கர்நாடகாவில், முஸ்லீம் பெண் ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் இறுதிச் சடங்கை. இந்து முறைப்படி செய்துள்ள சம்பவம் மனிதநேயத்திற்கு மதம் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது.
வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தின் உறுப்பினரான யாகூப் பி என்ற பெண்ணே இந்த மனிதநேயமிக்க செயலை செய்துள்ளார்.
குறித்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 75 வயதான ஸ்ரீனிவாஸ் என்ற முதியேவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
முதியோர் இல்லத்திலிருந்து சம்பவம் குறித்து ஸ்ரீனிவாஸின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாஸின் உடலை நேரில் வந்த பார்த்த அவரது மகன் சரத், அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரின் இறுதிச் சடங்கை செய்யாமல் உடனே புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீனிவாஸின் இறுதிச் சடங்குகளை, ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்த போதும், தானே முன்வந்து தனது தந்தைக்கு செய்வது போல செய்து முடித்துள்ளார் யாகூப் பி.
மயானத்தில் அனைத்து சடங்குகளையும் முறைப்படி செய்து, ஸ்ரீனிவாஸின் உடலுக்கு தீ மூட்டியுள்ளார். இதன் மூலம் மனிதநேயத்திற்கு மதம் ஒரு தடை இல்லை என்பதை யாகூப் பி என்ற பெண் இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
-http://news.lankasri.com


























இவர் மனிதருள் மாணிக்கம். இவரின் மகனோ மனிதருள் கேவலம் .
மனிதநேயத்திற்கு மதம் இல்லை!