இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சொந்தமான நதிகளை இந்தியாவிடம் இருந்து மீட்கப் புனிதப் போர் நடத்தப் போவதாக ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
காஷ்மீர் விடுதலை பேசுவோர் இப்போது அங்கு இல்லை என்று அசியா பீபி என்னிடம் தொலைபேசியில் கூறினார். ஒரு இளம் தலைமை காஷ்மீர் விடுதலை விவகாரத்துக்கு ஆதரவு கோரி முன்னணிக்கு வந்துள்ளது.
இந்தியாவிடமிருந்து நமது நதிகளை விடுவிக்க நாம் புனிதப்போர் செய்வோம். இந்தியா, ஈரான், அமெரிக்கா குறித்த அயலுறவுக் கொள்கைகளை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ள சரியான தருணம் உருவாகியுள்ளது.
இவ்வாறு ஹபீஸ் சயீத் கூறினார்.
ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்கள் விலை வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.
-http://tamil.oneindia.com