காஷ்மீரில் சிக்கியுள்ள 5 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 5000 பேர் தவித்துக் கொண்டிருப்பதைப் பற்றித் தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து எந்தச் செய்தியும் இன்றைய ஏடுகளிலே காணப்படவில்லை.
இனியாவது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு காஷ்மீரில் சிக்கியுள்ள ஐந்தாயிரம் தமிழர்களைப் பாதுகாத்து உடனடியாக அவர்கள் தாயகம் திரும்பிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானி, ஜுலை 8ஆம் திகதியன்று, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் பொலிசாருக்கு எதிராகக் கலவரம் நீடித்து வருகிறது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அமர்நாத் யாத்திரைக்காக காஷ்மீர் சென்ற தமிழக பக்தர்கள் 5000 பேர் அங்கு சிக்கித் தவித்து வருவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
கலவரக்காரர்கள் பிடியில் இருந்து இவர்களை மீட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், பால்டால் பகுதி அருகே உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.
அந்த முகாமில் உள்ள கரூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கலவரக் காரர்களிடமிருந்து தப்பித்து உள்ளூர் பொலிஸ் உதவியை நாடியதாகவும், அவர்களும் பாதுகாப்பு அளித்து எல்லைப் பாதுகாப்புப் படை முகாமுக்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதால், தண்ணீர், உணவு., மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென்றும், பெண்களும் முதியவர்களும் கடும் பாதிப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்படுவதாகவும், தங்கள் அனைவரையும் உயிருடன் மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 5000 தமிழர்கள் பற்றி கவலைப்பட தமிழகத்திலே ஒரு அரசு இருக்கிறதா? அந்த அரசு ஏதாவது உருப்படியாகச் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
உடனடியாக அவர்கள் தாயகம் திரும்பிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
ஹே ஹே ஹே தகர தமிழா நாட்டில் பிணம் கூட அறிக்கை எழுதும்
நீ நடிகன்டா
அதை நீ சொல்லாதே மானம்கெட்ட மனிதனே.தமிழ் ஈழத்தில் தமிழர்களை சிங்களம் ராணுவம் தாக்கிய போது எங்கட போன நீ. மானம் கெட்டவனே. திராவிட நாய்களே. தமிழ் நாட்டை விட்டு ஒளிந்து பொங்கல். திராவிட அரசியல் கட்சி மற்றும் காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு என்றும் தோரோகிதன். அதிலும் நடந்து முடிந்த தமிழ் நாடு தேர்தலில் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றிபெற்றுத்தான் என்னால் சகித்து கொள்ள முடியவில்லை.
என் மரியாதை எல்லாம் போய் விட்டது. உன்னால் எவ்வளவோ செய்து இருக்க முடியும்–அறிக்கை மட்டும் …முடியாது என்று தெரியாதா?