொழி பேசு வோரை இணைத்துக் கொள்ள திராவிடர் என்பது பொருத்தமாக இருக்குமென்றும் அண்ணா கருதியிருப்பார்.அதற்காகப் பெரியாரைப் போல், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும், தமிழனை முட்டாள் என்றும் அண்ணா வசைபாடவில்லை; மாறாகத் தமிழின் பெருமை — தமிழர்களின் வரலாற்று பெருமிதங்கள் — தமிழர் அறிவாற்றல் — திருக்குறள் பெருமை — சிலப்பதிகாரச் சிறப்பு எனத் தமிழையும் தமிழரையும் போற்றிச் சிறப்பித்தே பேசினார்; எழுதினார். அதனால்தான் இலட்சக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டனர்.நன்றி வியாசன்
இலிங்கம் ஆண்குறியென்றும், ஆவுடையார் பெண்குறியென்றும் பதிவிட்டு இன்று சித்தாந்தம் என்றால் என்னவென்று கேட்பது தற்குறித்தனமாகத் தெரியவில்லை?
இருந்தாலும் விளக்குகிறேன்.
ஒவ்வொறு சமயத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு. அதன் அடிப்படையில் எழுந்த நெறிகளும் உண்டு. இதனை விளக்கும் நூலோ அல்லது நூல்களோ அச்சமயதிற்கு முதல் நூலாகும். இந்நூலின் கருத்தானது இறைவனின் இலக்கணம், ஆன்மாவின் இலக்கணம், உலகப் படைப்பினை விளக்கவும் வேண்டும். இப்படிப் பட்ட கருத்தினை விளக்க உலகப் படைப்பின் முன்னே இருந்த ஒருவனால்தான் முடியும். அப்படிப்பட்ட ஒருவன் வினையற்ற முற்றறிவாளனாக இருக்க வேண்டும். சைவத்தில், படைப்பிற்கான விளக்கத்தைச் சிவ ஆகமங்கள் விளக்கும். பிறப்பும் இறப்பும் அற்ற சிவன் சிவாகமங்களின் வழி முத்திப் பெற்ற விஞ்ஞானகலர் ஆன்மாவாகிய அனந்தேசுவரருக்குக் கருத்தளவில் உணர்த்த அவ்வழியே சீகண்ட உருத்திருக்கு உணர்த்த அவர் நந்தியெம்பெருமானுக்கு உணர்த்தினார். பிரகிருதி மாயையில் (அதாவது நாம் வாழும் உலகமும் பிரபஞ்சத்தில் இருக்கும் இதர உலகங்களும்) பக்குவப்பட்டு வினை நீங்கி சிவன் திருவருள் கூடிய ஞானிகளுக்கு அவ்வாகமதத்தின் உட்பொருளை உணர்த்தினார் நந்தியெம்பெருமான். அவ்வாறு சிவபெருமானால் அருளப் பெற்ற நூல்களே சிவ ஆகமங்களாகும். அதுவே சைவத்திற்கு திருமறை நூல். முதல் நூல். அந்நூல் விளக்குவதே சைவ சமயத்தின் நெறியாகிய சித்தாந்தம் ஆகும். சித்தாந்தத்தை ஒழுங்குப் படுத்தி விளக்கும் நூல்களே மெய்கண்டாரின் வழி வந்த 14 மெய்கண்ட சாத்திர நூல்கள். அந்த தத்துவ நெறிகளை பக்திமார்க்கத்தின் வழி விளக்குவது தேவாரத் திருமுறைகள். இச்சைவ சமயத்தை மீட்டெடுத்து வளர்க்க வந்த அடியார் பெருமக்களே 63 நாயன்மார்கள். இவை அனைத்தும் இருக்கும் சமயமே, முழுமை பெற்ற சமயமாகும். அதுவல்லாது வெறும் திருமேனி வழிபாடு கொண்ட நெறிகள் முழுமைப் பெற்ற சமயம் ஆகா.
