ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

aids-1மராட்டிய மாநிலத்தில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக மந்திரி தீபக் சாவந்த் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்தியாவில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 276 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தேசிய வாத காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் கஜ்பியே நேற்று மேல் சபையில் கேள்வி எழுப்பினார்,மேலும் இவ்வாறு ரத்தம் ஏற்று பணியில் ஈடுபடும் இரத்த வங்கிகள் மீது விசாரணை நடத்தியதுண்டா எனவும் வினாவினார்.

இதற்கு சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார், அதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 182 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கு காரணமான ரத்த வங்கிகளின் தகவல் கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: