தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தான் அறிவித்தது போன்றே தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அதன் 2–ம் கட்ட நடவடிக்கையாக பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தலில் வெற்றிப்பெற்று 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மதுவிலக்கு தொடர்பான முதற்கட்ட நடவடிக்கையாக 500 மதுக்கடைகளை மூடி, விற்பனை நேரத்தையும் குறைத்தார்.
இந்த நிலையில், 2–ம் கட்டமாக எந்தெந்த டாஸ்மாக் கடைகளை மூடலாம்? என்பது பற்றி ஆய்வு செய்யும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 6 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றின் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்காக, அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்த பின் விரைவில் இதுதொடர்பான அறிக்கை தமிழக அரசு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-http://news.lankasri.com
கல்லூரி பக்கத்தில் இருக்கும் மது கடைகளையும் அகற்ற வேண்டும்.
கல்லூரி பக்கத்தில் இருக்கும் மது கடைகளையும் அகற்ற வேண்டும்
கல்லூரி பக்கத்தில் இருக்கும் மது கடைகளையும் அகற்ற வேண்டும்.