ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தியது போன்று டெல்லியும் முழு மாநில அந்தஸ்து பெற மக்களிடம் வாக்களிப்பு நடத்த வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரிட்டனில் பொது வாக்கெடுப்புநடத்தியதை போன்று டெல்லிக்கும் விரைவில் நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
டெல்லி யூனியன்பிரதேசமாக இருப்பதால் பொலிஸ் துறை, நில விவகாரம், அதிகாரிகள் இடமாற்றம், பணி நியமனம் என ஒவ்வொன்றிலும் மத்திய அரசின் தலையீடு இருந்து வருகிறது, எனவே மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி ஏற்கனவே கூறியிருந்தது.
ஆனால் இதனை மிக அபாயகரமானது என விமர்சித்துள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், பிற மாநிலங்களும் இத்தகைய பொது வாக்கெடுப்பை நடத்த கோரலாம், கேஜ்ரிவால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை கிளறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com
தனி தமிழ் நாடு கோர பொது வாக்கெடுப்பு நடத்த வெகு தூரம் இல்லை,இந்தியாவின் துரோகமும் குள்ள நரி தனமும் தமிழனை மன மாற்றத்திற்கு வித்தாகும்.
தமிழ் நாடு பிரிந்தாலும் அங்கு நல்ல தமிழ் ஆட்சி நடைபெறுவது என்ன நிச்சயம்? தற்போது தமிழ் நாட்டில் நடப்பது என்ன? அங்கு தமிழ் பற்றே கிடையாதே? இருந்திருந்தால் சீமானுக்கு சில இடங்கள் கிடைத்து இருக்குமே! அங்கு என்ன தமிழ் பெயர்களா பிள்ளைகளுக்கு வைக்கின்றனர்? அங்குள்ள வர்கள் எத்தனை பேர்கள் தமிழர்கள்? இன்னும் எவ்வளவோ–பேசவே எரிகிறது.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே உலக தமிழன் நலனை காக்கும்.