அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தலில் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பல பேர் தங்களின் வேலையை விட்டு விட்டு போட்டியிட்டனர்.
இதை நீங்கள் ஒரு தோல்வியாக கருத கூடாது, சிறந்த தொடக்கமாக எடுத்துக் கொண்டு நாம் மறுபடியும் அயராது களத்தில் நிற்க வேண்டும்.
நாம் எப்படிபட்ட தலைவனின் பிள்ளைகள், அவர் நோக்கமும், நாம் நோக்கமும் ஒன்று தான் அடிமை தேசிய இனத்தின் விடுதலை.
ஒரு வித்தியாசம் அவருடையது ஆயுதம் ஏந்திய புரட்சி, நம்முடையது அறிவு ஆயுதம் ஏந்திய அரசியல் புரட்சி, ஆனால் நோக்கம் ஒன்று தான் இலக்கு ஒன்று தான் அதை நாம் அடைய வேண்டும்.
அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தல் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லாரும் போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் என சீமான் கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் வாழ்த்துக்கள் !!
நான் தனியாகப் போராடுவேன் என்றால் பயனில்லை! திராவிடக்கட்சிகளை ஒழிப்பதற்கு இன்னும் அதிகம் பலம் தேவை!
ஐயா சீமான் அவரகளே -தமிழ் நாட்டில் தமிழ் பற்று ஆறாக ஓட வில்லையே! தமிழ் பேசவே வெட்கப்படும் ஈன ஜென்மங்கள் சுயமரியாதை என்ன என்றே தெரியாத ஜென்மங்கள் வாழும் அங்கு எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? தமிழ்ந்க்ளிஷ் பேசும் வெட்கம் கெட்ட ஜென்மங்கள்– இதை சொல்ல எனக்கு மகிழ்ச்சி கிடையாது -ஏன் நம்மினம் இப்படி இருக்கிறது? திராவிடன் என்று நாம் தான் கூறிக்கொள்கிறோம் மற்ற திராவிடன்கள் தங்களை மலையாளிகள் என்றும் கன்னடர்கள் என்றும் தெலுங்கர்கள் என்றும் கூறிக்கொண்டு தமிழர்களை மட்டம் தட்டி அவர்களின் நாட்டிலேயே ஓரங்கட்டி ஆண்டுகொண்டிருக்கின்றனர்– இதெல்லாம் இந்த ஈன ஜென்மங்களுக்கு புரியவில்லை– ஒரு வாக்கியத்தில் பாதிக்குமேல் ஆங்கில வார்த்தைகள் – அப்படி பேசுவதில் வறட்டு பெருமை வேறு– இவ்வளவு அறிவிலிகளா?