விஜய்சேதுபதி படத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக தனிமைச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்உள்பட 7 பேர் விடுதலைக்காக ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.
இவர்களின் விடுதலைக்கு அண்மையில் நடிகர் சத்யராஜ் குரல்கொடுத்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்காக விஜய்சேதுபதியும்குரல் கொடுத்துள்ளார்.
25 வருடம் சிறை என்பது கொடுமையான விஷயம். அவர்களுக்காக நடக்கும் இந்த பேரணியில் நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், அதோடு பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
செத்தவனே எப்படி மீண்டும் சாகடிப்பது டிளிப்பு!
அட போய்யா புளித்த கேசரி.
என்ன தேனியாரே, சைவத்திலேயே இப்போது பிரிவை காட்டுகிறீர் ! சரி போகட்டும். நாயன்மார்களையும் அவர்களை போன்ற உண்மையான சித்தந்திகளையும் யாம் எப்போதும் மதித்து வருவதில் ஐயமில்லை. ஆனால் அவர்களும் நம்மை போன்று மானிடரே அன்றி தெய்வம் இல்லை. அவர்களை இறைவன் ஆட்கொண்டது , அவர்களுக்கு காட்சி அளித்தது எல்லாமே அவர்கள் சாதாரண மானிடராகிய நம்மை விட உயர்ந்தவர்கள் என்பதும் உண்மையே. அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று யாம் ஒரு பொது சொல்ல வில்லை. அதே சமயம் அவர் போற்றும் இறைவனே உயர்ந்தவர் என்று எல்லோரும் சொல்வதையே அவர்களும் சொல்கின்றனர் என்பதையே யாம் சுட்டிக் காட்டினோம். எம்மை பொருத்தவரை எல்லாம் வல்ல இறைவனால் யாவும் சாத்தியமே. அதனால் நீங்கள் குறிபிடுவது போல் எம் பெருமான் சிவனால் அவதாரம் கிடையாது என்பதை யாம் ஏற்றுக் கொள்வதில் தயக்கமே.
தயக்கம் என்பது சமய நூலாகாது! நாம் எதைச் சான்றாக கொண்டு உண்மையை நிறுவ வேண்டும்? ஒரு சமயத்தின் முதற் நூலைக் கொண்டுதான் ஒரு சமய கோட்பாட்டையோ அல்லது அதன் வழி தோன்றிய நெறிகளையோ நிறுவ வேண்டும். தமிழர் என்பாருக்கு அவர்தம் சமய நெறி தெரியாததால் தெருவில் போவோர் வருவோர் எல்லோரும் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அதுதான் சமயம் என்று வாழ்வார். கிறித்துவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ அவர்தம் சமயத்தைப் பற்றிய சந்தேகம் எழுமின் முதலில் அவர்தம் திருமறையைத்தான் நோக்குவார். தமிழரில் 98% சதவீதம் அவர்தம் சமய கேள்விகளுக்குப் பதிலை எங்கே தேடுவது என்று கூட அறியார். அப்புறம் தமிழருக்கு அறிவார்ந்த சமய நெறி இருப்பதை எப்படி அறிவார். இங்கேதான் ‘இந்து மதம்’ என்று சொல்லி மிக சுளுவாக தமிழரை அவர்தம் சைவ சமய நெறியறியாது வைதீக நெறியை இந்து சமய நெறியென்று தமிழர் மீது நிர்பந்தமாகப் புகுத்தி தமிழரை அவர்தம் சமய நெறியறியாது வைத்திருப்பது. இதன் காரணமாகவே இங்கே பலர் கருத்துரையாடினும், தங்களின் ‘அரியும் அரனும் ஒன்றெனும்’ கூற்றுக்குச் சமய நெறியின் அடிப்படையில் தெளிவான மறுமொழி கொடுக்க இயலாமல் திணறி தேவை இல்லாமல் வசைப்பாடி கருத்தாடுவது. இங்கே சொல்வது செம்பருத்தி வாசகர்களுக்கும்தான். தாங்கள் தங்கள் சமய நெறியை அறிவாமல் தூங்கிக் கொண்டிருந்தீர்களானால் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் உங்கள் தொடையில் கயிறு திரித்து விட்டுப் போவார்கள். இனியாவது தமிழ் அவர்தம் சமய நெறியறிந்து வாழ்வாங்கு வாழ்வது அவசியம்.
“சைவம்” என்பது இந்திய துணைக் கண்டம் முழுவதும் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சமயம். அதில் பல்வேறு பிரிவுகள் உண்டு. இதில் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த தமிழர்களுக்கு அவர்தம் ஞானத் தெளிவினைக் கண்டு சிறப்பாக சிவ பெருமானால் அருளப் பெற்றது சிவாகமங்கள். இதுவே சித்தாந்த சைவம் எனப்படும். இது நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுந்த சமயம் அல்ல. அறிவார்ந்த சமய கோட்பாடுகளைக் கொண்ட சிவாகமத்தின் அடிப்படையில் எழுந்த பண்பட்ட சமயம். அச்சிவாகமங்களே சித்தாந்த நெறிக்கு முதல் நூல். அதனை ஒழுங்குப் படுத்திச் சொல்வதே மெய்கண்டார் வழி தோன்றிய 14 மெய்கண்ட சாத்திரங்கள். சைவ சித்தாந்தத்தை இறைபக்தி வழி சைவர்களுக்கு உபதேசித்ததே நால்வர் தேவாரத் திருமுறை. தமிழர் என்பாருக்கு ‘நாலு பேர் போன வழியில் நாமும் போவோம்’ என்று சொன்னது திருஞானசம்பந்தர், திருநாவுக்கசர், சுந்தர மூர்த்தி நாயனார், மணிவாசகர் காட்டிய மெய்நெறி வழியே என்பது கூட தெரியாமல் தமிழரின் சைவ சமயத்தைச் சாகடிக்க முற்பட்டது ‘இந்து மதம்’ என்ற போர்வையில் வந்த வைதீக நெறி. இனியும் தமிழர் தங்களை ‘இந்து’ என்று சொல்லிக் கொண்டு பாழுங் கிணற்றில் வீழ்ந்து சாக வேண்டாமே. இங்கே பாழுங்கிணறு என்று கூறியது பிறப்பு இறப்பு என்ற ‘பிறவிக் கடல்’ என்பதையும் அறிவீர்.
