மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அவருக்கு உருவச்சிலை திறக்கப்படுகிறது.
அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தேசிய நினைவகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக வருவாய்த் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்துடன் தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலமும் கூடுதலாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலை திறப்பு நிகழ்ச்சியும், தேசிய நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இதையொட்டி அவரது நினைவிடத்தில் நேற்று இரவு கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலை நிறுவப்பட்டது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி துறையை சேர்ந்த அதிகாரிகள் நினைவு வளாகத்தில் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சியகம், பார்வையாளர் அரங்கம் போன்றவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவக வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் அஞ்சலி செலுத்துதல், சிலை திறப்பு, தேசிய நினைவக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
-http://news.lankasri.com
நல்ல ஒரு மாமனிதர். உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ஐயா. இளைஞர்களுக்கு நீ ஒரு முன்னுதாரணம் ஐயா. மதம், இனம் இவையெல்லாம் வென்ற ஒரே மனிதன் நீ மட்டும்தான் ஐயா.உங்களை தமிழனாக ஈன்றுடுத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
மனிதருள் மாணிக்கம் திரு அப்துல் கலாம் அவர்கள். அவருக்கு நமது நினைவு அஞ்சலி சமர்ப்பணம் .
நல்ல தமிழர்.