103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான வறுமையும் நிழலாக இன்னும் அவரை தொடர்கிறது. சில பலன்களையும் மரங்களால் அடைந்து வந்திருப்பதாக கூறுகிறார்.

கடந்த கால வாழ்க்கை
திம்மக்கா இளம்பெண்ணாக இருந்தபோது ஒரு விவசாயியை திருமணம் செய்துள்ளார். கணவருடைய வருமானம் மிகக்குறைவுதான்.
கணவர் உட்பட அங்கு வசிக்கும் சக கிராமத்தினர் புதுமனைவி வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்ப வாழ்க்கை போன்ற சமூக நெறிகளை பின்பற்றுவதில்லை.
அதற்கு மாறாக, மரக்கன்றுகளை நட்டு, தாவர வளர்ச்சிப் பணியில் முனைப்பு காட்டுகின்றனர். அதையே தங்கள் குழந்தைகள் போல நினைக்கின்றனர்.

பசுமை நேய கிராமம்
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஹுலிக்கல் கிராமம். ஹுலிக்கலுக்கு அருகாமை கிராமமான குடூருக்கு இடைப்பட்ட 4 கி.மீ. தூரத்தில் வெறுமெனே கிடந்த நிலப்பரப்பில் 10 ஒட்டுரக மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம் என்கிறார்.
அவர்களுடைய வறுமை காரணமாக தாவரங்கள் வளர்ப்பதில் பல இன்னல்களை சந்தித்ததாகவும் மேலும், பல மரக்கன்றுகளை நட்டு இந்த பகுதியை அழகுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
இவர் வளர்த்த பல ஆலமரங்கள் மிகப்பெரிதாக அழகும் நிழலும் தந்து பயன்படுகிறது. அதனுடைய பொருளாதார மதிப்பு ரூ.15 லட்சம். அதற்காக, அரசு திம்மக்காவுக்கு சன்றிதழ்களும் வழங்கியுள்ளது.
ஆனால், அவற்றை வைத்து என்ன செய்வது, அதை பாதுகாக்கக் கூட சரியான வீடு வசதி இல்லாமல் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிறார். வீடு சம்பந்தப்பட்ட ரசீதுகளுக்கும் சரியாக பணம் செலுத்தமுடியாமல் அவருக்கு ஓய்வூதியமான ரூ.500 கூட சரியாக கிடைக்கப் பெறாமல் கஷ்டப்படுகிறார்.
சூற்றுச்சூழலில் ஆர்வமுடைய, என்னுடைய பணியால் ஈர்க்கப்பட்ட, ஒரு மகன் கிடைத்தால் தனக்குப் பிறகு, இந்த பணியை தொடர்வான் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார். இந்த நிலையிலும் திம்மக்கா, தனது வறுமை மீது அதிருப்திக்கொண்டாலும் தாவர வளர்ச்சிப் பணி மீது சலிப்பு கொள்ளவில்லை.
நம் காலத்துக்குப் பிறகும் இந்த உலகில் மக்களுக்கு பயனுள்ள எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் அதற்கு பயனுள்ள மரங்களை விட வேறு சிறந்தது எது இருக்க முடியும் என்பது திம்மக்காவின் நம்பிக்கை.
தங்கள் குடும்பம் பிள்ளைகளுக்காக வழ்வது சமுதாய கடமையாக இருந்தாலும் அவர்களுக்கு அதில் ஏனோ நோய்களும் நிம்மதியின்மையுமே நிலவுகிறது. தாவரங்களை பிள்ளையாக வளர்த்த திம்மக்கா நோயில்லாமல் 103 வயதிலும் உழைக்கும் அளவுக்கு இருப்பது, தர்மம் தெரிந்த இயற்கை தந்திருக்கும் குறைவற்ற செல்வமான ஆரோக்கியமே! ஆச்சரியமே!
-http://news.lankasri.com


