வேதாந்தம் அறிவோம் என்று சொன்ன மன்னனுக்கு சைவத்தில் பல பிரிவுகள் உண்டு என்பதைக் கூட அறியாது சமய நெறி வாதத்திற்கு எம்முடன் மோதியது வியப்பளிகிறது. இனியும் பொய் சொல்ல வேண்டாமே.
நாறாயனா நாறாயனா ..கறிபோல் கரிபோல் ..
நால்வர் பெருமக்கள் மானுட உருவில் வந்த தெய்வக் குழந்தைகள். சிவபோத நிலை அடைந்த மானுட குருமார்தான் வினை நீங்கிய நிலையில் முற்றறிவு கொண்டு மானுடருக்குக் குருமார்களாக விளங்க முடியும். அப்படி விளங்கிய அறிவுத் தெளிவின் வெளிப்பாடே தேவாரத் திருமுறையாகும். இத்தேவாரத் திருமுறையை 12-ம் நூற்றாண்டிலேயே ‘தமிழ் வேதம்’ என்று கூறியவர் திருத்தொண்டர் புராணத்தை அருளிய சேக்கிழார் பெருமான். கற்சிலையில் இருக்கும் தெய்வம் மானுடருக்கு ஏதும் போதிக்க இயலாது. இறையருள் பெற்ற மானுடரே வினை நீங்கி மானுடருக்கு குருவாக வந்து ஞானம் போதிக்க முடியும். இது ஆன்ம குரு என்பதாகும். சிவனே காட்சியளித்து நயன அல்லது திருவடி தீட்சையினால் வினை நீக்கி முத்தியளிப்பது மானுடரில் பக்குவப் பட்ட மானுடர் பெறும் முந்தவப் பயன். சிவனே வந்தருளுவது ஞானகுரு என்ற நிலையைக் குறிக்கும். தமிழர் அவர்தம் சமய நெறியறிந்து வாழ்வோம்.
ஹ..ஹ.. நல்ல கூத்து பொங்கல் தேநியரே. வேதாந்தம் அறிந்ததனாலே யாம் சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இன்னார் இவ்வாறு கூறினார் என்று எந்த சித்தந்தியையும் வைத்து யாம் பதில் கூறவில்லை நண்பரே. ஏனெனில் ஹரனும் ஹரியும் ஒன்றே என்று நம்புகிறேன், வழி படுகிறேன் . அதனால் ஹரி ஹரன் பிரித்துப் பார்ப்பதே நம்மை பாவம் வந்து சேரும். . உமது வாதத்திற்கு மறுப்பு வாதம் செய்தலும் அது ஹரி ஹரன் எம் பெருமானை நானே நிந்திப்பதாகி விடும் நண்பரே. அவ்வாறு செய்யலாகாது. ஹரியும் ஹரனும் ஒன்றே. அதை அறியாதவர் வாயில் மண் . சிவ சிவ, நமோ நாராயணாய .
கற்சிலையை கல்லாக பார்த்தால் அது கல்லே. அதையும் தெய்வமாக நினைத்தால் அது போதிக்கும். இதுவே சிவனின் லிங்க வடிவாமாகும்.
ஐயா மன்னன் அவர்களே–தயவுசெய்து பகுத்தறிவோடு பேசுங்கள்-உங்களின் பத்தாம் பசலி பேச்சு அறிவியலுக்கு ஒவ்வாதது. எனக்கும் காது புளித்து விட்டது. ஒரு காலத்தில் விவிலிய நூல் உண்மை என்று இருந்தது– ஆனால் அறிவியல் வளர்ந்து ஆராயப்பட்டு பல விஷயங்கள் அறிவுக்கு ஒவ்வாதததின் காரணமாக பலர் கிறிஸ்துவத்தை ஒதுக்கி விட்டனர். இந்து சமயத்திலும் பல அறிவுக்கு ஒவ்வாதது இருக்கின்றது– நல்லதை எடுத்துக்கொள்வோம்– மற்றதை கண்டு கொள்ள கூடாது. ஆண்டவனுக்கு எல்லாம் தெரியும் அப்படி ஆண்டவன் இருந்தால்- ஆண்டவன் என்றுமே தன்னை தொழ சொல்லவில்லை – சிலரின் சுக வாழ்க்கைக்கு நம்மை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி அடிமைகள் ஆக்கி விட்டனர். தற்போது ஆண்டவனின் பெயரில் அநியாயம் பண்ணும் ஈன ஜென்மங்களுக்கும் நமக்கும் வேறுபாடு இருக்கிறது. அவங்கள் போல் நாம் மடத்தனமாக பேசுவது குருட்டுதானம். இந்து சமயத்தில் உள்ள நல்லவற்றை எடுத்து கொள்ள லாம்– ஒளவையாரின் ஆத்துச்சூடி திருவள்ளுவரின் திருக்குறளே நமக்கு எவ்வளவோ மேல். தங்களின் மன திருப்திக்காக சிலைகளை கும்பிடுவது தவறில்லை–ஆனாலும் பல அறிவுக்கு ஒவ்வாதவை கோவில்களில் நடத்தப்படுகின்றது. பாரதியார் எவ்வளவோ சொல்லியும் நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது அறிவிலித்தனம். உங்களுடன் வாக்கு வாதத்தில் ஈடு பட எனக்கு விருப்பமில்லை. ஒன்று மட்டும் சொல்ல முடியும்–உங்களுக்கும் அறிவியலுக்கும் வெகு தூரம்.
ஐயா தேனீ அவர்களே, தாங்கள் தான் ஒரு முறை சிவன் தனித்து நிட்பதாகும், அதற்க்கு எதுவும் (பார்வதி) தேவையில்லை, சைவ சித்தாந்தம், ஆகமங்களின் வழி வந்தது, சிவம் “ஒன்றே” என்று கூரி, பிறகு ஆகமங்கள் 3 என்று உரைத்து, என்னிடம் நன்றாக வாங்கி கட்டியும், இன்னமும் தெளிவு பெறவில்லையோ ? முதலில் உங்கள் குருமார்களை மாட்ருங்கள். எல்லாம் அவர்களின் புலம்பல்களை உங்கள் மீது எட்ட்ருகிரார்கள்…உலகத்தில் யார் வேண்டுமானாலும் கடவுளை தேடலாம், அவரின் அனுபவ நூல்கல் அறிவின் விளிம்பு ஆகா !
