காஞ்சிபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உற்சவர் சிலையுடன் இணைந்த பாலமுருகன் திருட்டு போனதாக தற்போது வெளியான தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில். பழமை வாய்ந்த இந்த கோயிலில் உற்சவர் சிலையுடன் இணைந்திருந்த பாலமுருகன் சிலை 75 சதவீதம் தங்கத்தால் ஆனது. இந்த சிலை திருட்டு போனதாகவும், அதற்கு பதிலாக வேறொரு சிலை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது 1993-ம் ஆண்டே முருகன் சிலை காணாமல் போனதாகவும், அதற்கு பதிலாக வேறொரு சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. நன்கொடையாளர்கள் மூலமே புதிய சிலை செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே கோயில் நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து வரும் 22-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக பக்தர்கள் கூறியுள்ளனர். பல்வேறு கோயில்களில் திருட்டு போன பழமையான கோயில் சிலைகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஏகாம்பரநாதர் கோயிலின் பாலமுருகன் சிலை உள்ளதா என அறநிலையத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலமுருகன் சிலையை உற்சவர் சிலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக போலியான பாலமுருகன் சிலையை வணங்கி வந்தது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.dinakaran.com
திருட்டு வடுகனுங்க திருடியிருப்பானுங்க … முட்டிக்கு முட்டி தட்டினால் உண்மை வெளியவரும் ..
தாழ்த்தப்பட்டோரை கோவில்களில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு நாடு முழுவதும் செயல்படுத்துமா? – திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி!!
தமிழர்களுக்காக பேசும் வடுகாமணி தமிழர்களின் ஆலயத்திலிருந்து வடுகர்கள் வெளியேற்றி தமிழர்களின் ஆலயத்தை தமிழர்களிடமே கொடுக்கவேண்டும் என்று என்குரல் குரல்கொடுக்ககூடாது …
தமிழகத்தில் யாரு தாழ்த்தபட்டவர்கள் ? தமிழர்கள் மட்டுமே வந்தேறி வடுகர்களால் ஒடுக்கபட்டுள்ளனர் ..
யாரு ஆதிக்கசாதி தமிழகத்தில் ? திருட்டு திராவிட தெலுங்கர்கள் ..தமிழக அதிகாரம் தெளுங்கர்களிடம் .தமிழக வணிகம் தெளுங்கர்களிடம் ..கோடிகோடியாக கொட்டும் தமிழ் சினிமா வடுகர்களின் ஆதிக்கத்தில் . தமிழகத்தில் நிலா உரிமை வடுகர்களின் வசம் நாயக்கர் ஆட்சியில் தமிழர்களிடமிருந்து பறிக்கபட்டது …தமிழர்களின் போக்கிசங்களான ஆலயங்கள் வடுக பிராமணரும் வடுக நிர்வாகிகளும் ..அரசு அதிகாரிகளும் 70வீதம் வடுகர்கள் ..தமிழகத்தில் யாரு ஒடுக்கபட்டவர்கள் தமிழர்கள் ..ஒடுக்குபவர்கள் வடுக தெலுங்கர்கள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில். சிவன் கோவில். நால்வர் பாடல் பெற்றத் தளம். இன்று அது சாக்த கோயிலாக மாற்றப் பட்டுவிட்டது காஞ்சி காமக்கோடி பீடாதிபதிகளால். எல்லாம் தமிழன் ஏமாளி என்பதால். அதனால் முருகன் மாயமாய்ப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதனைக் காஞ்சி முருக பக்தர்களும் அறிந்து மீண்டும் அதனை சைவக் கோவிலாக மாற்றுவது அவசியம்.