சென்னை: தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். மேலும் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக ஆட்சியைத் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து 6-வது முறையாக தமிழக முதல்வராக கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றார் ஜெயலலிதா. பதவியேற்ற கையோடு 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.
அதன்படி டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கி வந்த நிலையில் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டும் இயங்கும் என்ற உத்தரவை பிறப்பித்தார். மேலும், 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூட உத்தரவிடுவதற்கான கோப்பிலும் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும் மூடப்படுகின்றன. கோவை மண்டலத்தில் 60 டாஸ்மாக் கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படுகின்றன. மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாற்றுப் பணி குறித்த அறிவிப்பு பின்னர் தனி அரசாணையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பள்ளிக்கு , ஆலயத்திற்கு பக்கத்தில் உள்ள மது கடைகளையும் மூட வேண்டும் .அதன் பிறகு காலேஜ் போகும் பாதையில் இருக்கும் கடைகளையும் கண்டிப்பாக மூடவேண்டும். சும்மா அறிக்கை விட வேண்டாம்.
தமிழ் ‘குடி’ மக்களை திருத்துவது முடியாத ஒன்று – சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள். சோம்பேறிகள்–தங்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணாமல் தாடியுடனும் அவலங்களாக திரிவதைபற்றி அக்கறையே இல்லை. என்ன சொன்னாலும் ஏறாது. நம்மவர்களுக்கு பணம் இல்லாவிட்டாலும் சுயமரியாதை உடன் சுத்தமாக மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாக கூடாது– தாங்க முடிய வில்லை ஐயா.
இப்படி 500 மூடல்களோடு நின்று விடக்கூடாது! அடுத்த ஆண்டும் 500 – 1000 என்று மூடப்பட வேண்டும்!
இப்படி 500 மூடல்களோடு நின்று விடக்கூடாது! அடுத்த ஆண்டும் 500 – 1000 என்று மூடப்பட வேண்டும்!
இப்படி 500 மூடல்களோடு நின்று விடக்கூடாது! அடுத்த ஆண்டும் 500 – 1000 என்று மூடப்பட வேண்டும்!