ஸ்மார்த்தர்கள் வாழ்வாதாரத்திற்க்காக சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சேர்த்து ‘இந்து மதம்’ என்ற பெயரில் செய்த மோசடியில் தமிழருடன் சைவமும் வீழ்ந்தது. இதை யாழ்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் அன்றே வன்மையாகக் கண்டித்தார். இன்று சிந்திக்க மறுக்கும் சமூகமாக மாற்றப்படுள்ள இந்து தமிழர் எப்படி அறிவார் சைவத்தின் பகைவரை? நீரின் மீது முற்றுமாக பரவி நிற்கும் பாசியைப்போல் தமிழரின் அறிவுக் கண்கள் மறைத்திருக்கும் போது சைவமும் தமிழும் தாழ்ந்துதுள்ளது என்பதை நேற்று டத்தோ சரவணன் மலேசிய இந்து சங்க பொதுக் கூட்டத்தில் இப்படிச் சொன்னாராமே: :
“லிட்டல் இந்தியாவில் இருக்கும் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் தமிழில் பிராத்தனை செய்யும்பொழுது அல்லாவுக்கு விளங்குகிறது. பக்கத்தில் இருக்கும் தேவாலயத்தில் தமிழில் பிராத்தனை செய்யும் பொழுது இயேசு கிறிஸ்துவுக்கு விளங்குகிறது. ஆனால் தமிழர் தெய்வமாகிய முருகனுக்குத் தமிழில் பிராத்தனை விளங்கவில்லையே, ஏன்? ”
“வாழும்போது திருமுறை பாட வேண்டிய வீட்டில் இறந்த பிறகு போய் பாடுகிறோம்”
அங்கு கூடியிருந்த 2,000 -க்கும் மேலானவரை நோக்கிக் அப்படி கேட்டப் பொழுது ஒரே ஒரு பெண்மணியைத் தவிர வேறு யாரும் கை தட்டவில்லையாம்! அங்கே இருந்தவர்களுக்குத் தமிழ் உணர்வு இல்லையோ? அல்லது அவர் தமிழர் அல்லவோ?
இதுதான் இந்து தமிழரின் இன்றைய நிலை.
இதுதான் இன்றைய தமிழர் சமய அறிவு நிலை. இதிலிருந்து தெரியவில்லையா தமிழர் என்பார் இன்று சிந்திக்க மறுக்கும் சமூகமாக மாறிவிட்டது. அதில் டத்தோ சரவணன் போன்றோர் விதிவிலக்கு.
‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று திருநாவுக்கரசர் கூறுவார். ஒரு நெறியில் நிற்கத் தெரியாதவருக்கு ஏது குறிக்கோள்? ஏது இலக்கு? நெறியும் அறியாது பதியும் அறியாது வெறும் நம்பிக்கை நட்டாற்றில் விட்டு விடும். இதுதான் இந்து தமிழர் என்பார் இன்று அனுபவிக்கும் ஊழ்வினைப் பயன். அனுபவி ராஜா அனுபவி.
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதை யாமும் அறிவோம். கற்சிலை வழிப்படல் என்பது சரியை, கிரியை நெறியில் நின்று புற வழிப்பாடு செய்யும் வரையே. அதையும் தாண்டி உருவ வழிபாடு இல்லாமல் அகப்பூசை செய்யும் யோக நிலையுலும், ஞான நிலையிலும்தான் சிவபெருமான் அடியவர்களுக்கு ஞான குருவாக காட்சியளிப்பான். இதுவும் தெரியாமல் அறியாமல் திருமேனி வழிபாடு செய்வதேனோ? பாவம் சமய நெறியின் தத்துவங்களை அறியாமல் மன்னர் எல்லாம் தன்னை பக்தனாக காட்டிக் கொள்வதுதைப் பார்த்துச் சிவபெருமானே நாணிச் சிரிப்பார். சிவ சிவ. .
அப்படியா தமிழ் தமிழரே. சரி போகட்டும் எமக்கும் அறிவியலுக்கும் தூரம் என்றும். உமக்கு ரொம்ப பக்கம் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியலும் விடை காண முடியாத ஒன்று தான் ஆன்மிகம். திருக்குறளும் ஆத்திசுடியும் மேல் தான் என்பது உண்மையே. உலகில் எத்தனை பேர் இதை பின்பற்றுகின்றனர். நீர் கூட பின்பற்றுகிரிர் என்பது சந்தேகமே . உமது வாதமும் அறிவிலியின் உச்சமே.
அய்யா தேனீ, நீர் குறுவது போல் சைவம் ஒன்றும் மகத்தானது அல்ல. அதிலும் பல முரண்பாடுகள் உள்ளன. காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் நீர் சைவத்தை நீர் மேலாக வைத்து ஹிந்து மதத்தை எள்ளி நகை யாடுகிரிர். போகட்டும் . உமக்கு சைவம் சொல்லிகொடுத்தது அவ்வளவே. எம்மை கண்டு எம்பெருமான் ஒருபோதும் நானா மாட்டார். மாறாக உம்மை போன்றோரை நினைத்து வருத்தமே கொள்வார். யாம் பகன்றதை எம் பெருமான் சிவனே உமக்கு ஒருநாள் புலப்படுத்துவார். அது வரை பொருத்து இரும்.யாரையா உமக்கு போதித்து! இறைவனை நீர் உருவமாகவும் அருவமாகவும் வழிபட்டாலும் அவரின் அருள் நிச்சயமாக கிடைக்கும் .அது கூட தெரியாமல் ஆன்மிகம் பற்றி பேச வந்து விட்டிரே.. அந்த ஹரிஹரன் உமக்கு நல புத்தி வழங்குவாராக..
யாரிடமும் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டது இல்லை. சைவத்தின் தத்துவ நெறியாகிய சித்தாந்தம் கூறுவதென்ன? சிவன் ஒரு பொருள். அவன் தன்மை அல்லது கருணைக் குணத்தை நாம் திருமேனி வடிவில் சத்தியாகப் பார்க்கிறோம். அதனால்தான் அவை இரண்டும் இணை பிரியாதது என்பது. நெருப்பும் அதன் சூடும் போல. சூடு இல்லையானால் நெருப்பு இல்லை. சிவனின் கருணை உள்ளமாகிய அவன் தன்மை இல்லையானால் அவன் சொரூப நிலையை குறிக்கும். இவ்வாறு பதி (இறைவன்) ஒன்றே என்று விளக்கும் சைவ சித்தாந்தம். இதையெல்லாம் அறிய முடியாது இன்னும் பாமரர் நிலையில் நின்று பேசுவோருக்கு பதில் சொல்ல வேண்டியது எம் ஊழ்வினை போலும்.
அறிவுத் தெளிவைக் கொடுப்போர் கு + ரு. இருளை நீக்குபவர் என்று பொருள். அறிவுத் தெளிவு இல்லாமால் மூட நம்பிக்கையிலும், புராணக் கூற்றுகளில் நம்பி இன்று வரை அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவோருக்குத் தேவை குரு மாற்றம். எமக்கு நால்வர் பெருமக்களே ஞானத்திர்க்கு வழி காட்டும் குரு.
மண்ணு,டிளிப்பு! முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டேன்..அதற்கு ஓரிரு வார்த்தைகளில் அடக்கம் செய்ய பார்த்தீர்! தமிழன் என்ற அறிவியல் பூர்வமான வார்த்தையை ஓரிரு சொற்களில் அடக்கம் செய்ய முயல்வது உங்கள் அறியாமையை காட்டுகிறது அப்பு! சரி நீங்களும் பதிவு செய்யுங்கள் நானும் பதிவு செய்கிறேன் கற்றோர்கள் தீர்ப்பு சொல்லட்டும் என்றேன் அதற்கும் திக்கி திணறி ஓட்டம் எடுத்து விட்டீர்! இப்போது அருவுருவத்தில் வந்து சரியாக மாட்டிக்கொண்டீர்.அனைத்துக்கும் திறவுகோல் தமிழன் என்ற ஒரே சொல்லில் மறைக்கபட்டிருக்கிறது!
“சைவம் ஒன்றும் மகத்தானது அல்ல”!?. அப்புறம் எதற்கு பொய்யாக அரியும் அரனும் ஒன்று என்று பொய் பேசுவது?. சித்தாந்த சைவம் என்பதை சற்றும் அறியாமல் உரையாடுவதைப் பார்க்கும் பொழுது படித்தவர்களும் சமய நெறியில் ஆக கீழ் படியில் நின்று கொண்டு பேசுவதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கின்றது.
புளித்த கேசரியே, ஒவ்வொரு இனத்திற்கும் அவ்வினம் உயர்ந்ததே. நீர் கூறுவது போல் தமிழனுக்கு அர்த்தம் கூறச் சொல்வது பிதற்றலே அன்றி வெருஒன்ருமில்லை.
ஐயா மன்னன் அவர்களே என்னை மட்டம் தட்டுவதனால் உங்களுக்கு பெருமை என்றால் -ஆகட்டும்.
திருட்டு திராவிட மன்னா தெலுங்கனிடம் தமிழனுக்கு அர்த்தம் கூற சொல்வது பிதற்றல் தான் . நாம் ஒப்பு கொள்கிறோம்
தமிழர்களே மற்றும் இந்து மதத்தில் கூறப்படும் வைதீக நெறியை வெறுத்து மதம் மாறிய தமிழர்களே இன்று கூறுகிறேன் கேள்மின். வேத நெறியைப் பின்பற்றி வாழும் வைதீகர்கள் தமிழர் தொன்றுதொட்டுப் பின் பற்றி வந்த சைவ சமயத்தை வேரறுக்க முற்பட்டது இன்றல்ல நேற்றல்ல. சுமார் 3,500 வருடங்களுக்கும் முன்னமே ஆரம்பித்தது சைவத்திர்க்கு எதிரான வைதீகர்களின் காழ்ப்புணர்ச்சி.
சிறுவயதிலேயே துறவறம் பூண்டு, திருவாவடுத்துறை ஆதீனத்தின் தத்துப்பிள்ளையாகி சிவாகமங்களையும், மெய்கண்ட சாத்திரங்கங்ளையும், திருமுறைகளையும் ஓதி வேத சாத்திரங்களையும் கற்றறிந்து, தமிழ் சமஸ்கிருதமாகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற மாதவ சிவஞான முனிவர் வேத நெறியினர் சைவதிர்க்கு இழைத்த அநீதியை சமஸ்கிருத நூல்களிலிருந்து எடுத்து இப்படி வரையறுத்துக் கூறுகின்றார்:
வடக்கே தோன்றிய புராணங்களில் ‘ஆகமங்கள்’ என்றும் ‘தந்திரம்’ என்றும் பெயர் பெற்றுள்ள நூல்கள் இகழ்ந்துரைக்கப் படுகின்றன. அவை:
1) “தந்திர வழி ஒழுகுவோர் மாமூடர்” – இலிங்க புராணம்
2) பாத்தும புராணம் கூறுவது:
“சாண்டிலில்யன் – என்ற ஒருவன் பழி பாவங்கட்கு அஞ்சாதவனாய்ப் பிறர் மனைவியரை விழைந்து, அளவிறந்த இன்பத்தின் பொருட்டு வாசுதேவனை அவன் செய்த ஆகமத்தின் தீய முறைப்படி வழிப்பட்டு, முடிவில் நரகத்தில் வீழ்ந்தான்” என்பது புணைந்த புராணக் கதையைக் கொண்டு சைவ நெறியில் ஒழுகுவோர் நரகத்தை அடைவார் என்றது வடக்கே தோன்றிய பாத்தும புராணம்.
3) சூத சங்கிதை
“திராவிட தேசத்தில் – சித்திர சேனன் – என்ற ஒருவன் பாசண்டர் கூற்றைக் கேட்டு வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபத (சைவப் பிரிவுகளில் ஒன்று) மதத்தின்படி நடந்து, நரகத்தில் வீழ்ந்தான்” என்பதும் சைவத்திற்கு இழைக்கும் வண்ணம் எழுந்த புராணக் கூற்றுதான்.
4) கூர்ம புராணம்
“கௌதம முனிவர், வைதீகத்தின் ஒழுகாது திரிந்த அந்தணர் சிலரைக் கண்டு வெகுளியுற்று;
மொழிபாஞ்ச ராத்திரம், காபாலம்,
காளாமுகம், சாத்தம், பௌத்தம், ஆருகதந்தன்னில்
கழிபாசு பதனூலாம் சாம்பவத்தில் தீக்கை
காதலிப்பீர், வேதியரில் கடைகாள் நீர்” என சபித்தார்.
மேற்கூறியவாறு காபாலம், காளமுகம், பாசுபதம் முதலிய சைவ மார்க்கங்களையும், பாஞ்சராத்திரம் என்று சொல்லக் கூடிய தென்புலத்து வைஷ்ணவத்தையும், சாக்தம், புத்தம், ஜைன மதம் ஆகியனவற்றில் ஒழுகுவோர் வைதீகர்களை விட ஈனர் என்று கௌதம முனிவர் சபித்தார். தென்புலத்து வைஷ்ணவரான மன்னன் அறிவாரா இதனை? கூர்ம புராணத்தை வாங்கி படியும். அப்பொழுதாவது உமக்குப் புத்தி வந்து சைவத்தைப் பழிக்காமல் வாழ்வீர்.
“பார்வதி, பரமசிவனை நோக்கி – ‘மோக நூல் இரு வேமும் செய்வேம் விடைக் கொடியாய் – அதனால் ஆகமங்கள் மோகத்தை (மயக்கத்தை) உண்டாக்கும் நூல்களே” என்று கூறுவது கூர்ம புராணம்தான். அப்படியாநால் சிவாகமங்கள் உண்மைச் சான்றாகாது என்று சொன்னது கூர்ம புராணம்தான். இதனை ஏற்றுக் கொள்வாரா சிவாகமப் படி நிறுவப்பட்ட சைவ ஆலயங்களில் அர்ச்சகராகவும், குருக்களாகவும் இன்று பணிப்புரிவோர்?
இப்படி சைவத்தையும் இந்தியாவில் தோன்றிய இதர மதங்களையும் தூற்றியதுதான் இன்றைய இந்து மதம் என்று சொல்லுகின்ற வைதீக மதம்! இதனையும் அறியாது அரியும் அரனும் ஒன்றென்று கூறி பின்னர் சைவம் மகாத்தானது அல்ல என்பது அறிவார்ந்த தமிழரில் சைவத்தை அறியாத தமிழந்தான் கூற முடியும். சைவம் மகாத்தானது அல்ல என்றால் அப்புறம் எதற்கு அரியும் அரனும் ஒன்றென்கிறாய்? உம்முடைய கூற்றுப்படியே வந்தாலும் சைவம் மகாத்தானது அல்ல என்றால் வைஷ்ணவமும் மகாத்தானது என்று எப்படி சொல்ல முடியும் காரணம் நீரே அரியும் அரனும் ஒன்று என்று சொல்லி நீரே விரித்த வலையில் இப்பொழுது உம் வாயாலேயே சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பார் மன்னா. நீரா தமிழரில் சாதிப் பிரிவு உண்டு என்று கூறி நாம் மனித நேயத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது! நீரா நடுநிலையாளராக இருக்க வல்லவர்! காட்டி விட்டாயே உமது சொரூபத்தை மன்னா! நீரே சாதியப் பேயாய் வாழ வல்லவர் என்று இன்று நிரூபனமானது. இனியும் உம் சொல் அம்பலம் ஏறுமா மன்னா?
கூர்ம புராணம் சொல்வது போல் பாஞ்ராத்திரத்தை ஆகமமாக கொண்ட தென்புலத்து வைஷ்ணவமும் மகாத்தானது அல்ல வேதம் குருவது உண்மையாகாதோ?
இவாறுதான் இந்தியாவில் தோன்றிய பல மதங்கள் வெவேறு கோட்பாடுகளைக் கொண்டு அதன் அடிபடையில் நெறிகளை வகுத்துக் கொண்டன. இதுவறியாது தமிழன் இந்து மதம் என்பான் அது என்ன கன்றாவி என்றும் அறியான். அதுதான் உண்மை என்று பிறர் சொல்ல அதையும் மூடத்தனமாக நம்பி வீழ்வான். சைவம் தமிலரைக் காப்பாற்றும். வைதீக நெறியை இந்து மதம் என்ற போர்வையில் போவோருக்கு ஏது கதி?
தமிழர்களே மற்றும் இந்து மதத்தில் கூறப்படும் வைதீக நெறியை வெறுத்து மதம் மாறிய தமிழர்களே இன்று கூறுகிறேன் கேள்மின். வேத நெறியைப் பின்பற்றி வாழும் வைதீகர்கள் தமிழர் தொன்றுதொட்டுப் பின் பற்றி வந்த சைவ சமயத்தை வேரறுக்க முற்பட்டது இன்றல்ல நேற்றல்ல. சுமார் 3,500 வருடங்களுக்கும் முன்னமே ஆரம்பித்தது சைவத்திர்க்கு எதிரான வைதீகர்களின் காழ்ப்புணர்ச்சி.
சிறுவயதிலேயே துறவறம் பூண்டு, திருவாவடுத்துறை ஆதீனத்தின் தத்துப்பிள்ளையாகி சிவாகமங்களையும், மெய்கண்ட சாத்திரங்கங்ளையும், திருமுறைகளையும் ஓதி வேத சாத்திரங்களையும் கற்றறிந்து, தமிழ் சமஸ்கிருதமாகிய இரு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற மாதவ சிவஞான முனிவர் வேத நெறியினர் சைவதிர்க்கு இழைத்த அநீதியை சமஸ்கிருத நூல்களிலிருந்து எடுத்து இப்படி வரையறுத்துக் கூறுகின்றார்:
வடக்கே தோன்றிய புராணங்களில் ‘ஆகமங்கள்’ என்றும் ‘தந்திரம்’ என்றும் பெயர் பெற்றுள்ள நூல்கள் இகழ்ந்துரைக்கப் படுகின்றன. அவை:
1) “தந்திர வழி ஒழுகுவோர் மாமூடர்” – இலிங்க புராணம்
2) பாத்தும புராணம் கூறுவது:
“சாண்டிலில்யன் – என்ற ஒருவன் பழி பாவங்கட்கு அஞ்சாதவனாய்ப் பிறர் மனைவியரை விழைந்து, அளவிறந்த இன்பத்தின் பொருட்டு வாசுதேவனை அவன் செய்த ஆகமத்தின் தீய முறைப்படி வழிப்பட்டு, முடிவில் நரகத்தில் வீழ்ந்தான்” என்பது புணைந்த புராணக் கதையைக் கொண்டு சைவ நெறியில் ஒழுகுவோர் நரகத்தை அடைவார் என்றது வடக்கே தோன்றிய பாத்தும புராணம்.