அதனால்தான் திருமேனி வழிபாடு என்பது சமய நெறியில் பாலர் பள்ளி நிலை என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். இதனையறியாது பாமர நிலையில் நின்று உன் சாமி பெருசா என் சாமி பெருசா என்று சண்டையிட்டுக் கொள்ளும் பாமரர் பக்குவப் பட வேண்டியே, சைவம் சரியை கிரியை யோகம் அதன் வழி பெறும் சிவஞானம் என்னும் நான்கு படிமுறைகளை வகுத்துக் கூறி ஆன்மா சிவத்தை சென்று அடைய வழியைக் கூறும்.
இதுவே சைவ சமயத்தின் சுருக்கம். சைவ நெறிகளை கற்க அதன்படி நிற்க, கற்றதை பிறருக்கு கற்பிக்க வேண்டும் என்பதே சிவப்பணி என்றுணர்ந்து இதனைச் செவ்வனே செய்து வருகிறேன். இவையெல்லாம் எமது சித்தாந்த ஆசானாகிய முனைவர் திரு. நாகப்பன் ஆறுமுகம் அவர்களிடம் இடை விடாது தொடர்ந்து 5 வருடமாகப் பெற்றச் சித்தாந்தப் பயிற்சியும், சமய அறிவுமாகும். சிவ சிவ.
ஒரு நெறியறிந்து அதில் நின்று முறையாக ஆன்மீகத்தில் மேம்படுவது தீவீரமாகாது. இதுதான் முறையான சமய வாழ்க்கை என்று அறிந்து பின்பற்றுவதே தெளிவான நிலை. அதுவன்றி மூட நம்பிக்கைகளில் வீழ்ந்து அதுதான் மதம் என்று நம்பிக்கையோடு சமய வியாபாரிகளின் பின்னே நடை போடும் மாக்களை, மக்களாக திசை திருப்புவதும் சிவப்பணியேயாகும். அதுவே எம்பணி..
‘இந்து’ மதம் என்று வேதத்திலோ, சைவ நூல்களிலோ இல்லை. இந்து என்பது சிந்து என்ற வார்த்தை மருவி ஹிந்து என்ற நிலப்பரப்பைக் குறித்தது. அதிலிருந்துதான் ‘ஹிந்துஸ்தான்’ வந்தது. இது ஒரு நிலப்பரப்பின் / நாட்டின் பெயர். ஒரு மதத்தின் பெயரல்ல. ஆங்கிலேயன் வந்த பிறகு கொடுக்கப் பட்ட பெயர் ‘Hinduism’. இந்து என்ற நாட்டிற்குரிய மதங்களின் ஒட்டுமொத்தப் பெயர் ‘இந்து மதம்’. எப்படி ஆரம்பத்திலிருந்த ‘Hindu Ocean’, ‘Indian Ocean’ என ஆகியதோ அதைப் போலவே இதுவும் என்பதை அறிக. அதை விடுத்து பொய்யானவற்றை இங்கே எழுதி பிரச்சனையை விகாரமாக்காதீர்கள். அது நம் மீது நாமே எச்சில் துப்பிக் கொள்வதற்கு ஒப்பாகும். .
தேனீ , நம் இந்து மதத்திற்கும் வேற்று மதத்திற்கும் என்ன வேறு பாடு தெரியுமா? மற்றமதங்கள் யார்தொர்த்று வித்தாரோ அவர்களின் பெயரை கொண்டே மதத்தின் பெயர் உறவானது. ஆனால் இந்து மதம் அப்படியல்ல. அது மற்றவர்களால் பெயரிடப்பட்ட மதம். சைவமும் வைச்னவமும் ஒன்றே என்பதை குறிப்பது தான் இந்து மதம் . ஹரனும் ஹரியும் ஒன்ருசெர்ந்தடே இந்து மதம். இதையே ஹரனும் ஹரியும் பகன்றனர். இது புரியாமல் சிலர் அறிவீனமாக சைவம் வைஷ்ணவம் என்று பேசுவது அவர்களின் அறியாமை. நமது இந்து மதத்தை சைவம் வைஷ்ணவம் என்று பிரித்து பேசுவது மடமையின் உச்ச கட்டம்.
