எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 77 மீனவர்களில் 43 பேர் திங்கட்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களின் காரணமாக, முதல்வரின் முயற்சிகளின் காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
31.05.202016லிருந்து 15.07.2016வரை தமிழகத்தின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 77 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு 10 கடிதங்களை எழுதியிருக்கிறார். -BBC
மீண்டும் எல்லை கடந்து சென்று சிரமத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.
மன்னன் கட்டளை போட்டு விட்டார் .. கேட்டு கொள்ளுங்க மக்களே !
நல்லதை அறிவுறுத்தினால் நீர் ஏன் படம் எடுக்கிறீர் ராஜ நாகமே? ஆ ..ஆ..
நல்லதை நீர் சொல்வதுதான் ஆச்சரியம் மன்னனே ஈ ஈ ஈ
அப்படியா !!! நாகம் நீர் சொல்லும் பொது யாம் சொல்லக் கூடாதா ?