3) சூத சங்கிதை
”திராவிட தேசத்தில் – சித்திர சேனன் – என்ற ஒருவன் பாசண்டர் கூற்றைக் கேட்டு வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபத (சைவப் பிரிவுகளில் ஒன்று) மதத்தின்படி நடந்து, நரகத்தில் வீழ்ந்தான்” என்பதும் சைவத்திற்கு இழைக்கும் வண்ணம் எழுந்த புராணக் கூற்றுதான்.
4) கூர்ம புராணம்
“கௌதம முனிவர், வைதீகத்தின் ஒழுகாது திரிந்த அந்தணர் சிலரைக் கண்டு வெகுளியுற்று;
மொழிபாஞ்ச ராத்திரம், காபாலம்,
காளாமுகம், சாத்தம், பௌத்தம், ஆருகதந்தன்னில்
கழிபாசு பதனூலாம் சாம்பவத்தில் தீக்கை
காதலிப்பீர், வேதியரில் கடைகாள் நீர்” என சபித்தார்.
மேற்கூறியவாறு காபாலம், காளமுகம், பாசுபதம் முதலிய சைவ மார்க்கங்களையும், பாஞ்சராத்திரம் என்று சொல்லக் கூடிய தென்புலத்து வைஷ்ணவத்தையும், சாக்தம், புத்தம், ஜைன மதம் ஆகியனவற்றில் ஒழுகுவோர் வைதீகர்களை விட ஈனர் என்று கௌதம முனிவர் சபித்தார். தென்புலத்து வைஷ்ணவரான மன்னன் அறிவாரா இதனை? கூர்ம புராணத்தை வாங்கி படியும். அப்பொழுதாவது உமக்குப் புத்தி வந்து சைவத்தைப் பழிக்காமல் வாழ்வீர்.
”பார்வதி, பரமசிவனை நோக்கி – ‘மோக நூல் இரு வேமும் செய்வேம் விடைக் கொடியாய் – அதனால் ஆகமங்கள் மோகத்தை (மயக்கத்தை) உண்டாக்கும் நூல்களே” என்று கூறுவது கூர்ம புராணம்தான். அப்படியாநால் சிவாகமங்கள் உண்மைச் சான்றாகாது என்று சொன்னது கூர்ம புராணம்தான். இதனை ஏற்றுக் கொள்வாரா சிவாகமப் படி நிறுவப்பட்ட சைவ ஆலயங்களில் அர்ச்சகராகவும், குருக்களாகவும் இன்று பணிப்புரிவோர்?
இப்படி சைவத்தையும் இந்தியாவில் தோன்றிய இதர மதங்களையும் தூற்றியதுதான் இன்றைய இந்து மதம் என்று சொல்லுகின்ற வைதீக மதம்! இதனையும் அறியாது அரியும் அரனும் ஒன்றென்று கூறி பின்னர் சைவம் மகாத்தானது அல்ல என்பது அறிவார்ந்த தமிழரில் சைவத்தை அறியாத தமிழந்தான் கூற முடியும். சைவம் மகாத்தானது அல்ல என்றால் அப்புறம் எதற்கு அரியும் அரனும் ஒன்றென்கிறாய்? உம்முடைய கூற்றுப்படியே வந்தாலும் சைவம் மகாத்தானது அல்ல என்றால் வைஷ்ணவமும் மகாத்தானது என்று எப்படி சொல்ல முடியும் காரணம் நீரே அரியும் அரனும் ஒன்று என்று சொல்லி நீரே விரித்த வலையில் இப்பொழுது உம் வாயாலேயே சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பார் மன்னா. நீரா தமிழரில் சாதிப் பிரிவு உண்டு என்று கூறி நாம் மனித நேயத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது! நீரா நடுநிலையாளராக இருக்க வல்லவர்! காட்டி விட்டாயே உமது சொரூபத்தை மன்னா! நீரே சாதியப் பேயாய் வாழ வல்லவர் என்று இன்று நிரூபனமானது. இனியும் உம் சொல் அம்பலம் ஏறுமா மன்னா?
கூர்ம புராணம் சொல்வது போல் பாஞ்சராத்திரத்தை ஆகமமாக கொண்ட தென்புலத்து வைஷ்ணவமும் மகாத்தானது அல்ல என்று வேத நெறியாளர் கூறுவது உண்மையாகாதோ?
இவ்வாறுதான் இந்தியாவில் தோன்றிய பல மதங்கள் வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டு அதன் அடிப்படையில் நெறிகளை வகுத்துக் கொண்டன. இதுவறியாது தமிழன் இந்து மதம் என்பான் அது என்ன கன்றாவி என்றும் அறியான். அதுதான் உண்மை என்று பிறர் சொல்ல அதையும் மூடத்தனமாக நம்பி வீழ்வான். சைவம் தமிழரைக் காப்பாற்றும். வைதீக நெறியை இந்து மதம் என்ற போர்வையில் போற்றுவோருக்கு ஏது கதி.
ஆசிரியர் அவர்களுக்கு.
தேனீ wrote on 21 June, 2016, 11:51
என்ற முதல் பதிவை நீக்கி விடவும். நன்றி
தேனீ, பழையன புகுதலும், புதியன புகுதலும் எல்லா விசயங்களிலும் மதங்களிலும் உள்ளன. அவையும் காலத்திர்கேற்பவையே. சைவம் மகத்தானது அல்ல என்றால் யாம் இங்கு சைவத்தை .இகழவில்லை. ஆனால் சிவனடியார் என்று கூறிக்கொண்டு ஹிந்து மதத்தை இழிவு செய்யும் அற்ப பதர்களையே இது குறிக்கும். நீர் கூறுவது வியப்பையும் உமது சைவ சித்ததந்தின் கதியையும் உணர முடிகிறது. யாம் கூறியது யாவும் தற்காலத்தில் காணப் படும் மெய்யே அன்றி வேறில்லை. இது கூட தெரியாமல் எம்மை சாடும் தேனியே உமது கதி தான் என்னாகும்? எம்மை பற்றி கவலை வேண்டாம் எம்மை காத்து அருளும் ஹரனும் ஹரியும் எம்மை எப்போதும் கண் இமை காப்பதுபோல் கருணையுடன் பேணி காத்து வருகிறார். அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. உம்மை போல் குருமார்கள்போற்றி இறைவனை இரண்டாம் பட்சமாக கருதும் பக்தன் யாம் அல்ல. ஹிந்து மதத்தின் தத்துவம் தெரியாமல் சைவம் மதம் என்று பிரித்து கூறி அசைவமாக பேசும் உம்மை என் சொல்வது. மதத்தின் பெயரில் மதம் பிடித்து இருப்பது உமக்கே அன்றி ஹிந்து மதத்திற்கு அல்ல. சிவனை போற்றும் சைவ சித்தத்தை அசைவமாக மாற்றம் செய்து விடாதிர் நண்பரே.