தேனீ அவர்களே, ஒருவரின் கூற்றை மட்டும் வைத்து கொண்டு உலகை அளந்து விட்டேன் என்பது, அறியாமை. “இலிங்கம் ஆண்குறியென்றும், ஆவுடையார் பெண்குறியென்றும் பதிவிட்டு இன்று சித்தாந்தம் என்றால் என்னவென்று கேட்பது தற்குறித்தனமாகத் தெரியவில்லை?” என்று யாம் எழுதியதை மறு பதிவு செய்ததிற்கு நன்றி. இதை நான் உருவாக்கவில்லை. இதையும் சிவம் தான் உருவாக்கினார். அவரைத்தான் நீங்கள் கேட்டக்க வேண்டும், உட்பொருள் விளங்க. யாம் வெறும் கருவியே, தருவியவர் அவரே. மேலும் நீங்கள் உங்கள் தேடலை ஒரு வட்டத்திற்குள் புதைக்க முனைவதால் வந்தா கோளாறு இது. ஆன்மாவை சுத்தம் செய்யும் ஆன்மீகத்திற்கு மதங்கள் தேவை இல்லை. இதை விளக்கினால் என்னை கொலையே செய்து விடுவீர்……
அறிவீனம் இருப்பது சமய நெறிகளை அறியாமல் கட்டப் பஞ்சாயத்துச் செய்வோரிடம். வெவ்வேறு சமய கோட்பாடுகளையும், நெறிகளையும் கொண்ட சமயங்களை ஒன்றென்று சொல்வது அறிவுடைமையா? ஏன் இந்த அறிவீனம்? தமிழர் சமய நெறி அறியாமல் வாழ்வதுதான் இதற்குக் காரணம். சைவம் சித்தாந்தம் சொல்வதென்ன. பரம்பொருள் ஒன்றே. மற்றையவனைத்தும் உயிர் வர்க்கமே. இதைத்தான் வேதாந்தமும் ‘ஏகம் சத்’ என்று சொல்கிறது. பரபிரம்மம் ஒன்றே உள்பொருள் என்பதாகும். மற்றவை அனைத்தும் சீவான்மாவே. இதில் அரியும் அரனின் நிலை என்னவென்பதை திருநாவுக்கரசர் இப்படிச் சொல்கிறார்:
“முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே
(தி. 6:65:9)
இதன் பொருள் தருமை ஆதீனம் கொடுத்தவாறு:
யாவரினும் முற்பட்டவனாய், மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு, ‘அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய்’, முத்தலைச் சூலம் ஏந்தியவனாய், முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும் தந்தையாய், பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய், புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய், செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
இதனையேத்தான் சித்தாந்தமும் கூறுகின்றது. சிவன் ஒருவனே பரம்பொருள். மற்றவையனைத்தும் ஆன்ம வர்க்கமே. பிரம்மா, திருமால், உருத்திரன் அனைவருமே முத்திப் பெற்ற விஞ்சானகலர் ஆன்மாக்கள். அவர் சிவ பெருமானால் அதித்திட்டு படைத்தல், காத்தல் ஒடுக்கும் தொழில் செய்வோர். இதைத்தான் இறையருள் பெற்ற திருநாவுகரசரும் அருளினார். இதுதான் சமய நெறி என்பது.
இதற்குப் புறம்பாக அரியும் அரனும் ஒன்றென்று சமய அறிவு இல்லாமல் ஆதமற்ற கூற்றுக்களைச் சொல்லி பாமரரை எவ்வளவு நாளைக்குத்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பீர்? பிரம்மாவும் திருமாலும் ஆன்ம வர்க்கம் என்பதையும் சிவன் ஒருவனே ஒப்பிலாத பரம்பொருள் என்று மேலும் திருநாவுக்கரசர் இப்படிச் சொல்வார்:
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.
(தி. 5:100:3)
இதன் பொருள் தருமை ஆதீனம் கொடுத்தவாறு:
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் (ஈசன்) மட்டுமே.
மேற்கூறியதே பிரம்மன், திருமால், இந்திரன் அனைவரும் பல யுகங்களில் பலகோடி பிறப்பு இறப்புக்குக்கு உள்ளான ஆன்ம வர்க்கமே என்பதாகும். பிறப்பும் இறப்பும் இல்லாத சிவன் ஒருவனே யாருக்கும் ஒப்பு நோக்கிக் காண இயலாதவன்.
