இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2,36,000 என உயர்ந்துள்ளதாகவும் இது அடுத்த 10 ஆண்டுகளில் 5.5 லட்சமாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
கடந்த 2015 ஆண்டு முடிய நாட்டில் 2,36,000 லட்சாதிபதிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பாக 1.5 டிரில்லியன் டொலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டின் தனிநபர் சொத்து குறித்த ஆய்வறிக்கையானது, கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்தே உலகின் பல்வேறு நாடுகள் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்து வந்துள்ளது.
ஆனால் இந்தியா மட்டும் சரிவில் சிக்காமல் மிக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. லட்சாதிபதிகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட காலகட்டத்தில் இந்த பட்டியலில் இடம்பெற்ற தனிநபர் ஒருவருக்கு 10 லட்சம் டொலர்கள் அளவுக்கு சொத்து இருப்பதாக தெரிய வந்தது.
இது நாட்டின் வளர்ச்சி விகிதம் சார்ந்தது என கூறும் ஆய்வாளர்கள், இதே காலகட்டத்தில் நாட்டின் பண பரிவர்த்தனை, கட்டுமானப்பணிகள், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியாவின் வளர்ச்சி மெச்சும்படி இருந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
லட்சாதிபதிகளின் வளர்ச்சி விகிதம் இதே நிலையில் நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் தற்போதுள்ள எண்ணிக்கை இருமடங்காகலாம் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
-http://news.lankasri.com

