தேனியே எதற்கு அய்யா மெனக்கட்டு மற்றவர்கள் இதை சொன்னார்கள் அதை சொன்னார்கள் என்று எல்லா மத குருமார்களை மேற்கோள் காட்டி குரிப்பிடுகிரிர்.! தேவையற்ற ஒன்று எமக்கு. யாம் முன்னமே கூறியது போல் யார் செய்தலும் குற்றம் குற்றமே . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று யாம் நெறியை வாழ்பவன். வைஷ்ணவரோ, சைவரோ , புத்தரோ, சமணரோ எந்த குருமார்களும் அவர் தம் மதத்தினையே உயர்வாக சொல்வர். ஆனால் அவர்களே மற்ற மதத்தை இகழ்ந்து பேசினால் அவர்கள் ஒரு நல்ல குருமாரும் கிடையாது. எனவே நீங்கள் எம்மிடம் இதை கூறுவது சிறப்பை தான் உண்டு பண்ணுகிறது. எனது பக்தி மார்க்கத்தின் அணுகு முறையே வேறு. இதையே அனுதினமும் ஹர ஹரியிடம் பகிர்ந்து கொள்கிறேன். எமக்கு குருமார்கள் முக்கியமில்லை. அவர்களின் உண்மையான, வேறுபாடற்ற , எளிமையாக இறைவனை பற்றி கூறும் விளக்கமே முக்கியம். யாம் கூறுவதை நாயன்மார்களும் ஆழ்வார்களும் நிச்சயமாக ஆமோதிப்பர். இதில் எமக்கு கடுகு அளவும் சந்தேகமில்லை.
நண்பரே என் தாய் தமிழரே,
யாம் உங்களை மட்டம் தட்ட வில்லை. உமது எழுதிர்கேற்ப யாம் பதில் தந்தோம். அவ்வளவே. வாழ்க.
நாராயணா நாறாஜனா
இந்து மத தத்துவம் என்று ஏதுமில்லை. ஒரு மதத்திற்கு ஒரு கோட்பாடு . பல மதங்கள் பல கோட்பாடுகள். இதுதான் தாங்கள் கூறும் இந்து மதம். இப்படி பல நெறிகளில் தமிழரை நிறுத்தி தமிழரின் சமயத்தைச் சீரழித்ததுதான் இந்து மதத்தின் மகாத்தான செயல். இன்று இந்து மதத்தின் தத்துவம் என்னவென்று கேட்டுப் பாருங்களேன். பத்துப் பேரைக் கேட்டால் பத்துப் பேரும் பத்துப் பதில் தருவார். அவ்வளவு தெளிவு இந்துக்களுக்கு!
மன்னா நீரே தமிழரில் சாதியம் உண்டு என்று வாதித்தாய். ஒவ்வொரு வாதத்திற்கும் ஆதார பூர்வமான மறுமொழிகள் முன் வைத்தேன். அதை மறுக்க ஆதாரமில்லை என்பதால் ஒவ்வொரு முறையும் புதிய பதிவுகளைச் செய்து திசை திருப்பினீர். இறுதியில், ‘சைவம் உன்னத மதமல்ல’ என்று சொல்லி கௌதாரி வாயால் கெட்டது போல் நீரும் உம் வாயால் கெட்டீர். போதும் இந்த பதிவு வரை. .
சாதியத்தைப் பற்றி இப்பகுதியில் பேசப்பட்ட்தால் இந்த குறிப்பையையும் இங்கே பதிவு செய்கிறேன்:
‘மின் தமிழ்’ என்று ஒரு இணையத்தள கலந்துரையாடல் குழுமம் உள்ளது. அதில் யாமும் ஓர் உறுப்பினர். அக்குழுமத்தை மலேசியாவைச் சார்ந்த கெ. சுபாஷினி என்ற ‘Super Woman’ வழி நடத்தி வருகின்றார். இன்றைய பதிவுகளில் சாதியத்தைப் பற்றி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பதிவு செய்த சிற்றுரையை கீழே பதிவு செய்கிறோம்: அதில் இறுதி பத்தியில் உள்ள கருத்தைக் கொஞ்சம் மனதில் இருத்தி இனியும் தமிழரில் சாதியம் போற்ற வேண்டாம்:
“இன ஒழிப்பு என்பது வேறு சாதி ஒழிப்பு என்பது வேறு. இன ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களை அழிப்பது அதற்கான வெறுப்பை வளர்ப்பது. அது என்றென்றும் மானுடத்தின் களங்கம். சாதி ஒழிப்பு என்பது சாதிய பாகுபாடுகளை அழிப்பது. அது குறிப்பிட்ட எந்த சாதியைச் சார்ந்த மக்களையும் வெறுப்பதோ ஒழிப்பதோ அன்று. சாதி ஒழிப்பு இன்றைய ஜனநாயக சமுதாயத்தில் மிகத் தேவையான ஒன்று. நம் பண்பாட்டில் சாதியக் கூறுகள் பல உண்டு. ஆனால் அவற்றைத் தாண்டி என்றென்றைக்குமான நிரந்தர மதிப்பீடுகள் உண்டு. நம் பண்பாட்டை வரையறை செய்வது அவ்வாறு காலத்தால் கட்டொணாத என்றைக்குமான மதிப்பீடுகளே. தீதும் நன்றும் பிறர் தரவாரா என்றும் எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகுதல் அறம் என்றும் சொல்லியவர்களின் சாதி எதுவென நாம் சிந்திப்பதில்லை. திருமங்கையாழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் ஒரே சந்நிதியில் ஒரே வரிசையில் வைத்து வணங்குவோர் நாம். இவையெல்லாம்தான் நம் பண்பாட்டை வரையறை செய்வனே அன்றி சாதியும் தீண்டாமையும் அல்ல.
துரதிர்ஷ்டவசமாக ஆரிய இனவாதக் கோட்பாடும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது சாதியத்துக்கான ஒட்டுமொத்த பழியைப் போட்டு தப்பும் போக்கும் சாதியத்தை அழிக்கும் ஜனநாயக இயக்கத்தைத் தடை செய்துவிட்டன. ஆகவேதான் சாதியை ஒழிக்க அதன் வரலாற்றை நுணுகி ஆராய வேண்டும். பாபா சாகேப் அம்பேத்கர் ‘ரிடில் ஆஃப் ஹிந்துயிசம்’ எனும் நூலை எழுதியிருக்கிறார். மிகக் கடுமையாக சில இடங்களில் நியாயமின்றிக் கூட இந்து மத புராணங்களை வசை பாடியிருக்கும் நூல் அது. ஆனால் அந்த நூலில் அவர் மிக முக்கியமான ஒரு விசயத்தைச் சொல்கிறார்.
பிரம்மத்துவம் – அதாவது அனைவருள்ளும் பிரம்மம் உள்ளது எனும் கோட்பாடே ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த ஆன்மிக அடிப்படையாக இருக்கும் என அவர் சொல்கிறார். அனைவரும் ஆண்டவனின் குழந்தைகள் என சொல்வது ஜனநாயகத்துக்கான சரியான அடிப்படையாக அமைய முடியாது என சொல்லும் அவர் ‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத் த்வமஸி’ ‘அயம் ஆத்ம பிரம்மன்’ ஆகிய மகாவாக்கியங்களை ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படைகளாக முன்வைக்கிறார். அதன் பின்னர் பாபா சாகேப் அம்பேத்கர் – இத்தகை ஆன்மநேயக் கோட்பாடு இருந்தும் எப்படி சாதியம் இந்த சமுதாயத்தில் வளர்ந்தது என்பதே இந்து மதத்தின் ஆதார முரண் என சொல்கிறார்.”
பிறருக்குத் தமிழர் முன்னோடியாக வாழுவோம்.
தேனி உமக்கு யாம் என்ன சொல்ல வருகிறோம் என்று கூட புரியவில்லை.உமக்கு இந்த அளவிற்கு ஆன்மீக ஞானம் இருந்தும் ஒரு பயனும் இல்லை. நம் மனித பிறப்பில் பல மதங்கள், பிரிவுகள் , வர்ணங்கள், என பறந்து காணப் படுகின்றன. அதைப்போலவே நடை முறையில் காணப் படும் ஜாதி பிரிவுகளும். இதை நீர் கபூரும் சைவ மதம் கொண்டு எதுவும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இறைவனின் பார்வையில் இவர் உயந்த ஜாதி அவர் தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடிற்கு இடமே இல்லை என்பதையே உணர்த்துகின்றன. இறைவனுக்கு யாவரும் ஒன்றே.. இதனால் தான் யாம் ஜாதிகள் உண்டாயினும் அவர்களினால் நம்மிடையே எந்த பாகுபாடும் கணக்கு கூடாது என்றேன் ஒழிய ஜாதியை கொண்டு யாம் ஒருவரையும் தரம் தாழ்த்த வில்லை. இதை கூட உம் புரிதலுக்கு எட்டவில்லை என்றால் என் செய்வது நண்பரே. நீர் கூறியது போல் நம் பண்பாட்டினால் நாம் உயர்ந்து காணப் பட வேண்டுமே தவிர ஜாதிகளினால் அல்ல என்பதை யாமும் அறிவேன். ஆனால் என் செய்வது நமது தமிழினம் இன்று அப்படியா இருக்கிறது? நம் புராணங்களும் இதிகாசங்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளன. ஆனால் எதையாவது நம் இனம் முழுமையாக உணர்ந்து செயல் படுகிறதா? அப்படியே இருந்தாலும் 10 அல்லது 15 சதவீதம். தான். உம்மைப்போல் யாம் எந்த புராணத்தையும் நாயமாரையும் ஒப்பிட்டு எழுதாமைக்கு காரணம் மிக எளிமையான தமிழில் கருத்தை நம் தமிழருக்கு பதிவு செய்தால் அவ்வழியிலாவது நம் இனத்தின் நற்பண்புகள் அவர்களை அடையும் என்ற நம்பிக்கையே. குருமார்கள் அவர்கள் வழியில் உபதேசம் செய்தனர். யாம் எம்வழியில் அதை செய்கிறோம்.
தயவு செய்து ஹிந்து மதத்தை அவதூறாக பேசுவதை நிறுத்துவீர். நீர் சைவ சித்தந்தத்தை பின்பற்றுவபவராக இருக்கலாம். அதற்காக அறிவீனமாக ஹிந்து மதத்தை தூற்றாதீர் . அது சைவ மதத்தின் மூலமான எம் பெருமான் சிவனையும் நிந்திப்பதாகும். பெருமானுக்கு பூஜைகள் செய்து புண்ணியத்தை பெற்ற நீர் இப்போது பாவத்தையும் பெறுவீர். சைவம் உன்னதமானது தான். நிச்சயமாக. அதையும் தன்னுள் கொண்டுள்ள ஹிந்து மதம் அதனினும் உன்னதமானது, புனிதமானது. ஹானும் ஹரியும் ஒன்றே என்பதை உணர மறுக்கும் உம்மை கண்டு யாம் அல்ல அந்த சிவனே எள்ளி நகையாடுவார். சரி இதுவும் அவரின் திருவிளையாடலில் ஒரு போலும். ஹரி ஓம் சிவ ஓம்
இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் இதற்கு ஒரு முடிவு இல்லை! நடைமுறைக்கு வருவோம்!
இன்னும் 25 ஆண்டுகள் என்ன 2500 ஆண்டுகள் ஆனாலும் இப்படி வெட்டி கதை பேசத்தான் தமிழன் லாயக்கு.
இந்த வெட்டிக் கதையின் ஊடே நீங்களும் வெட்டியாக வந்து கலந்து கொள்ளுகிறீர்களே! தமிழர் அல்லாத உங்களுக்கு ஏன் இந்த வெட்டியான் வேலை?
நாறாஜன நாறாஜன்
புண்ணாக்கு கேசி, நான் தமிழர்கள்னா என்னானு விளக்கம் சொல்லிட்டேன். நீதான் ஏத்துக்க மாட்டேன் என்கிறாய் . உன்னைப்போல் மணிக்கணக்கில் பதில் சொன்னால் தான் ஒத்து கொள்வாய் என்றால், இன்றிருந்து திருக்குறள் படிக்காதே. ஏன்எனில், திருவள்ளுவர் ஒரு விஷயத்தை 7 வார்த்தைகளில் கூறிவிடுவார். உன்னை போல் மணிக்கணக்கில் சொரிந்து கொண்டிருக்கமாடடார்…..