இவ்வளவு உண்மை ஆதாரங்களை எடுத்தியம்பிய பிறகும் அரியும் அரனும் ஒன்றே என்ற பொய்யுரையை நிறுத்துங்கள். இல்லையேல் யாம் வேறு விதமாக எழுத வேண்டி வரும்.
சிவனும் அனுமாராக அவதாரம் எடுத்தவர் தானே. எல்லாம் வல்ல இறைவனால் எல்லாம் முடியும் போது எம்பெருமான் ஈசனால் அவதராம் எடுக்க முடியாத? என்னய்யா கூறுகிறீர்? ஹரனும் ஹரியும் ஒன்றே என்பதை மறுக்கும் நீர் , உரைப்பதே பொய்மையின் உருவம்.
திருநாவுக்கரசர் ஒரு சைவ சித்தாந்தி. அவர் இவ்வாறு கூறாமல் வேறு எப்படி கூறுவார்? அவரே முதலில் சமணத்தை விரும்பி ஏற்றவர், பிறகு நோய் பட்டு அது சிவ பெருமானால் குணமானதிர்க்கு பிறகு தான் சிவனை போற்ற தொடங்கி பெரும் பெற்றார். அவரின் இந்த கூற்று எந்த வியப்பையும் தரவில்லை.
திருநாவுக்கரசர் சித்தாந்தி. அவர் சைவர். இறையருள் பெற்றவர். அவர் சொல்வது மெய். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பவரிடம் எப்படி இருக்கும் உண்மை. உண்மையல்லாத ஒரு சொற்றொடரை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்ட வேண்டிய அவசியம் சைவத்திற்கு இல்லை.
திருநாவுக்கரசர் அவ்வாறு சொல்வதற்கு முன்னமே சிவ
ஆகமத்தின் ஞானபாதமாகிய சித்தாந்தத்தின் வழி உணர்த்தப் பெற்றதையே திருநாவுக்கரசர் அறிவுறுத்தினார். அவ்வாகமங்கள் சிவபெருமானால் உணர்த்தப் பெற்றவை. . சிவ பெருமான் உணர்த்தியது பொய்யாகுமா? காமாலைக் கண்ணனுக்கு அனைத்துமே மஞ்சளாகத்தான் தெரியும். பொய்யுரைப்போருக்கு அனைத்துமே பொய்யாகத்தான் தெரியும். சிவபெருமான் உணர்த்திய சிவாகமம் உட்பட. பொய்யாகுமா? இப்படிச் சொன்னால் எதற்கு ‘அரியும் அரனும் ஒன்று’ என்ற ஆதாரமில்லாத கூற்றைச சொல்ல வேண்டும்? சைவத்திற்கு எதிரான நெறியாளர் தமிழருக்கு வெண்ணெய் தடவி வைத்திருப்பது இவ்வாறே.
சிவன் அவதாரம் எடுப்பது என்பது பாசுபத சைவத்தின் புராணக் கூற்று. சிவாகம சைவ சித்தாந்தத்தில் சிவன் அவதாரம் எடுக்கும் கோட்பாடு இல்லை. அவதாரம் என்ற சொல்லின் பொருளை புரிந்துக் கொண்டு உபயோகிக்க வேண்டும். சிவாகமத்தில் சொல்லப்பட்ட 25 சிவ மூர்த்தங்களும் அவன் திருவருளைக் கொண்டு எடுத்த தூய திருமேனி. அது மாயா காரியத்தினால் ஆனது அல்ல. அத்திருமேனி மீண்டும் அவன் திருவருளிலிலேயே ஒடுங்கும். அத்திருமேனிக்குப் பிணி மூப்பு சாக்காடு இல்லை. அதனால் அது அவதாரம் அல்ல. சிவனின் அவதாரம் என்னும் கருத்து சிவாகமத்தில் இல்லை. அதானால் சமய நெறி அறிந்து பேச வேண்டும். அதுவல்லாமால் மனம் போக்குக்கு கூப்பாடு போடுபவரின் நிலை கதிரவன் கதிரை காண இயலாத ஆந்தையின் நிலையே. கண்ணிருந்தும் குருட்டு நிலை. சிவ சிவ.
என்ன மண்ணு! மேடை கோணையா???