ஐதராபாத்தில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில் திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலானாய்வு படையினர் 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 5 பேருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாட்டின் பல இடங்களில் மத கலவரத்தை தூண்டிவிட்டு ஆன்மீக வழிபாட்டு தளங்களிலும் வணிக வளாகங்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள முக்கிய வழிபாட்டு தளங்களில் உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதி கோயிலுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால், திருப்பதி அலிபிரியில் உள்ள சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு வரும் பக்தர்களின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
-http://news.lankasri.com