புதுடில்லி : நாட்டிலேயே, உ.பி., மாநிலத்தில் தான், குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக, தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினத்தையொட்டி, ‘சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு’ எனப்படும், க்ரை அமைப்பு, வெளியிட்ட ஆய்வு முடிவுகள் விவரம்: இந்தியாவில், உ.பி., மாநிலத்தில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில், பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிராமாநிலங்கள் உள்ளன.நாட்டில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில், 56 சதவீதம் பேர் படிக்காதவர்களாகவோ, குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் விட்டவர்களாகவோ உள்ளனர். 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில், 26 சதவீதம் பேர் படிக்காதவர்களாகவே உள்ளனர்.
குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளோர், பள்ளிக்கு சென்றாலும், பள்ளி நேரத்துக்கு முன்னும், பின்னும், நீண்ட நேரம் வேலை செய்யும் சூழ்நிலை காணப்படுகிறது. இதனால், அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில், பாதியில் படிப்பை விட நேர்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-http://www.dinamalar.com