சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதம் ஆரம்பம் முதலே காரசாரமாக நடைபெற்று வருகிறது. 1991ல் கூறியபடி கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறினார். கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் படும் துயரத்திற்கு திமுக தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகதான். கச்சத்தீவு குறித்த பேச திமுகவுக்கு அருகதை கிடையாது என்று ஆவேசமாக கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கச்சத்தீவ மீட்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் திமுக இணைத்து கொள்ளாதது ஏன்? அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்து கொள்ளப்பட்டது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் கச்சத்தீவு விவகாரம் சட்டசபையில் ஜெயலலிதா, ஸ்டாலின் இடையே கார சார விவாதம் நடைபெற காரணமாக அமைந்தது.
எது எப்படியோ! கச்சத்தீவை தாரை வார்த்தவர்கள் அப்பனும் மகனும்! எல்லாவற்றையும் செய்துவிட்டு நாங்கள் கடிதம் எழுதினோம் கேட்பாரில்லை என்று புலம்புவது சும்மா வெளி வேஷம்!
மத்திய அரசால் கொடுக்க பட்ட கச்ச தீவை மீட்க வழியை ஆராயாமல் , மூங்காலி , முக்காலி போன்ற வாதம் செய்து காலத்தை விரயமாக்கிக் கொண்ட்டிருப்பதை விடுத்து., மக்கள் பிச்சையாக கொடுத்த முதலமைச்சர் பதவியை உபயோகித்து மக்களை புளங்காகிதம் அடைய காரியத்தில் இறங்கிடு ஜெயலலிதாவே .
கட்ச தீவு போனது போனதுதான்– வடக்கதியனுக்கு என்ன வேர்த்தா வடியுது தமிழன்களை பற்றி?
இது ஜனநாயகம், அதற்க்கு தான் சட்ட மன்றம் அமைய பெட்ருள்ளது…..வாழ்த்துக்கள்…
கச்சத்தீவை உங்கள் ஆட்சியில் மிட்டு எடுங்கள். உங்கள் திறமையை காட்டுங்கள்.
மீட்டு எடுப்பார்களா? இது எல்லாம் அவர்களுக்கு அரசியல் விளையாட்டு! லஞ்ச ஊழலில் சிக்கியிருப்பவர்களால் எதனையும் செய்ய முடியாது! அவரோ, இவரோ எல்லாம் நாடகமே!
கச்சத்தீவை மீட்டு எடுக்க தமிழினம் ஒன்றுபட வேண்டும் .தன்னலமில்லாத இன உணர்வுள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவர்கூட என் கண்களுக்கு தெரியவில்லை .